தேவகோட்டை வட்டம் பெரியகாரை கதிரவன். வயது 40.
வெளிநாட்டில் பணியாற்றி விட்டு வந்து ஒன்றரை ஆண்டுகளாக நிலங்கள் வாங்கி விற்கும் புரோக்கர் தொழிலுடன் கந்துவட்டி தொழில் செய்தார். அதற்கு ஒரு பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்தவர் உடனேயே தேவகோட்டை ஒன்றிய பா.ஜ., பொது செயலாளராக மாறியவர் செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணிக்கு திருச்சிராப்பள்ளி இராமேஸ்வரம் தேசிய புறவழி நெடுஞ்சாலை காவனவயல் சந்திப்பிலுள்ள துரித உணவுக் கடையில் பேசிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கதிரவனை வெட்டிய நிலையில் சிகிச்சைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார். நில விற்பனை இடைத்தரகர் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கீழக்காவனவயலைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில்.
இந்தச் சம்பவம் தேவகோட்டை பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கதிரவ னின் உறவினர்களுடன் மற்றும் பாஜகவினர் அரசு மருத்துவமனையின் முன்பு திரண்டதால் பதட் டம் ஏற்படவே மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
கதிரவன் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் டி.ஐ.ஜி. மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி கொலையாளிகளை உடன் பிடிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் ரமேஷ், காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் காவணவயல் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பெரியசாமி (வயது 37), அவரது உறவினர் வீரபாண்டி (வயது 28) ஆகியோர் கொலையாளிகள் எனத் தெரியவந்ததால் தீவிரத் தேடுதல் மூலம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கான காரணம் குறித்து பெரியசாமி காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
"எனக்கும், வாகைக்குடி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவருக்கும் சில மாதத்திற்கு முன் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது கதிரவன், கட்டப் பஞ்சாயத்து மூலம் சமரசம் பேச வந்தார். அவர் பழனிக்குச் சாதகமாகப் பேசியதனால் எனக்கும் கதிரவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் அடிக்கடி கதிரவன் என்னைக் கிண்டல் செய்ததனால் ஆத்திரத்தில் இருந்த நான் நேற்று மாலை எனது உறவினர் வீரபாண்டியுடன் சென்று பைபாஸ் சாலையில் பாஸ்ட்புட் கடை முன்பு அமர்ந்திருந்த கதிரவனை வெட்டிக் கொன்றோம்". என காவல்துறை தரப்பில் வெளிவந்த வாக்கு மூலம் கூறுகிறது.
கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த துணை கண்காணிப்பாளரின் நடவடிக்கைக்கு பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
கருத்துகள்