எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது63). கடந்த ஒரு வாரம் முன்பு வயிறு வலி காரணமாக பெருங்குடியிலுள்ள தனியார் ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இன்று காலை சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை இடைக்காலத் தமிழக முதலமைச்சராகவும், 2017 முதல் 2021 வரை தமிழக துணை முதலமைச்சாரகவும் பொறுப்பு வகித்தவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் இரவீந்திரநாத் குமார், 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியிலிருந்து, எம்.பி.யாக தேர்வானார்.
இவர் அரசியலில் டி.டி.வி.தினகரனால் முதலில் அடையாளம் காணப்பட்டு அரசியலில் முதலமைச்சர் பதவிவரை சென்றவர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி தங்களுக்கு வழிகாட்டியவரை மறக்காம தன் கையில் டிடிவி என பச்சை குத்தி தன் விசுவாசத்தை காட்டியவராவார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு சென்னையிலுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு
தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மனைவி மறைவால் உடைந்து போன ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.அதில் குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிக்கலா நடராஜன் உள்ளிட்ட பலர்.நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்