மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

ஆஸ்கர் பெர்னாண்டஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் காலத்தில் தீவிர அரசியலிலிருந்தார். 1980 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி தன் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வானார். 


   அதே தொகுதியிலிருந்து 1984, 1989, 1991,1996 ஆம் ஆண்டுகளில் மீண்டும் மக்களவைக்குத் தேர்வானார். 1998 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்வானார்.

முன்னால் பிரதமர் இராஜீவ் காந்தியின் நாடாளுமன்றச்  செயலாளராகப் பணியாற்றினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் நெருக்கமானவராக பெர்னாண்டஸ் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலிலிருந்து பெர்னாண்டஸ் ஒதுங்கியிருந்தார். ஜூலை மாதம் தனது வீட்டில் யோகா பயிற்சியின் போது தவறி விழுந்ததால் காயமடைந்து. உடன் மங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனை முடிவில் அவரது மூளையில் இரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட.தன் பின்னர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் அலுவலகம்

மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சோக தருணத்தில் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்: பிரதமர்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா