ஊழல் செய்த முன்னால் அமைச்சர் புலவர் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கு ஐந்தாண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஊழல் செய்த முன்னால் அமைச்சர் புலவர் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கு ஐந்தாண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. இப்போது திமுகவில் இருக்கும் புலவர் இந்திரகுமாரி 1991  ஆம் ஆண்டு முதல் 1996 வரை முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின்  அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து ஊழல் முறைகேடு செய்தவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை  வழக்குப் பதிவு செய்திருந்த புகாரில்   மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி நடத்துவதாகக் கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு அரசிடமிருந்து ரூபாய் 15.45 லட்சம் முறைகேடு செய்திருந்த குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. முழு விசாரணை நடத்தி வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது., இவ்வழக்கு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு  ஐந்து ஆண்டுகள் சிறை த்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவரது  கணவர் பாபுவுக்கு ஐந்து ஆண்டுகளும், ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு மூன்றாண்டுகளும்,  தண்டனை விதித்தது.

தண்டனை பெற்ற குற்றவாளியான அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி தற்போது திமுகவில் இருக்கிறார்.

வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தபோது, இந்திரகுமாரி, கணவர் பாபு, சண்முகம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, மூன்று


பேருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்படுகிறார் எனத் தெரிவித்தார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திரகுமாரி, தற்போது திமுகவில் மாநில இலக்கிய அணிச் செயலாளராவார்.   தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்