ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல். பயணி கைது

ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல். பயணி கைது


உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் 17.09.2021 அன்று இரவு 9 மணிக்கு ஏர் அரேபியா  ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் ரூ. 16,30,590 மதிப்பில் 310 கிராம் எடையிலான தங்கத்தை தமது உடலில் அவர் மறைத்து எடுத்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, அவர் கொண்டு வந்திருந்த பையில் ரூ. 6,00,200 மதிப்பிலான மின்னணு பொருட்களையும் முறைகேடாக மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மொத்தம் ரூ. 22.31 லட்சம் மதிப்பில் சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் சுங்கச் சட்டம், 1962 -ன் கீழ் கைப்பற்றப்பட்டதோடு, பயணியும் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை  முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா