கோவாவில் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம், பிரதமர் செப்டம்பர் 18ம் தேதி கலந்துரையாடுகிறார்

பிரதமர் அலுவலகம் கோவாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம், பிரதமர் செப்டம்பர் 18ம் தேதி கலந்துரையாடுகிறார்


கோவாவில்  நடுத்தர வயது மக்கள் 100 சதவீதம் பேருக்கு கொவிட் முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்தது பற்றி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

தொடர்ச்சியான திகா உத்சவ்கள் மூலம் மக்களை திரட்டியது, அடிதட்டு மக்களை சென்றடைந்தது, பணிசெய்யும் இடங்களில், முதியோர் இல்லங்களில், மாற்றுத்திறனாளிகள் போன்ற முன்னுரிமை பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தியது, மற்றவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் தவறான எண்ணங்களை போக்கியது உட்பட மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளால் அனைவருக்கும் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்த முடிந்தது.

தடுப்பூசி போடும் பணி விரைவாக நடப்பதை உறுதி செய்ய, டவ்தே புயல் போன்ற சவால்களையும்  மாநில அரசு சமாளித்தது . 

இந்நிகழ்ச்சியில் கோவா முதல்வர் கலந்து கொள்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா