ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகதியாக இந்தியா வந்த பெண் தகவல்.

 ‘இந்தியா என்பது சொர்க்கபுரி' ஆப்கனிலிருந்து அடைக்கலம் தேடி வந்த பெண் செய்தியாளரிடம் தகவல்.


தலிபான்கள் அவரது வீட்டை எரித்து விட்டதாகவும், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதாகவும் ஆப்கனிலிருந்து அகதியாக இந்தியா வந்த அந்நாட்டு பெண் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றிய நிலையில் ஆப்கன் பல நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் காபூலில் மட்டுமே 400 க்கும் மேற்பட்ட  சிக்கியுள்ள நபர்களை அங்கிருந்து இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அவர்களை மீட்க இந்திய விமானப்படையின் சி 17 விமானம் நேற்று முன்தினம் இரவு சென்ற விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்ட  பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூலிலிருந்து இந்தியா வந்த அந்த விமானத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஆப்கான் மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சதியா என்பவர் குடும்பத்தினரும் இந்தியா வந்துள்ளனர்.

அவர்கள் தலிபான் தீவிரவாதிகளுடன் தங்களுக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவத்தை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலிபான்களால்  ஐந்து மணிநேரம் வரை தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது வீட்டை எரித்ததாகவும் கூறினார்.


"ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்ததனால் நான் என் மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். எங்கள் இந்திய சகோதர சகோதரிகள் எங்களை மீட்டுள்ளனர். தலிபான்கள் என் வீட்டை எரித்த நிலையில். பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பில்லை. எங்களுக்குதவிய இந்தியாவுக்கு நன்றி. இந்தியா உண்மையிலேயே சொர்க்கபுரி தான் "என்று கூறினார். தாலிபான்களின் வருகையை சில இடதுசாரிகள் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. இது அவர்களது பழைய அமெரிக்கா எதிர் சோவியத் மன நிலையிலிருந்து வருவது.இப்போது அது அமெரிக்கா எதிர் சீனாவாக மாறியிருக்கிறது என்று மகிழ்கிறார்கள். மேலோட்டமாக அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் சில காரணிகள் இருந்தன.சீனாவுக்கும் புதினின் ரஷ்யாவுக்கும் அதெல்லாம்  கிடையாது.ஆனால் முன்புபோல் ஒரு நாட்டுக்கு பிரச்சினைகளை உருவாக்கி பிறகு தானே  விடுவிக்கிறேன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக சுரண்டிவிட்டு முன்பை விட பெரிய பிரச்சினைகளிடம் அந்த நாட்டை கைவிட்டுவிட்டு  ஓடிப்போவது இம்முறை அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ரஷ்யா ஏற்கனவே அமெரிக்காவில் யார் ஆள்வது என்று தன்னால் தீர்மானிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது.சீனா சோவியத் போன்று ஒரு செயற்கையான கூட்டமைப்பில்லை.அறிவியல்,பொருளாதாரம் போன்ற சகல துறைகளிலும் அதன் பாய்ச்சல் அமெரிக்காவை ஒரு இரண்டாம் நிலை சக்தி ஆக்கிக் கொண்டே வருகிறது. இராணுவ,அரசியல் பலமும் சேரும்போது விரைவில் அமெரிக்கா ஒரு மூன்றாம் நிலை சக்தியாகவும் வீழக் கூடுமோ. என்று மலர் அஞ்சும் நிலையில் இதுதான் அமெரிக்காவின் நிஜமான முகமாகப் பார்க்கப் படுகிறது .சோவியத்தை அழிப்பதற்காக  தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்குவார்கள்.ஆதரிப்பார்கள்.பிறகு தாலிபனை அழிக்கிறேன் என்று கொஞ்ச நாள் நடித்து மறைமுகமாக ஆப்கானிஸ்தானை ஆள்வார்கள்.பிறகு 'இது உங்கள் போர்.நாங்கள் செய்ய முடியாது'என்று ஆப்கானிஸ்தானை அதன் மக்களை இரக்கமின்றி  தாலிபானிடம் விட்டுவிட்டு ஓடுவார்கள்.வியட் நாமில்,ஈராக்கில்,ஈரானிலென்று முன்பும் இதைத்தான் செய்தார்கள்.இது பொதுவான பார்வை.ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானத்தில் டயர்கள் மற்றும் தொங்கி பயணம் மேற்கொள்ள முண்டியடித்த ஆப்கான் மக்கள் நிலை பார்த்தாலே உண்மை புரியும்.கதறி அழும் ஆப்கன் முஸ்லிம் பெண்கள்

சேவ் ரோஹிங்கியா, சேவ் சிரியா என்று பொங்கியவர்கள்,  குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பொங்கிய 

பெண்ணுரிமைப் போராளிகள் எங்கே?

நமது நாட்டின் உள்ளூர் பெண்ணுரிமை பற்றி பேசும் போராளிகளாகக் காட்டிக் கொள்ள முயலும் யாராவது ஆப்கான் பெண்களுக்காக கதறி அழுததை வேதனைப்பட்டுப் பார்த்துண்டா. குறைந்தது எதிர்ப்பாவது தெரிவித்தாங்களா?   இல்லை.

பெண்கள் பாதிக்கப் படுவதைவிட யாரால் பாதிக்கபடுகிறார்கள் என்பதைதான் இவர்கள் பார்ப்பார்கள். அப்படி ஒரு போராளிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்