புதிய இதழ் மாலைத் தந்தி நாளிதழ் அறிமுக வெளியிட்டு விழா

சிவகங்கை நகர் அரண்மனை வாயில் அருகிலுள்ள மலைராம் மினிஹாலில் புதிய இதழாக வெளிவர உள்ள மாலை தந்தி என்ற நாளிதழ் அறிமுக வெளியிட்டு விழா


செப்டம்பர் மாதம் 24.ஆம் தேதி  மாலை 6 மணியளவில் மாலைத் தந்தி வெளியீட்டாளர் கே.பொன்ராஜ்  தலைமையில் . செய்தி ஆசிரியர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த விழா நிகழ்வில்  முன்னால் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவரும் சேவாஜமாஜம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொறுப்பாளராகவும் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான அருள்நிதி புலவர் சொ பகீரதநாச்சியப்பன்  மற்றும் அதன் வெளீயீட்டாளரும்,ஆசிரியரும், உரிமையாளருமான கே.பொன்ராஜ்  ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதன் தலைமை செய்தியாசிரியர் சுப்பிரமணியன் முதல் பிரதியை வெளியிட்டார்  சிவகங்கை நகரில் அச்சாகி மாநிலம் முழுவதும்  மாலை தந்தி  வெளிவரும்  இதழ் அறிமுக விழா நிகழ்வுகளில் தினசரி மற்றும் வார, மாத இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் செய்தியாளர்கள் சம்மேளனம் தலைவர் நேமத்தன்பட்டி சீனிவாசன்,  மதுரை குரல் ஆசிரியர், பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர், மற்றும் அனில்குமார், தினத்ந்தி.மற்றும் சன் தொலைக்காட்சி செய்தியாளர்,  லோட்டஸ் குழுமத்தின் பணியாளர் சண்முகம் , சங்கர் நிழல் J. சுரேஸ் கேப்டன் டிவி,  மாலைமுரசு, ,மற்றும் பல செய்தியாளர்கள் புகைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் மாலைத் தந்தி நாளிதழ் சார்பில் வரவேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா