ரூ 11.30 கோடியில் நிறுவப்பட்ட மருத்துவமனையை தகவல் தொழில்நுட்பம் இணை அமைச்சர் திறந்து வைத்தார்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ரூ 11.30 கோடி செலவில் நிறுவப்பட்ட மருத்துவமனையை தகவல் தொழில்நுட்பம் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் திறந்து வைத்தார்


மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், ஸ்ரீநகர், புத்காம் மற்றும் பாரமுல்லாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக ஜம்மு & காஷ்மீர் சென்றார். 

பயணத்தின் போது, புட்காம் மாவட்டத்தில் உள்கட்டமைப்புத் திட்டங்களை திரு சந்திரசேகர் தொடங்கி வைத்தார், மாணவர்கள், பழங்குடியினர் உட்பட பலரைச் சந்தித்த அவர், ரூ 790 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு கூட்டங்களை நடத்தினார். ரூ 11.30 கோடி செலவில் நிறுவப்பட்ட துணை மாவட்ட மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார்.


மாணவர்கள், விவசாயிகள், தோட்டக்கலை வல்லுநர்கள், பழங்குடியினர், திறன் பயிற்சியாளர்கள், வர்த்தகர்கள் கூட்டமைப்பு, பழம் வளர்ப்போர் சங்கம், இளைஞர் கழகங்கள் உள்ளிட்ட பலரை புட்காம் மாவட்டத்தில் அவர் சந்தித்தார். அவர்களுடைய எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் அறிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுடன் அவர் உரையாடினார்.


பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய அமைச்சர், “தில்லி உங்கள் இதயத்துக்கு அருகில் எனும் பிரதமரின் அழைப்பு ஜம்மு & காஷ்மீர் மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஜம்மு & காஷ்மீர் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு ஒரு பெரிய அரசு மக்கள் தொடர்பு திட்டத்திற்கு வழிவகுத்தது", என்றார்

2019 அக்டோபர்-க்கு முன்பு ஜம்மு & காஷ்மீருக்காக ஒரு அமைச்சர் மட்டுமே பணியாற்றினார், இப்போது 77 அமைச்சர்கள் ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு சேவை செய்ய 24 மணிநேரமும் வேலை செய்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்