சங்கம் வளர்க்கும் சமுதாய ஒருங்கிணைப்புக்கு பழனி சமத்துவ நாய(க்)கர் நியமனம்

புதிய மதுரையை பொலிவுடன் நாயக்கர் மன்னர்கள் அமைத்தனர் . மதுரை மீனாட்சி கோவிலில் பூஜைகள் சரியாக நடக்கப்பட்டன . சோழர்களுக்கும் , பாண்டிய சிற்றரசுகளுக்கும் சண்டை வந்ததால் , பாண்டிய மன்னர் சோழனை அடக்க விஜயநகரில் உதவியை நாடினார்

ஸ்ரீ கிருஷ்ண தேவராயரும் தனது தளபதியான நாகம நாயக்கரை மதுரைக்கு அனுப்பினார் . நாகமர் வீர சோழனை விரட்டி அடித்து தன்னையே அரசனாக முடி சூடி கொண்டார் . இதனை அறிந்து ராயர் கோபப்பட்டு நாகம நாயக்கரை சிறையிலிடுங்கள் என்று உத்தரவிட்டார் ஆனால் எந்த தளபதிகளும் அதற்கு முன்வரவில்லை , நாகம நாயக்கர் அனைவருக்கும் உறவினர் மேலும் அவருடன் போர் புரிவதை எந்த தளபதிகளும் விரும்பாமல் இருந்தனர் . நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் தான் மதுரைக்கு சென்று தந்தையை வென்று வருகிறேன் என்று கூறினார். 

பெரும்படையைக் கொண்டு மதுரைக்கு சென்றார் இந்த படையில் கம்பளத்தார்களும் , பலிஜர்களும் , சக்கிலியர்களும் மட்டுமே இருந்தனர் , ஏற்கனவே நாகம நாயக்கர் படையிலும் மேல்கூறிய சமுக மக்களே இருந்தனர் , திருச்சியில் இருபடைகளும் தாவாரம் போட்டுள்ளனர் , இரு வீரர்களுக்கும் சண்டைபோடுவதில் எள்ளளவும் விருப்பம் இல்லை காரணம் இருபடைகளிலும் இருப்பவர்கள் பெரும்பாலும் ஊர்க்கார்கள், உறவுக்காரர்கள் , சீமைக்காரர்கள் என்பதால் போர் எதுவும் இல்லாமலேயே நாகம நாயக்கர் விஸ்வநாத நாயக்கரிடம் அடிபணிந்தார் 

ராயர் மகிழ்ந்து உனக்கு என்ன வேண்டும் என்று விசுவநாதரிடம் கேட்டார் . அவரோ எனது தந்தையை விடுதலை செய்தாலே போதும் என்றுக்கேட்டுக்கொண்டார் . அதன்படியே ராயரும் செய்து இனி மதுரைக்கு விஸ்வநாத நாயக்கரே அரசர் என்பதை பிரகடனம் செய்தார்.        வீரமங்கை வேலுநாச்சியாருகக்கு ஓர் வளர்ப்பு தந்தையாக அடைக்கலம் தந்த கோபால நாயக்கர்
தமிழ்நாட்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடி. ஆங்கிலேயக் கிழக்கிந்தியரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்து போரிட்ட மன்னர்.  திண்டுக்கல்-பழநிக்கு நடுவேயுள்ள விருப்பாச்சியை நாயக்கர்கள் பாளையம் என்ற முறையில் ஆட்சி செய்த குறுநில மன்னர். ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டிப் புரட்சி செய்த காரணத்தால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாச்சியில் அமைந்துள்ளது.விருப்பாச்சி பாளையக்காரராக விளங்கிய கோபாலநாயக்கர் கண்காணிப்பில்,
புரட்சிப்படையினர் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர். சிவகங்கை சமஸ்தானத்தின் மருதுபாண்டியருடனும் கன்னட மராட்டிய பகுதி மன்னரான துந்தாசிவாக்குடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்பை உருவாக்கினார். இது தீபகற்ப கூட்டமைப்பு என்றழைக்கப்பட்டது, தீரர் மருதுபாண்டியர்கள் தலைமையில் சிவகங்கைச் சீமையும், அதேபோல் கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டமைப்புடன் சேர்ந்து வலுப்பெற்றன. இது வரலாற்றுப் பதிவு. .நாயுடு" அடைமொழி பயன்படுத்தும் ஜாதிகளான, பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, ஈடிகா நாயுடு, கொல்லா, கலிங்கி, காப்பு, முத்திரியர், மற்றும் வேலம என்பனவாகும். மேலும் Thurston கூற்றுப்படி "நாயுடு" எனும் சொல் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் எனவும் அழைக்கப்படும். சிறப்பு வாய்ந்த 

தமிழ்நாடு நாயுடு பேரவையின் செயல் தலைவர் கவிதாலயா சரவணன் நாயுடு, மாநிலத் துணைத் தலைவர்கள் S.T இலஜபதி நாயுடு, ரோவர் K வரதராஜன் நாயுடு, A இரவிச்சந்திரபாபு நாயுடு,. லட்சுமிபதி நாயுடு, மாநிலச் செயலாளர் அரிமா. கே. செல்வராஜ் நாயுடு, மாநில இணைச் செயலாளர் N.S செல்வராஜ் நாயுடு,  மாநில அமைப்பு செயலாளர் ஏ.ஆர்.கே. பிரசன்னா பாண்டியன் நாயுடு மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்  பாபு ராமச்சந்திரன் நாயுடு ஆகியோர் ஏகோபித்த  ஆதரவின் படி  பழனி N பத்மநாபன் நாயுடு, தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நிறுவனத் தலைவர் முனைவர் ஜி. காமாட்சி நாயுடு  நியமித்துள்ளார் என்ற தகவல் தெரிவித்து அரிமா கே. செல்வராஜ் நாயுடு,  மாநிலச் செயலாளர், தமிழ்நாடு நாயுடு பேரவை. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 ஆண்டு காலம் தென்னிந்தியாவில் கோலோச்சிய சமுதாயம் ஒருங்கிணைப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல அதை சரியாக செய்யும் பொருட்டு பழனி நா.பத்மநாபன் நாயுடு  நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா