அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது பாமக உண்மை காரணமென்ன

உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடுமென அதன் தலைவர்  அறிவித்ததன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறி தனித்துப் போட்டியிடும் நிலையிலுள்ளது.


தமிழகத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானவை தமிழகத்தில் வடக்குப் பகுதியிலுள்ள மாவட்டங்களாகும்..

ஜாதிச் செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் பா.ம.க.வின் நிலைப்பாடு  எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. அதிமுக-பாஜக கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் அந்த அணிக்கு வாய்ப்பு உண்டு எனக் கணிக்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சி திமுக இருப்பதால் அதன் கூட்டணியும் முழு பலத்தைக் காட்டுமென் நினைத்த நிலையில் பா.ம.க.  அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படுகிறது என்றும் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக தேர்தல் கள வரலாற்றில் பா.ம.க. தனித்துப் போட்டியிட தொடங்கி பின்னர் அவர்கள் வாக்கு வங்கியில் மாற்றமோ  முன்னேற்றமோ இல்லை. அதற்கு அதன் கொள்கை மாறுபட்ட காரணமும் உண்டு. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்கிற வகையில் தான் பா.ம.க. செயல்படுகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் இப்போதைய தனித்துப் போட்டி அறிவிப்பும் பார்க்கப்படுகிறது.


முதலில் தனித்துப் போட்டி வன்னியர்கள் சங்கமாக இருந்து1989 ஆம் ஆண்டு பா.ம.க.வாக  தொடங்கப்பட்டது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 16 லட்சம் வாக்குகளைப் பெற்ற பின்னர் அனைத்துக் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1991 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும்  தனித்தே போட்டியிட்டு பன்ருட்டி  தொகுதியில் யானை சின்னத்தில் வென்றது. அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.வாக பண்ருட்டி ராமச்சந்திரன் யானை மீது ஊர்வலமாக சட்டசபைக்குள் நுழைந்தார்.1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக, சி.பி.எம், வாழப்பாடியாரின்  காங்கிரஸ் என மூன்றாவது அணிக்கு முயற்சித்தது. அதில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களாக பேராசிரியர் தீரன் பென்னாகரம் மணி, எடப்பாடி கணேசன்.தாரமங்கலம் கோவிந்தன். உள்ளிட்டவர்களை உறுப்பினராகப் பெற்ற நிலையில் 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக-பாஜக அணியில் பா.ம.க. இடம்பெற்றது வென்று வாஜ்பாய் அரசை கவிழ்ந்த நிலையில் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற  தேர்தலில் முதல் முறையாக திமுகவுடன் கூட்டனி அமைத்தது பா.ம.க. 2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.  இந்தக் கூட்டணியிலும் நீடிக்காமல் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன் டாக்டர் ராமதாஸ் நடத்திய மோதல்.


இதையடுத்து 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் தேர்தல், 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து வந்த பா.ம.க. 2009 ஆம் ஆண்டு  தேர்தலில் அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் அமைத்த கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்தது. 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போது மீண்டும் திமுக கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போனது. 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி முழக்கத்துடன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளரென அறிவித்துத் தனித்துப் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்ததுடன் தென் மாவட்டங்களில் நோட்டாவிடம் தோற்ற கதையும் உண்டு.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்   இடம்பெற்ற பா.ம.க. ஐந்து எம்.எல்.ஏக்களையும் பெற்றது அந்தக் கட்சி. இருந்த போதும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என அண்மையில் பிரகடனம் செய்திருந்த டாக்டர் ராமதாஸ். அப்போதே. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் அந்த கட்சியுடன் நெருக்கம் காட்டி வந்ததும்  பா.ம.க. இதனால் திமுக அணிக்குச் செல்லக் கூடுமெனக் கூறப்பட்ட நிலையில்  அதிமுக- பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது அக்கட்சி. அதன்பின் உள்ள காரணங்கள் பல என்றாலும் நாமறிந்த வரை உண்மை வேறுவிதமாகும். உடைந்தது அதிமுக கூட்டணி

பாமக தனித்துப் போட்டி. என பாமக அதிமுக வுடனான கூட்டணியை மட்டும் முறிக்கவில்லை அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்தே தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர் இதன் பின்னனி ரொம்ப சுலபமாக கூறலாம். டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதான மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவக் கல்லூரி களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கின் முக்கிய சாட்சிகள் மூன்று பேர் ஒருவர் ஷீலா மதானி மற்றொருவர் துவாரகேஷ் மடோன்கர் பிரிதொருவர் நிதிஷ் பட்டேல்.... இதில் நிதிஷ் படேல் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுல சேர்ந்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார், ஷீலாவோ பூனேயில் கடந்த வாரம் கொரோனாவால் மரணமடைந்தார், துவாரகேஷ் என்பவர் பட்நவீஸோட ஆளு இப்போ உத்தவ் தாக்ரே விடம் சரண்டர் ஆக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் சாட்சியே இல்லை என்ற நிலையில் தற்போது ஒரு பழமொழி புலிவாலைப் பிடித்த நாயர் கதை போல் உண்டு  மற்றொரு தகவலாக 'புலியோட கழுத்துல காலை வெச்சிட்டே உன் கால் புலியோட கால்ல இருந்து விடுபடுகிற நேரம் உனக்கு சங்கு தான்' என்பது புதுமொழி இப்போ பாஜக விடமிருந்து பாமக விலகிவிட்டார்கள்... ஆக இனிமேல் தான் நார்த் தமிழ்நாட்டுல பாமக வின் ஆட்டம் ஆரம்பம். நேத்தே தர்மபுரி பாஜக ஆஃபிஸ் க்கு பக்கத்துலயே பீப் ப்ரை கடை போட்டுட்டாங்கனு தகவல் எந்த வன்னியர் சமுதாயம் இருக்குனு ஓவரா ஆட்டம் போட்ட வட தமிழக சங்கிகளை வன்னியர்கள் பொளந்து கட்டுவாங்க இனி.... ஏன்னா புலியோட கழுத்துல இருந்து பாஜக கால எடுத்துடுச்சி.. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினருடன் பாஜக கூட்டணி இப்போ அது  9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்ல விழுப்புரத்துல  பழனிசாமியின் அதிமுக வாங்கப் போகும் வாக்கு வங்கி நோட்டாவுடன் போட்டியிட்டு வரலாறு பேசும் நிலை தான் போங்கோ....

மக்களை குழப்புவதற்காகவும் மூன்றாவதாக ஒரு அணி உருவாக வாய்ப்பினைத் தரக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

முட்டுக் கொடுத்த கட்டை விலகியது. இது அதிமுக கூட்டணியில் அவர்களின் வாழ்வா சாவா போராட்டம். நான்காண்டுகளாகத்தன்னை  ஜெயலலிதா எம்ஜிஆரோடு ஒப்பிட்டு கற்பனை விடை காணும் நாள் விரைவில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா