முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரிகால் சோழப் பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. என்னும் தற்காலக் கோவில் வெண்ணி !

கரிகால் சோழப் பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. என்னும் தற்காலக் கோவில் வெண்ணி !. நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம்.


கோவில் கல்வெட்டில்,

‘நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய

ஓலோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’

என்று கல்வெட்டு இருக்கிறது.


அதுதான் இன்றைக்கு பிரகதீக்ஷ்வரர் ஆலயத்தில் காணப்படுகிறது .      கோயில் வெண்ணி  தஞ்சாவூர் திருவாரூர் சாலையில் நீடாமங்கலத்துக்கு முன்னே இருக்கின்ற சிற்றூர் கோயில் வெண்ணி. சங்க காலத்தில் தமிழ் சரித்திரம் அறிந்த முதற்போர் (அக்காலத்தில்  வெண்ணிப்பரந்தலை என்று அழைக்கப்பட்டது) இங்குதான் நடைபெற்றது. கரிகால் பெருவளத்தான் என்று அறியப்படும்


திருமாவளவனுக்கும் அவனுடைய தாயாதியருக்கும் இடையில் நடந்த இந்தப்போரைப் பற்றி பல்வேறு சங்கப்பாடல்களில் காணப்படுகிறது. முக்கியமாக பட்டினப்பாலை

பல்ஒளியர் பணிபு ஒடுங்க

தொல் அருவாளர் தொழில் கேட்ப

வடவர் வாடக் குடவர் கூம்பத்

தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்

மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்

மாத்தானை மற மொய்ப்பின்

செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்

புன்பொதுவர் வழி பொன்ற

இருங்கோவேள் மருங்கு சாயக்


என்று இருங்கோவேளையும் அவனுக்கு துணை வந்த பாண்டியனையும் எவ்வாறு திருமாவளவன் வெற்றி கொண்டான் என்று விவரிக்கிறது. ஒரு பெரும் படையை இளமையிலேயே பெரு வெற்றி கொண்டான் கரிகாலன் என்று போற்றுகின்றனர் சங்க காலப் புலவர்கள்.          சோழநாட்டின் மீது பாண்டியரும் சேரரும் படையெடுத்தபோது நீடாமங்கலம் அருகே உள்ள வெண்ணிப்பரந்தலை என்ற இடத்தில் 15 வயது இளம் கரிகாலன் அவர்களை எதிர்த்துப் போர் புரிந்து வென்றான். அந்த வெற்றியின் நினைவாக மக்களுக்குப் பயன்தரும் செயல்  செய்ய நினைத்தான்.


காவிரியாற்றின் பகுதிக்கு வந்தவுடன் பல்வேறு பிரிவுகளாக ஓடும். வெவ்வேறு திசைகளில் ஓடும். அதை ஒழுங்குபடுத்துவதற்காக – கொள்ளிடம் பகுதியில் ஓர் அணை எழுப்பினான். இப்போது வெண்ணாறு என்ற பெயரில் ஓடிய காவிரியின் ஒரு பிரிவுக்குக் கரை எழுப்பி, அதில் நிரந்தரமாகக் காவிரியை ஓடச் செய்தான். அந்தப் புதிய ஆற்றிற்கு வெண்ணிப்போர் வெற்றியின் அடையாளமாக வெண்ணியாறு என்று பெயர் சூட்டியது தான் தற்போது வெண்ணாறு.


நேரடி விதைப்பு மட்டுமின்றி, நாற்றுப்போட்டு நெல் நடும் பழக்கம் 2,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இது சிலப்பதிகாரத்தில் வருகிறது. இப்போது தண்ணீரை ஆற்றிலிருந்தோ, வாய்க்காலில் இருந்தோ திறந்துவிட மூடித் திறக்கும் ஷட்டர்கள் இருக்கின்றன. இந்த ஷட்டர்தான் மதகு. மதகு என்ற வேளாண் பொறியியல் சொல் சோழ நாட்டில் பயன்படுத்தப்பட்டதை சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.


பிற்காலத்தில் இராசராசன் பெற்ற வெற்றிகளுக்கு அடையாளமாக “உய்யக்கொண்டான்” என்ற கிளை ஆற்றைக் காவிரியிலிருந்து வெட்டினான். “உய்யக்கொண்டான்” என்பது சான்றோர்கள் இராசராசனுக்கு வழங்கிய பட்டங்களில் ஒன்று. அப்பெயரை மக்களுக்குப் பயன்படும் புதிய ஆற்றுக்குச் சூட்டினான்.


திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெட்டைவாய்த்தலையில் காவிரியில் பிரிகிறது உய்யக்கொண்டான். தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆவாரம்பட்டியில் அந்த ஆறு முடிவடைகிறது. வழி நெடுக ஏரிகளுக்குப் பாசனம் தந்து நிறைவடைகிறது.


உய்யக்கொண்டான் ஆற்றுக்காகக் காவிரிக் கரையில் வெட்டப்பட்ட இடம் வெட்டு வாய்த்தலை என்று அழைக்கப்பட்டது தான் பின்னர் பெட்டவாய்த்தலையாகத்  திரிந்துள்ளது.    முற்காலச் சோழர்களில் முக்கிய மன்னர் இரண்டாம் கரிகால் சோழர் வட இந்திய மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென்இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னி மகன் மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், என்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சிபுரம் முதல் நாகப்பட்டினம் வரை பேரரசாக மாற்றிய பெருமைக்குரிய மன்னர் கரிகாலன்


.

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதாக வரும் பொருநர் ஆற்றுப்படை சோழ மன்னர் கரிகால் வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பொருநர் ஆற்றுப்படையை இயற்றினார். பொருநர் ஆற்றுப்படை தவிர பட்டினப்பாலை, அகநானுறு மற்றும் புறநானுறு நூல்களிலும் கரிகால சோழன் பெயருள்ளது.


சங்ககால போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால் சோழனை எளிதாக போரில் வென்றிடலாம் என்று எண்ணி போர் தொடுத்து வந்த அத்துனை பேரையும் அவர்கள் பெரும் படையையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை சுடினார். இப்போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு துளைத்த நிகழ்வு குறித்த புறநானுற்றுப் பாடல்


“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப

இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,

சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,

புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்

வாள் வடக்கிருந்தனன்…..”


(புறம்- 65)              தமிழ் நாட்டையும் தற்போது கேரளா, கர்நாடகா,ஆந்திராவின்  கால்வாசி பகுதிகளும் ஆண்ட  சேர,சோழ, பாண்டிய, பல்லவர்களும் தலைநகராக்கி ஆண்ட பகுதிகளை  பள்ளிகளில் படித்திருக்கும் தலைமுறை. அதன் பின்னர் செவிவழி கேட்ட தலைமுறை பாண்டியர்களின் வரலாற்றைப் பார்த்தால், தமிழிலக்கியங்களில்  அவர்களில் முற்கால பாண்டியர்  இரண்டு தலைநகர்களில் முதலில் ஆட்சி செய்து அந்த நகரங்கள் கடல் அழிவு காரணமாக அழிந்தபின் கூடல்நகரெனும் மதுரையைத் தலைநகராகக் கொண்டனர் எனத் தெரிவிக்கின்றன. எது எப்படியோ இடைக்காலப் பாண்டியர்கள் காலத்திலிருந்து மதுரையே பாண்டியர்களின் தலைநகராக இருந்து வருகிறது. அதில் பிற்காலப் பாண்டியர்களில் ஒரே தந்தைக்கும் இருவேறு தாய்களுக்கும் மகனான வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனுடன் முடிவுக்கு வந்தது.


பல்லவர்களைப் பொறுத்தவரை காஞ்சிபுரமும் கடல் மல்லை எனும் மாமல்லபுரமும் தான் அவர்களின் ஆட்சி செய்தவரைக்கும் தலைநகர். காஞ்சிபுரத்திற்கு முன் அவர்களின் வரலாறு அதிகமாக அறியப்படாவிடினும் அவர்கள் ஒரு பேரரசாக இருந்தபோது அவர்களின் தலைநகர் காஞ்சிபுரம் தான்.

ஒரு நீண்ட வரலாற்றை உடைய பாண்டியர்களின் தலைநகர் மாறாமல் இருந்த போது, சோழர்கள் அடிக்கடி தங்கள் தலைநகரை மாற்றிகொண்டே இருந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பது ஒரு புதிர் தான். முதலில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் விஜயாலயன் காலத்தில் முதலில் தஞ்சையிலும் பின் பழையாறைக்கும் தங்கள் தலைநகரை மாற்றிகொண்டனர். இங்கு குறிப்பிடப்படும் பழையாறை என்பது எந்த ஊர் என்பதில் சற்றுக்குழப்பம் இருந்தது. ஒருமுகமாக இப்போது பல வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் இடம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீச்வரமும் அதைச் சுற்றியுள்ள சில ஊர்களும் தான் பழையாறை என்பது. இந்த ஊரிலிருந்து மீண்டும் தஞ்சைக்கு பிரதானத் தலைநகர் அந்தஸ்து முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் ஏற்பட்டது. ஆயினும் இராஜராஜன் புதல்வனான இராஜேந்திரன் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றினான். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சிதம்பரமும் சில காலம் தலைநகராக இருந்தது.

தலைநகர் விஷயத்தில் பெரும் குழப்பத்துக்கு ஆளானது சேரர்களின் தலைநகர் தான். வரலாற்றில் வஞ்சி என்று அழைக்கப்படும் இந்த ஊரின் தற்போதைய இருப்பிடம் என்ன என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவி வந்தன. ஒரு சிலர் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள கருவூர் தான் சேரர்களின் தலைநகர் என்று குறிப்பிட்டு வந்தனர். சோழர்களின் தலைநகரான உறையூருக்கு இவ்வளவு அருகில் சேரர்களின் தலைநகர் இருக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினர் பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இன்னும் சிலர் கேரளாவில் உள்ள திருவஞ்சைக்குளமே வஞ்சிமாநகர் என்று கருதுகின்றனர். அதுபோலவே உண்மையுமாகும்.சோழ தேசத்தின் மீது சேரன் படையெடுத்திருக்கிறான் என்ற செய்தி எங்கும் பரவியது. சேரன் தன் நாட்டிலிருந்து படையெடுக்காமல் பாண்டிய நாட்டின் உப நாடான பொன்னன் அமரன் ஆட்சி செய்த இருநாட்டின் எல்லை பொன் நாடு எனும் பொன்னமராவதி வழியே படையைச் செலுத்தி, அந்த நாட்டுப் படையையும் வேளிர் படையையும் சேர்த்துக்கொண்டு தென்திசையிலிருந்து படையெடுத்தான். அப்போது கேரள சிங்கள வளநாடு எனும் சேர் நாட்டிலிருந்து பாண்டிய மன்னர் அழைப்பு காரணமாக வந்த வீரர்கள் தான் பொன்னமராவதி அரசன் அமரனைக் கொன்று பாண்டிய நாட்டின் எல்லையை மீட்டதன் பரிசாக ஐவருக்கும் வந்த பகுதி தான் ஐந்து நிலை நாடு. சோழ நாட்டின் தென்பகுதிகளைக் கைபபற்றிக்கொண்டு வடக்கு நோக்கிப் படையைச் செலுத்தினான் பாண்டியன் இப்படி ஒரு நிலை வரும் என்பதை முன்பே சிந்தித்திருந்த கரிகால் வளவன் ஏற்ற வகையில் படையைத்


திரட்டியிருந்தான். அந்தப் படையுடன் காவிரிப்பூம்பட்டினம் எனும் தற்போது பூம்புகாரிலிருந்து புறப்பட்டான். பகைப்படை காவிரிப்பூம்பட்டினத்தை முற்றுகையிடும் வரையில் காக்கக்கூடாதென்று வழியில் யுத்தம் செய்ய வேகமாகச் சென்றான். அவனுடைய மன வலியைக்கண்டு படைத்தலைவர்கள் வியந்தனர். படை வீரர்களுக்கு மிக்க ஊக்கம் உண்டாகி விட்டது. அங்கங்கே உடல்வலிமை பெற்ற மக்கள் தாமே வந்து படையில் வலியச் சேர்ந்தனர். கரிகாலன் தனது தாய் வழி ஊரான வென்னிப்பரந்தலை எனும் தற்கால கோவில்வென்னி

சோழப் பெரும்படையும் சேரபாண்டியர் படைகளும் சந்தித்தன. சோழர் படைக்குத் தலைவன் கரிகாலன் ஒருவனே. மாற்றார் படையிலோ, சேரனும், பாண்டியனும், பதினொரு வேளிரும் தலைவர்கள். அவர்கள் தங்கள் தங்கள் படைக்குத் தலைமை வகித்தார்கள். இருபுறத்துப் படைகளும் சந்தித்தன. போர் மூண்டது; வெண்ணி யென்னும் ஊரில் இரு படைகளும் நின்று போர் செய்தன. 

சோழர் சரித்திரத்திலே நிகழ்ந்த மிகப்பெரிய பெரிய போர்களுள் வெண்ணிப்போர் ஒன்று. ஓர் அரசனை இரண்டு பெரிய மன்னர்களும் பதினொரு குறுநில மன்னராகிய வேளிரும் எதிர்த்தார்கள். சோழ அரசனாகிய கரிகாலனோ இளையவன். ஆனாலும் அவனுடைய வீரம் எல்லோரினும் சிறந்திருந்தது. சோழர் படையில் இருந்தவர்களுக்குச் சோழ நாட்டுப்பற்று மிகுதியாக இருந்தது அதில் இரும்பிடர்த் தலையார் சோழநாட்டு மக்கள் உள்ளத்தில் தேச பக்திக் கனல் பொங்கும்படி செய்தார். அதனால் நாள்தோறும் நாட்டு மக்களுடைய ஆதரவு அதிகமாயிற்று. 

படைவீரர்கள் பலர் யுத்தம் மூலம் மறைந்து தெய்வமாக அப்பகுதியிலும் அங்கிருந்து புலம்பெயர்ந்த மக்களின் உறவினர்களால் வணங்கப்படும் சோழர்களின் கோட்டையைக் காத்து நிற்கும் தூண்டிக்கருப்பன், அக்கினி வீரன்  சேர்வைக் காரர்கள் 

மாற்றான் படை அளவில் பெரியதாக இருந்தாலும், வெவ்வேறு தலைவரின்கீழ்ப் போரிட்டது. சில சமயங்களில் யார் எதிர்பகைவர், யார் தம் படையினர் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. வேளிர்களின் கீழிருந்த படைவீரர்கள் பயிற்சி இல்லாத வெறும் கூலிப் படைகள். அவர்களுக்குத் தேசபக்தியோ வேறு உயர்ந்த கொள்கையோ இருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகப் போர் நடப்பது சோழ தேசத்தின் நிலம். அரசன் தாய் பிறந்த தேசம் மன்னர் குடி என்பது பிற்கால மன்னார்குடி ஆனது சோழ நாட்டில் சோழப் படைக்குத்தான் பலம் அதிகம் என்பதைச் சொல்லவா வேண்டும்? மாற்றார் படைக்கு உணவு முதலியன சுருங்கிவிட்டால் பாண்டிய நாட்டிலிருந்தோ சேர நாட்டிலிருந்தோ வர வேண்டும். சோழ நாட்டில் உள்ள மக்கள் மறைவாகவோ, வெளிப்படையாகவோ தமக்கு உதவி புரிவார்கள் என்று வேளிர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படி நடக்கவில்லை. சோழ நாட்டுப் படை ஒருமுகமாகப் போர் செய்தது. கரிகாலன் தெய்வத்தின் திருவருள் பெற்ற தேவன் என்ற எண்ணம் வீரர்களுக்கு இருந்தது. பெரிய யானையின் மேல் இளங்கதிரவன் எழுவது போல அல்லவா போருக்குப் புறப்பட்டு முன்னே நின்றான்? ஆத்தி மாலையைச் சூட்டிக்கொண்டு வீறு பெற்று அவன் புறப்பட்ட வேகம் எல்லா மக்கள் உள்ளத்திலும் வீரக் கனலை மூட்டியது. தானே நேரில் சென்று போரை அந்த இளங் குழந்தை நடத்துவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, அவன் புறப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஆண்மையுள்ள மக்களெல்லாம் படையில் சேர்ந்து புறப்பட்டுவிட்டார்கள். 

போர் கடுமையாக நடந்தது. முதல் முதலில் வேளிர் படையில் சலசலப்பு உண்டாயிற்று. எங்கே தளர்ச்சி உண்டாகிறதோ அந்தப் பகுதியிலே மேலும் மேலும் மோத வேண்டுமென்ற தந்திரம் அரசன் கரிகாலனுக்குத் தெரியும். வேளிர்படை இருந்த பக்கத்தில் ஊன்றித் தாக்கினான். என்ன இருந்தாலும் கூலிப் படைதானே? வரிசை வரிசையாகக் கால் வாங்கத் தொடங்கியது. பலர் சோழப் படைவீரருடைய படைக்கலங்களுக்கு இரையாயினர். வேளிர் பதினொருவரும் ஒருவர்பின் ஒருவராக மாய்ந்தனர். அடுத்தபடி பாண்டிய படையைத் தாக்கினான் கரிகாலன். சேரன் படையோடு தளர்வின்றி ஒருபால் சோழப் படையினர் போரைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அங்கே யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று அறியவொண்ணாத நிலை இருந்தது. பாண்டியன் படையை அதிக வேகத்தோடு எதிர்ப்பதில் கரிகாலன் முனைந்தான். பாண்டி நாட்டுப் படையும் தளர்ந்தது. பாண்டியன் பட்டான். 

இப்போது பின்னும் ஊக்கத்தோடு சோழ மன்னன் சேரப் பெரும்படையை எதிர்க்கத் தொடங்கினான். பல போரில் வென்ற சேர மன்னன் பெருஞ் சேரலாதனுக்கு முன்னே கன்னிப் போரைச் செய்யும் மன்னர் கரிகாலன் நின்றான். சேரனுக்குப் படைப் பலமும், அநுபவமும் துணை நின்றன. கரிகாலனுக்கு வீரரின் அன்பும், திருவருளும், இணையில்லாத ஊக்கமும், அறிவுப்பலமும் துணை நின்றன. சோழப் படையில் இருந்த தளபதிகள் குலை நடுங்கினர். கரிகாலனுக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வதென்று பயந்தனர். கரிகாலனோ மிடுக்குடன் போரிட்டான். கடைசியில் அவன் விட்ட அம்பு பெருஞ்சேரலாதனுடைய மார்பிலே பாய்ந்தது. அவன் வீழ்ந்தான். வீழ்ந்தவனை அவனுடைய படைத்தலைவர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்ந்தவர்களோடு போர் செய்தல் அறமன்று. ஆகவே, போர் நின்றது. சோழ மன்னனுக்கு வெற்றி கிடைத்தது. 

பெருஞ்சேரலாதன், அம்பு பட்டு வீழ்ந்தவன் இறந்து படவில்லை. அவனை வஞ்சிமா நகரம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். கரிகாலன் விட்ட அம்பு அவன் மார்பைத் துளைத்து உடம்பை ஊடுருவி முதுகு வழியே சென்றுவிட்டது. சுத்த வீரர்களுக்கு மார்பில் புண் இருப்பது அழகு; முதுகில் புண் இருப்பது இழுக்கு. போரில் புறங் காட்டி அப்போது பாய்ந்த அம்பினால் புறப்புண் அமைதல் வீரத்துக்கு இழுக்கு என்று சொல்லுவார்கள். ஆனால் எந்த வகையிலும் புறத்தே புண் உண்டானால் அதனாலே வாழ்தல் தவறு என்று பெருஞ்சேரலாதன் எண்ணினான். "அந்த அம்பு என் உயிரை வாங்காவிட்டாலும் என் புறத்தே புண்ணை நிறுத்திவிட்டுப் போயிற்று. புறப்புண்ணை வைத்துக்கொண்டு வாழமாட்டேன். விரதம் இருந்து உயிரை விடப்போகிறேன்" என்றான். உடன் இருந்தவர்கள் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார்கள். மான வீரனாகிய சேரன் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வடக்கிருந்து உயிர் நீக்க நிச்சயித்துவிட்டான். அப்படியே தன் நகரத்துக்கு வடக்கே நெடுந்தூரம் சென்று ஓரிடத்தில் அமர்ந்து உணவும் நீரும் இன்றி உடம்பை வாட்டிப் புகழுடம்பு பெற்றான். 

கரிகாலன் கன்னிப் போரில் வெற்றியை  கைப்பற்றினான். தனது பரப்பளவின் எல்லை பாண்டிய நாட்டின் தென்பகுதியில் விரிந்து தனது தேசத்தின் பகுதி மக்களை அங்கு குடியமர்வு செய்து போது சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டில் வந்த பலர் இன்னும் அந்த வம்சாவளி உண்டு அவன் புகழ் எங்கும் பரவியது.கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகால் சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது. அவன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட இடம், ‘வெண்ணிப்பறந்தலை’ என்று இலக்கியங்களால் புகழப்பட்ட இன்றைய கோவில்வெண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.சோழர் மாமன்னன் கரிகாலசோழத் தேவர், பாண்டியர், சேரர், மற்றும் ஒன்பது குறுநில மன்னர்களை வெண்ணிப்பரந்தலை என்னும் போரில் எதிர்த்துப் `போரிட்டு மிகப்பெரிய  வெற்றி பெற்றார். அவ்வெற்றியுடன் தனது மற்றுமொரு தலைநகரான காவிரிபூம்பட்டிணம் நோக்கிச் செல்லும்போது சோழ வீரர்கள் போரினால் களைப்புற்றிருந்தனர் மேலும் பல இடங்களில் வீரக் காயங்களும் பட்டிருக்க மூலிகைகள் நிறைந்த ஓரிடத்தில் தங்கி தங்கள் காயங்களை ஆற்றிச் செல்லத் தங்கி காயங்களை ஆற்றினர். போரினால் ஏற்ப்படும் காயத்திற்கு வடு என அழைப்பர் எனவே வீரர்களின் வடுக்களை ஆற்றிய ஊர்  வடுவூர் என்றாகி வரலாற்றுப் பெயர் பெற்றது. 

அக் காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.கரிகால் சோழன்

2000 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லை. பெரும் வலு தூக்கும் இயந்திரங்களில்லை. தொழில்நுட்ப பரவலில்லை. ஆனாலும் கல்லணை கட்டப்பட்டது. இந்தச் சாதனையை செய்தவன் சோழ மன்னன் கரிகாலன்.

 பெருவளத்தானின் ‘பாசனம்’ குறித்த அறிவும், உணவு உற்பத்திக்குத் தேவையான ‘பாசனப் பரப்பை’ விரிவாக்க வேண்டிய புரிதலும், அதைச் செய்வதற்கு, “வான் பொய்ப்பினும்தான் பொய்யா” (பட்டினப்பாலை) காவிரிக்கு கரைகட்டி அணைகட்ட எடுத்த முடிவும், அதற்கான ‘தொழில் நுட்பத்தை’ கண்டடைந்த மேதமையும், அதைச் செய்வதற்கான ‘உழைப்பு சக்தியை’ தன் படையெடுப்பு வெற்றியால் சாத்தியப்படுத்தியதையும் - காலநிலை குறித்தும் யோசியுங்கள். அப்போதுதான் கரிகாலனின் சாதனையின் வீரியம் புரியும். அது புரியும் போதுதான் அந்த வீர மன்னனின் வரலாறு இனிக்கும்.

இன்றைய நமது அளவுகோளின்படி, 28 வருவாய் தாலுகாக்கள் உள்ளடக்கிய பகுதிதான்‘காவிரி கழிமுக மண்டலம்’. தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய ‘டெல்டா பாசனப் பரப்பை’ உருவாக்கிய முன்னோடி. காவிரியின் மீது தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்தப் பயன்படுத்திய ‘பழைய டெல்டா பரப்பு’எனும் கடக்க முடியாத உண்மையை உருவாக்கியவன் சோழ மன்னன் இரண்டாம் கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் என்பது திருச்சிராப்பள்ளியின் பெருமை.

பெருந்தொகை சொல்கிறது.

“அஞ்சில் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்

கஞ்சிக் காவேரி கரை கண்டு - தஞ்சையிலே

எண்பத்து மூன்றளவும் ஈண்டயிருந்தேதான்

விண்புக்கான் தண்புகார் வேந்து”

2000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றைத் தேடுவது அவ்வளவு எளிதல்ல. வரலாறு இல்லாத பலர் வேறு வரலாறுகளுக்குச் சொந்தம் கொண்டாடி தங்கள் பழைய வரலாறு மறைக்கப் பார்க்க நாம் உண்மையான வரலா பதிவு செய்ய  தற்போது நம் வரலாற்று அறிஞர்கள் தேடினார்கள். அவர்களுக்கு நம் இலக்கியங்கள் பாதை அமைத்துக் கொடுத்தன.

வரலாற்றின் போக்கில் இரண்டு கரிகாலன்கள் உண்டு முதலாம் கரிகாலனின் மகன் இளஞ்சேட்சென்னி. அவனது மகன் தான் இரண்டாம் கரிகாலன். இவனே கல்லணையைக் கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற ஆய்வு  உள்ளது.

பொருநராற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் முதலாம் கரிகாலன் என்றும் இவனின் காலத்தில் தான் பரணர், மாமூலனார், வெண்ணிக்குயத்தியார் போன்ற சங்க காலப் புலவர்கள் வாழ்ந்துவந்தனர். ‘பட்டினப்பாலையின்’ பாட்டுடைத்தலைவன்தான் இரண்டாம் கரிகாலன்.

உருத்திரங்கண்ணனார், தாம்ப்பல்கண்ணனார், மதுரைக் குமரனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவனைப் பாடியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம், தமிழ்நாடு அரசின் வரலாற்றுக்குழு தனது ஆண்டறிக்கையில், இரு நூல்களின் பாட்டுடைத்தலைவனும் ஒருவனே. வேறு கரிகாலன் இருந்ததில்லை என்றும் கூறுகிறது.

‘கரிகாலன்’ என்றால் ‘கருகிப்போன கால்களை உடையவன்’ என்பது பொருள். இரண்டாம் கரிகாலன்தான் மிகப்பெரும் சாதனையான கல்லணையை கட்டினான் என்றால், அவனுக்கு பின்வரும் மன்னர்கள் கரிகாலன் என்னும் பெயரை அதன் பெருமை கருதி தன் பெயரோடு சேர்ப்பது இயல்பு. 

கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், இலக்கியங்களின் துணையோடு மட்டும் செய்யப்பட்ட இந்த ஆய்வுகள் பெரிய அறிவு உழைப்பு. இந்த வாதங்கள் எப்படியிருந்தாலும், காவிரியின் இரு கரை உயர்த்தி, கல்லணையை கட்டியவன் சோழ மன்னன் கரிகாலனே. வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவன்.

இந்தச் சோழன் கரிகாலன் வாழ்ந்த காலத்தை வரையறை செய்வது எளிதல்ல. கரிகாலனின் இமயப் படை எடுப்பு, ரோமாபுரி வணிகம், இலங்கை மன்னன் கயவாகு வரவு, சிலப்பதிகாரம், பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டும், பெருந்தொகை நூலில்,

“தொக்க கலியின் மூவாயிரத்துத் தொண்ணூறில்

மிக்க கரிகால் வேந்தனும்தான் - பக்கம்

அலைக்கும் புகழ் பொன்னியின் கரை கண்டான்.”

சொல்லப்பட்டுள்ள கலி ஆண்டை கணக்கிட்டும், மேலும் பல ஆய்வுகள் செய்தும், கரிகால் பெருவளத்தான் கி.மு. 65 முதல் கி.பி 18 வரை வாழ்ந்ததாக முடிவு. யானை கருவூரில் மாலை சூடி

முடி சூட்டியபோது - அகவை 5

வெண்ணிப் போர் வெற்றி -  அகவை 15

வாகைப்போர் வெற்றி - அகவை 16

இமயமலை படை எடுப்பு - அகவை 17 முதல் 20 வரை

இலங்கைப் படை எடுப்பு - அகவை 21

காவிரி கரையில், கல்லணை (காலம் கி.மு 12) கட்டி முடித்தபோது அகவை- 53

அதன்பின் தஞ்சாவூர்  சென்று, தன் வேளிர் குலத்தவரோடு 83 அகவை வரை வாழ்ந்தார்.

 கரிகாலன் தந்தை இளஞ்சேட்சென்னி. தாய் வேள் மகள். கரிகாலனின் பெரியப்பா தான் சோழ மன்னன் இளம் பெருஞ்சென்னி. கரிகாலன், தாய் வயிற்றில் இருந்தபோதே நடந்த போரில் மன்னன் மரணமடைந்தான். தந்தையோ நோய்ப்படுக்கையில் இருக்க  தனக்குப் பிறக்கும் மகனே அரசுரிமை வாரிசாக வரவேண்டும் என்றும் அவனை அரியனை ஏற்றும் பொறுப்பை அவனது தாய் மாமன் இரும்பிடத்தலை அகமுடையாரிடம் கரிகாலனின் தந்தை ஒப்படைத்தார்..

கரிகால சோழன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் அரசர் ஒன்பதின்மரைப் போரில் புறங்காட்டி ஒடச் செய்தான். கரிகாலன் குதிரைப் படையுடன் சென்று இந்த ஊரைத் தாக்கியிருக்கிறான். அப்போது ஒன்பது மன்னர்கள் யானைமீதேறி வெண்கொற்றக் குடையுடன் வந்து கரிகாலனை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களால் கரிகாலனை எதிர்த்து நிற்க முடியவில்லை. தம் கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டோடிவிட்டனர்.

இவனுடைய சேனாதிபதி திதியன் என்பவன். அவனிடம் பண்பட்ட போர்த் தொழிலில் வல்ல கோசர் என்னும் வீரர் இருந்து வந்தனர்.

குலப்பகைவரிடமிருந்து காப்பாற்ற கரிகாலனை கருவூரில் பாதுகாப்பாக அவனது தாய் மாமன் வளர்த்தார்.

சோழ நாட்டுக்கு மன்னனை தேர்வு செய்ய வேண்டிய நேரம். வேளிர்குல வழக்கப்படி பட்டத்துயானை மாலை சூட்ட 5 வயது சிறுவன் கரிகாலன் சோழ நாட்டு மன்னனானான். இதை ஏற்காத குலப்பகைவர்,

சிறுவன் கரிகாலனை சிறையில் அடைத்தனர். கரிகாலன் தன் போர் ஆற்றலை சிறையிலேயே வளர்த்துக் கொண்டான். பகைவர்கள் அவனைக் கொல்லும் திட்டத்தோடு சிறைக்கு தீ வைத்தனர். தன் வீரத்தால் கரிகாலன் தீயிலிருந்து தப்பித்தான். அதில்அவன் கால் கருகியதால் கரிகாலனானான்.

“அரிகால்மேல் தேன் தொடுக்கும்

ஆய் புனல் நீர் நாடன்

கரிகாலன் கால் நெருப்புற்று”

என்கிறது                    பொருநராற்றுப்படை.           பெருந்தொகை நூலில்,

“தொக்க கலியின் மூவாயிரத்துத் தொண்ணூறில்

மிக்க கரிகால் வேந்தனும்தான் - பக்கம்

அலைக்கும் புகழ் பொன்னியின் கரை கண்டான்.”

சொல்லப்பட்டுள்ள கலி ஆண்டை கணக்கிட்டும், மேலும் பல ஆய்வுகள் செய்தும், கரிகால் பெருவளத்தான் கி.மு. 65 முதல் கி.பி 18 வரை வாழ்ந்ததாக முடிவு செய்யலாம். அஞ்சில் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்

கஞ்சிக் காவேரி கரை கண்டு - தஞ்சையிலே

எண்பத்து மூன்றளவும் ஈண்டயிருந்தேதான்

விண்புக்கான் தண்புகார் வேந்து”

2000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றை தேடுவது எளிதல்ல. வரலாற்று அறிஞர்கள் பலர் தேடினார்கள். அவர்களுக்கு நம் இலக்கியங்கள் பாதை அமைத்துக் கொடுத்தன. அக்காலத்தில் அரசர்கள் தங்கும் எல்லைப் படைவீடுகள் ஆலயத்துடன் அமைந்துள்ள அழகாபுரி ஆகும். தற்போது இன்றும் பல இடங்களில் அதன் சுவடுகள் உண்டு மதுரை அலங்காநல்லூர் அருகில் மற்றும் சின்னமனூர் அருகில் குருவிகுளம்  -தென்காசி அருகில் நரிக்குடி மற்றும் விருதுநகர் அருகில் திருச்சிராப்பள்ளி உப்பிலியாபுரம்  அருகில் நாட்டரசன்கோட்டை அருகில் திருமயம் அருகில் கோட்டையூர் அருகில் நாச்சியாபுரம் அருகில் என் சோழ பாண்டிய எல்லையில் அமைந்துள்ள பழமையான தொன்மையான ஊர்கள் ஆகும்.                                                      தஞ்சாவூரிலிருந்து சாலியமங்கலம், அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், சாலியமங்கலத்தை அடுத்து வரும் கோயில் வெண்ணி நிறுத்தத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை

அடையலாம்.சங்க காலத்தில் இத்தலம் வெண்ணிப்பரந்தலை என்று

அழைக்கப்பட்டது. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெண்ணிப்பரந்தலையில் நடைபெற்ற போரைப் பற்றி தமிழக சரித்திரம் படித்தவர்கள் நன்கு அறிவார்கள். தன்னை எதிர்த்த சேர, சோழ மற்றும் 11 குறுநில மன்னர்களை எதிர்த்து கரிகால் சோழன் இந்த வெண்ணியில்தான் போரிட்டு

பெரும் வெற்றி கண்டான். இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த

இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, கரும்பேஸ்வர் ஆலயத்துக்குக் கரிகால் சோழன் பல திருப்பணிகள் செய்தான்.கரும்புக் காடாக இருந்த இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றிய இத்தலத்து இறைவனையும், அம்பாள்

சௌந்தரநாயகியையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால், சர்க்கரை நோயிலிருந்து விரைவில்குணம்

பெறலாம் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.               திருஞானசம்பந்தர் பதிகம்.                        (2-ம்திருமுறை) 14-வது பதிகம்

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா  உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும் விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை உடையானையல்லதுள் காதென துள்ளமே. 

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் ஆதியை யாதியு மந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் நீதியை நினையவல் லார்வினை

நில்லாவேகுண்டருங் குணமிலா தசமண் சாக்கிய மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு

என்மின் விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில் தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.

மருவாரு மல்குகாழித்திகழ் சம்பந்தன் திருவாருந் திகழ்தரு வெண்ணிய

மர்ந்தானை உருவாரு மொண்டமிழ் மாலையிவை வல்லார்

பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோண்முடி

இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப் பொறுத்தானைப் போற்றுவா ராற்றலு டையாரே.

மண்ணினை வானவரோடு மனிதர்க்கும் கண்ணினைக் கண்ணனும் நான்முகனும் காணா விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்

அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.முத்தினை முழுவயி ரத்திரண் மாணிக்கத் தொத்தினைத் துளக்கமி லாதவி ளக்காய வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்

அத்தனை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில் மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்      இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் காத்தானைக் கனிந்தவரைக்கலந் தாளாக ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் தாரானைத் தையலொர் பாகமு டையானைச் சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன