புதுமையான மற்றும் மாசில்லா. சிஎஸ்ஐஆர்- சிஎம்ஈஆர்ஐ--ன் சூரிய சக்தி சமையல் அமைப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யின் சூரிய சக்தி சமையல் அமைப்பு: புதுமையான மற்றும் மாசில்லா இந்தியாவை நோக்கிய பயணம்


சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ உருவாக்கியுள்ள சூரியசக்தி டிசி சமையல் அமைப்பை மேற்கு வங்கத்தில் உள்ள ஆசன்சால் பிரைல் கல்வி மையத்திடம் சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் ஹரிஷ் ஹிரானி இன்று ஒப்படைத்தார்.

ஆசன்சால் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் சுவாமி சோமாத்மானந்தாஜி மகராஜ் மற்றும் ஆசன்சால் துர்காப்பூர் வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் திரு தபஸ் பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ உருவாக்கியுள்ள சூரியசக்தி டிசி சமையல் அமைப்பின் தொழில்நுட்பம் ஆசன்சால் சோலார் & எல் ஈ டி ஹவுஸ் மற்றும் மெக்கோ சோலார் & இன்பிராஸ்ட்ரக்சர் அசோசியேட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டது.

சூரிய ஒளி அடிப்படையிலான சமையல் அமைப்பான சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ உருவாக்கியுள்ள சூரியசக்தி டிசி சமையல் அமைப்பில், சூரியசக்தி ஒளிமின்னழுத்த தகடு, முன்னேற்ற கட்டுப்பாட்டு கருவி, மின்கலன் மற்றும் சமைக்கும் பாத்திரம் ஆகியவை உள்ளன. தூய்மையான, இன்வெர்ட்டர் தேவைப்படாத, நேரடி செயல்பாட்டுடன் கூடிய வேகமான மற்றும் சீரான சூடாக்கும் தன்மையுடன் கூடிய சமையல் முறையை இது வழங்குகிறது. இதன் மூலம் ஒரு வருடத்தில் ஒரு குடும்பம் ஒரு டன் கரியமில டையாக்சைட் வெளிப்பாட்டை தவிர்க்கலாம்.

ஊடகங்களிடம் பேசிய சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் ஹரிஷ் ஹிரானி, சிறப்பு திறன் பெற்ற குழந்தைகளுக்கு சேவையாற்றி வரும் ஆசன்சால் பிரைல் கல்வி மையத்திடம் சூரியசக்தி டிசி சமையல் அமைப்பை வழங்கியது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மாசில்லா இந்தியா என்பது சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யின் கனவு என்றும் இந்த சூரிய சக்தி சமையல் அமைப்பு அந்த கனவை அடைவதற்கான பயணத்தில் ஒரு சிறிய நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா