திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த கட்சிப் பிரமுகர்களின் ருத்ர தாண்டவம் .

திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த கட்சிப் பிரமுகர்களின் ருத்ர தாண்டவம் .


சென்னைக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக வரும் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) போதை கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்ததனால் கோபமான கௌதம் மேனன் அவரைக் காவல் துறையில் இருந்து சூழ்ச்சியால் விரட்டுவதும்.  ஜாதி வெறியனென மக்கள் மத்தியில் நாயகனை அவமானப்படுத்தும் கௌதம் மேனன்.


அதன் தொடர்ச்சியாக படத்தின் கதைக்களம்.
திரௌபதி இயக்குனர் ஜி.மோகனின் இயக்கத்தில் உருவான  ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை


தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் எச்.ராஜா பார்த்து ரசித்து. செய்தியாளர்களிடம் பல சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து கூறும்போது சீமான், சுப.வீரபாண்டியன், இயக்குநர் ரஞ்சித் ஆகியோரை நேரடியாகவும், திருமாவளவனை மறைமுகமாகவும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசிய இவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் வெளிப்பட்டது. தொடர்பாக நல்ல விளம்பரம் ருத்ர தாண்டவம்  திரைப்படத்திற்கு  கிடைத்த நிலையில்.


தமிழில் நடிகர் ரிஷி ரிச்சர்ட், இயக்குநர் கௌதம் மேனன், தர்ஷா குப்தா, இராதாரவி ஆகியோர் நடிப்பில் ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தை மோகன் இயக்கியுள்ளார்.  அக்டோபர் மாதம் முதல் தேதி திரைக்கு வருகிறது. திரௌபதி போலவே பரபரப்பை ஏற்படுத்திய படத்தின் சிறப்புக் காட்சி சில அரசியல் கட்சிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

 தமிழக பாஜக பிரமுகர் எச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் திருமாறன் உள்ளிட்டவர்கள் பார்த்து அதன் பின் அணைவரும் கூட்டாக எச்.ராஜாவுடன்  செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில் கூறியதாவது:

இயக்குநர் ஜி.மோகன் இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் படத்தில் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. ஒரு முக்கியக் கருத்தை மக்களுக்கு சொல்வதாக உள்ளது.சட்டரீதியாக 18 வயதுக்கு முன்பு வருவது காதலல்ல. அது ஒரு ஈர்ப்பு. படிக்கும் குழந்தைகள் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும் காதலிலல்ல. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக எனக்கும் அந்தக் கவலை இருக்கிறது.

இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதை இந்தப் படம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேப்போன்று குடும்பக் கட்டுப்பாடு கடந்த காலத்தில் அதிகமாக   நடந்த நிலையில் முக்கோணச் சின்னம் பிரபலமான நிலை ஆனால் தற்போது செயற்கை கருத்தரிப்பு மையங்கள்  அதிகரித்துள்ளன.


நாளை ஒருவேளை தமிழ் ஆண் மகன் தன் மனைவிக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை உருவாகும். அதற்குக் குடியும், போதையும் தான் காரணம். சரக்கு மிடுக்கு பேச்சு மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சாதி பிரச்சனையை உருவாக்குபவர்களை இந்தத் திரைப்படம் எச்சரித்துள்ளது.

என்னிடம் கேள்வி கேட்கும் பலருக்கு தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கக் கூடத் தெரியவில்லை. அப்படிபட்டவர்கள் தான் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் தமிழ் ஆர்வலர்கள் எனவும் கூறிக்கொள்கிறார்கள்.

தமிழ் வேற, ஹிந்து வேறு அல்ல. ஊடகங்கள் மதமாற்றத்திற்குத் துணை போக வேண்டாம். இந்து மதமில்லாமல் தமிழ் இல்லை. மேலும் ஒரு கேள்வி வரவே ... சீற்றமாகி சீமான் தமிழரா? சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி. ஆனால், என்னை பீஹாரி என்கிறான் ஒரு அடிமுட்டாள். நான் பச்சை தஞ்சாவூர்காரன்.

மற்றொரு கேள்விக்கு

ஆரியம் பற்றிப் பேசும் சுப.வீரபாண்டியன் மூளை குப்பைத்தொட்டி ஆகிவிட்டது. அறிவாலயம் வாசலில் நிற்கும் பிச்சைக்காரன். அசோகச் சக்கரவர்த்தி பேரரசை விட மிகப்பெரிய பேரரசைக் கட்டி ஆண்ட இராஜராஜ சோழனை இழிவுபடுத்திய இயக்குநர் ரஞ்சித் போன்றவர்களும் தமிழ் திரையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தப் படம் எந்த மதத்தையும், ஜாதியையும் இழிவாக பேசவில்லை. சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல படத்தை மோகன்ஜியும், அவரது குழுவினரும் தரமாகக் கொடுத்துள்ளனர்.

மற்ற மதத்தை இழிவுப்படுத்தி மதம் மாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடித்துள்ள இராதாரவி தான், நடிகவேள் மகன் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.அதன்பின் அர்ஜுன் சம்பத், திருமாறன்,கிருஷ்ணசாமி, ஆகியோர் கருத்துக் கூறினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்