பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாயாபந்தர் சென்றடைந்தது

பாதுகாப்பு அமைச்சகம் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாயாபந்தர் சென்றடைந்தது
பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடருடன் செல்லும் அந்தமான் நிக்கோபார் தலைமையின் கூட்டுப் படைகளின் மிதிவண்டி சாகச பயணக் குழு, ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாயாபந்தர் சென்றடைந்தது.  நான்கு நாட்களில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். கிஷோரி நகரிலுள்ள அரசு  உயர்நிலைப் பள்ளிக்கு எடுத்துச்செல்லப்பட்ட வெற்றிச் சுடருக்கு மாவட்ட அதிகாரிகள், முன்னாள் ஆயுதப் படை வீரர்கள், பள்ளியின் முதல்வர் ஆகியோர் வரவேற்பளித்தனர். வெற்றிச் சுடரை கௌரவிக்கும் வகையில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவின் வெற்றி குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி சாகச பயணக் குழுவினர், ஒலி ஒளி நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆயுதப் படைகளில் இணைந்து, சாகசம் மற்றும் விளையாட்டை தங்களது வாழ்வின் முக்கிய அங்கமாகக் கொள்ளுமாறு அவர்கள் குழந்தைகளுக்கு ஊக்கமளித்தனர். முன்னாள் படை வீரர்கள், பள்ளி அதிகாரிகள் மற்றும் குழந்தைகளுக்கு, நினைவுப் பரிசுகளையும் குழுவினர் விநியோகித்தனர்.

இந்த மிதிவண்டி சாகசப் பயணம் இறுதியாக ஆகஸ்ட் 9ஆம் தேதி திக்லிபூரில் உள்ள விளையாட்டு மைதானத்தைச் சென்றடையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்