தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என சட்டம் வந்தால் தான் ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கனவு பழிக்கும்.

தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என சட்டம் வந்தால்  தான் ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கனவு பழிக்கும். நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு அரசாங்கமே செலவு செய்து படிக்கவும் வைக்கலாம்.


குறிப்பாக பல லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் மூலம் சில கோச்சிங் சென்டர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்க்கின்றன. பண வசதியுள்ள மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு கோச்சிங் சென்டர்களில் பயில்கிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் பெற்ற மாணவர்களில் சிலரை, டில்லியிலுள்ள இரண்டு கோச்சிங் சென்டர்கள் சொந்தம் கொண்டாடி விளம்பரப்படுத்தியுள்ள நிலையில். கோச்சிங் சென்டர்களிடமிருந்து சிலருக்கு நன்கொடைகளும் செல்வதால் தகவல்  வருகின்றன.இதிலிருந்து புரிந்துகொள்ளலாம் எதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதென்று. இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் பாலிடெக்னிக், பி.ஏ., பி.எஸ்சி உள்ளிட்ட அனைத்துப் படிப்புளுக்கும் நீட் தேர்வு கட்டாயமென சொல்லப்பட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்தை இருட்டுக்குள் தள்ளுவதாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரும் தொகையைச் செலவு செய்து, கோச்சிங் சென்டர்களில் பயின்றால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் தற்போது ஊருக்கு ஊர் ஆயிரக்கணக்கான கோச்சிங் சென்டர்கள் உருவெடுத்துள்ளது. மக்களின் பணம் கோடிக்கணக்காகக் கொள்ளையடிக்கப்படும்.     நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களின் எதிர்காலம் பள்ளிப் படிப்போடு பாதியிலேயே நின்று போகிறது ஆனால் பணவசதி படைத்த சேவை இல்லாத மருத்துவம் பார்த்து பல கோடியை வாரிப்போட்ட மருத்துவர்கள் மகன் பேரன் என குடும்ப உறுப்பினர்கள் எல்லாம். மருத்துவராக்க முடியும் ஆனால் ஒரு கிராமத்தில் விவசாயக் கூலி மகன் நிலை மருத்துவக்கல்லூரி கல்விக் கனவு  நீட் தேர்வு எப்படி கலைந்து போகிறது என்பதை உணர்த்த ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.இதுவே சாமானிய நடுத்தர வர்க்கம் சார்ந்த மக்கள் இந்த நீட் தேர்வு எதிர்க்கும் காரணமாக அமைகிறது. மக்கள் ஏன் தமிழகத்தில் விழிப்புணர்வு கொண்டு எதிர்கொள்வதற்கு இதுவே முக்கிய காரணம். இதை பி ஜே பி புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மக்கள் அக் கட்சியை சுத்தமாக ஆதரவு இல்லை என்ற நிலை 2018 ஆம் ஆண்டு  நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா,  இவர் 12 ஆம் வகுப்பு 2016 ஆம் ஆண்டு முடித்தார், இரண்டு ஆண்டுகளாக வடபழனி ஆகாஷ் நீட் பயிற்சி வகுப்பில் படித்துவந்தார், முதல் ஆண்டு 6 லட்சம் அடுத்த ஆண்டு 6 லட்சம் இவரது தாய் தந்தை இருவருமே மருத்துவர்கள்.

இவருக்காகவும் இவருடன் படித்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரின் உறவினர் மகளுக்காகவும் ஹைதராபாத்தில் இருந்து புரோமெட்ரின் கன்சல்டன் உறுப்பினர்கள் வந்து பாடம் எடுத்தனர், இந்த புரோமெட்ரிக் தான் நீட் தேர்விற்கான கேள்வித்தாள் தயார் செய்கிறது. 


அவர்கள் வாரம் மூன்றுநாள் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி பாடம் எடுத்துச் செல்வார்கள். இவர்கள் தங்க வந்து செல்வதற்கான கட்டணமும் இந்த இரண்டு மாணவிகளிடமிருந்துதான் வசூலிக்கப் பட்டது, அதாவது ஒரு மாணவி  குறைந்த பட்சம் 25 லட்சம் வரை செலவழித்து நீட் தேர்வு எழுதியுள்ளனர் தேர்வானார்.   இந்த நிலை சாமானிய மக்களால் முடியாது என்பதே நீட் தேர்வு குறித்த ஆய்வுகள் செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் தலைமையிலான குழு அறிக்கையாக வந்த நிலையில் தமிழ்நாடு அரசின் முயற்சி பலன் தந்தால் நல்லது இல்லை வீட்டிற்கு ஒருவர் மட்டுமே மருத்துவம் படிக்க சட்டம் இதுவே தீர்வாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா