முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன்னரசுக் கள்ளர் நாடுகளில் தனித்தன்மை கொண்ட வெள்ளலூர் நாடு கலாச்சாரமும் பண்பாடும்

"சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலைநின்ற - பெருமாளே"  என்று திருப்புகழ் பாடிற்று.....!. அதில்.    "கள்ளர் வழிமறித்து காயாம்பு மேனியை கலகமிகச் செய்தார்கள் வள்ளலாரப்போது - நீலமேகம்  கள்ளர்களைத் தான் ஜெயிக்க" 



எனும் பாடல் வரிகள் கள்ளர்கள் அழகரை வழி மறித்த செய்தி குறித்து கூறுகிறது வரலாறு கலந்த இலக்கியம்..?!.         மதுரை பாண்டிய நாட்டில் பொது ஆண்டு எட்டாம் நூற்றாண்டில் கள்ளர்கள் மேலூர் பகுதியில் வந்து குடியமர்ந்தனர் என வரலாற்றாசிரியர் ஆர்.கே. கண்ணன் குறிப்பிடுகிறார்.       அதன் பிறகு தான் மதுரைக்குக் கிழக்குப்பக்கத்திலிருந்து கள்ளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பகுதியில் குடியமரத்துவங்கினர். பொது ஆண்டு 1655 ல் உரப்பனூரைச் சேர்ந்த திருமலை பின்னத்தேவன் என்பவரைப் இப்பகுதியின் அம்பலகாரர் அல்லது தலைவராகப் பட்டங்கட்டி மதுரை மன்னர் திருமலை நாயக்கர் ஒரு பட்டயத்தை வழங்குகின்றார். அப்பட்டயத்திலேயே நாடு எட்டு என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு எட்டிற்கும் கம்பளம் விரித்து நீதிபரிபாலனம்  செய்கின்ற அதிகாரம் திருமலைப்பின்னத்தேவருக்கு அளிக்கப்படுகின்றது. இதை வைத்துப்பார்க்கும் பொழுது



1650 களிலேயே இவர்கள் மத்தியில் எட்டுநாடு என்ற அமைப்பு உருவாகிவிட்டது. அப்படி யென்றால் அதற்கு 2 அல்லது 3 தலை முறைகளுக்கு முன்பாக இவர்கள் இப்பகுதியில் குடியேறியிருந்தால் தான் அந்தநிலைப்பாட்டை அடைந்திருக்கமுடியும். இதன்படி பார்த்தால் இவர்களது குடியேற்றம்


16 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கலாம். அமெரிக்க மானுடவியல் அறிஞர் ஸ்டுவர்டு ப்ளாக்பர்ன், கள்ளர்கள் 1600 ல் ஆனையூர்பகுதியில் குடியேறினர் எனக் குறிப்பிடுகின்றனர்.



சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பரம்புமலைப்பகுதியில் பிரன்மலை கள்ளர் என்ற ஒரு வட்டார வழக்கு வகுப்பார் வாழ்ந்துவந்தனர். அவர்களில் ஒருசிலர் அவ்வகுப்பாரிடமிருந்து பிரிந்துவந்து மதுரைக்கு மேற்குப்பகுதிகளில் குடியமர்ந்தனர். அவர்கள்



பரம்புமலைக்கள்ளர்கள் எனப்பட்டனர். அச்சொல்லே மருவி பிரமலை எனப்பட்டது. பொது ஆண்டு 1775 ல்  சோழர் மற்றும் பாண்டிய நாட்டு அரசுகளின் நிலைப்பாடு:-




பல்வேறு போர்களுக்குப் பின்பு மதுரை, தஞ்சாவூர் உள்ளடங்கும் திருச்சிராப்பள்ளி முழுவதும் ஆற்காட்டு நவாப்பின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியது.

சோழநாட்டின் ஒரத்தநாடு துவங்கி பாண்டிய நாட்டின் பாப்பா நாடு வரை உள்ள 48 நாடுகள் தன்னாட்சி நாடுகள் 

ஆனால் மதுரையில் மட்டும் தன்னரசு நாடுகளான மேலூர்,வெள்ளலூர், சிறுகுடி, நத்தம் (அழகர்கோவில்) உள்ளிட்ட நாடுகள், தங்களுடைய தன்னரசு நிலைப்பாட்டிற்காக தேவர்களும், நாட்டார்களும், அம்பலங்களும்,சேர்வைகளும் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தர்.



புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசு, தொடர்ந்து பிரித்தானியா கிழக்கிந்திய கம்பெனி நேரடி நிர்வாகத்தில் உறவு கொண்டு தனி மாநிலமாகவே ஆற்காடு நவாப்புக்கு வரிசெலுத்தாமல், சிம்மாசனத்தில் இராஜகம்பீரமாக  தஞ்சாவூர் வழியில் வந்த தொண்டைமான்கள்  அரசாட்சி செலுத்தினர்.




புதுக்கோட்டை சமஸ்தானமும்,சிவகங்கை சமஸ்தானமும், இராமநாதபுரம் சம்ஸ்தானத்தின் மன்னர் இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி காலத்தில் அவருக்கும் அவரது 46 வது மனைவி கள்ளர் குல வழியில் வந்த திருக்களம்பூர் கதலி நாச்சியாருக்கும் பிறந்த அவரது ஒரே மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியார் திருமண நேரத்தில் தனது மைத்துனர் இரகுநாதனுக்கு இரகுநாதத் தொண்டைமானாக மாற்றம் செய்து புதுக்கோட்டை அரசு நிர்வாகமும் தனது மருமகன் அதாவது மாப்பிள்ளை சசிவர்ண உடையணத்தேவருக்கு சிவகங்கையும் சேதுபதி சமஸ்தானத்தின் சீதனமாக வழங்கியதால்



இரு புதிய சமஸ்தானமானது .அது தான் உள் வரலாறு பல உண்டு அது பெரியது அதற்கு முன்னர் சிவகங்கை பகுதி சார்ந்த தன்னரசு கள்ளர் நாடுகளாக -தென்னிலை நாடு,மல்லாக்கோட்டை எனும் மயில் ராயன் கோட்டை நாடு, ஆரூர் வட்டகை நாடு,ஏழுகோட்டை நாடு,கப்பலூர் நாடு,முத்து நாடு,ஆற்றங்கரை நாடு,ஏம்பல் நாடு,இறகுசொரி நாடு,உஞ்சனை நாடு,செம்பொன்மாரி நாடு,குன்னங்கோட்டை நாடு,அஞ்சூர் நாடு,தமறாக்கி நாடு,நாலூர் நாடு,பாகனேரி நாடு,பட்டமங்கலம் நாடு,கண்டுகொண்டமாணிக்கம் நாடு,ஏழூர் பத்து நாடு, உள்ளிட்ட இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் நாடுகளில் 




அம்பலங்களும், அரண்மனை வழி சேர்வைகளும், மன்னர் வழி தேவர்களும், நாட்டார்களும் அதில் வரும் படை பரிவாரங்களுடன்  ஊர்ப் பகுதியில்  சம்பளம்,அம்பலம், உம்பலம் நிர்வாகம் தொடர்ந்து நவாப்பிற்கு எதிரான போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



தஞ்சாவூர் மராட்டிய அரசும், கள்ளர் அம்பலங்களும்:-பன்றிகொண்டார்,வணங்காமுடி பண்டாரத்தார்,சிங்கம்புலியார்,பாலாஷி சிங்கம்புலியார்,மெய்க்கண் கோபாலர்,பணிப்பூண்டார்,விஜயதேவர்,சவ்வாஜி கோபாலர்,மழவராய பண்டாரத்தார்,வணங்காமுடி தொண்டைமான்,வழுவாட்டி தேவர் ஆகியோர் ஆற்காட்டு நவாப்பிற்கு எதிராக தொடர் போரில் ஈடுபட்டு வந்த  நிலையில்.     


1755 ஆம ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியில்  ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி வெள்ளையர்களை எதிர்த்து நத்தம் கணவாயில் பதினான்கு தன்னரசு நாட்டுக் கள்ளர்கள் நடத்திய யுத்தம் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாகும்.   

       ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளின் மீதான  உக்கிரமான தாக்குதல்   என்பதை ஹரான் தாம் எழுதிய வரலாற்று நூலிலேயே பதிவு செய்திருக்கிறார். கள்ளர் சேனையின் நோக்கமான கோவில்குடி குலதெய்வ சிலைகள் ஹெரானின் படையிடமிருந்து மீட்கப்பட்டன. ஆனாலும் பல மணிநேரம் இந்த யுத்தம் நீடித்தது. 1000 பேருடன் கணவாயைக் கடக்க முயன்றவர்களில் 970 பேர் வீழ்த்தப்பட்டு அந்த கணவாய் பகுதியே ரத்த வெள்ளமானது சரித்திரம். தம்மிடம் வெறும் 30 பேர்தான் எஞ்சியிருந்ததாகவும் ஹரான் எழுதியிருக்கிறார்.

 அன்றைய ஆங்கிலேய தளபதிகள் தங்களது வரலாற்று நூல்களில் பதைபதைப்புடன் மறக்காமல் பதிவும் செய்திருக்கின்றனர். பின்னாளில் இந்த க்கொள்ளை சம்பவம், படை இழப்பு ஆகியவற்றுக்காக ஹரான் மீது விசாரணையும் நடத்தப்பட்டது தான் வரலாறு. ஹரான் படை தளபதியான கான்சாகிப் யூசுப்கான் (மருதநாயகம் பிள்ளை) மதுரையில் இருந்தார்.


இந்த மதுரை பனையூர் கான்சாகிப்தான் மருதநாயகம் பிள்ளை கோவில்குடி கள்ளர் குலதெய்வக் கோவில் கதவுகளை தீ வைத்து எரித்தவர். பின்னர் மதுரையின் ஆளுநராகப் பொறுப்பேற்ற போது     



நத்தம் கணவாய் யுத்தத்துக்கு பழிவாங்க 500 கள்ளர்களை மதுரையில் தூக்கிலிட்டார். இந்த வரலாற்றையும் ஆங்கிலேயர்களும் கான்சாகிப் யூசுப் கான் வரலாற்றை எழுதியவர்களும் பதிவு செய்துள்ளனர். நடிகர் கமலஹாசன் எடுக்க முயன்ற கதைக்களம் அதுவே ஆகவே அவர் முயற்சி பலன் தரவில்லை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆதரவாளன் மருதநாயகம் சுதந்திர முயற்சிகளுக்கு எதிராக நடந்த ஒரு கோடாரிக்காம்பு என்பது தான் உண்மை. நான் கடந்த 30 ஆண்டு முன் எனது அய்யா அவர்கள் புதுமண்டபத்தில் வாங்கி வழங்கிய கான்சாகிப் சண்டை நூலில் அடங்கியுள்ள விபரமாகவே இங்கு பதிவாகியுள்ளது.



அப்போது இருந்த பாண்டிய நாட்டில் மதுரை நாயக்க மன்னர்கள் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் ஆளுகை பகுதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் முதன்முதலில் பொதுமக்களையும் பாளையகாரர்களையும் அடக்கி ஒடுக்கி வரி வசூலித்து தமிழர்களின் சுதந்திர வேட்கையை நசுக்க நியமிக்கப்பட்ட நபர் தான் கர்னல் ஹெரான் பொது ஆண்டு 1755 ல் கர்னல் ஹெரான் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் 1500 வீரர்கள் அடங்கிய படையோடு துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களோடு 



திருச்சிராப்பள்ளியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்றபோது வழியில் கோயில்குடி (திருமோகூர்) அங்கு கிராமத்தில் கள்ளர்களுக்குச் சொந்தமான கோவிலிலிருந்த தங்க நகைகள் மற்றும் விக்கிரகங்களைக் கொள்ளையடித்து கோவிலைத் தீயிட்டு கொளுத்துகிறான் இதனால் ஆத்திரமடைந்த தன்னரசு நாட்டு கள்ளர்கள் கர்னல் ஹெரான் படையோடு திருச்சிராப்பள்ளிக்குத் திரும்பும் போது வழியில் 1755 ஆண்டு மே மாதம் 29  ஆம் தேதி நத்தம் கணவாய் மேட்டில் நேருக்கு நேராக மோதி போரிட்டு அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மீட்டனர். இந்தப் போரில் தன்னரசு நாட்டு கள்ளர்கள் வெற்றி பெற்றாலும் கள்ளர்களுக்கு படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் வெள்ளையர்களின் துப்பாக்கி குண்டுக்கும் பீரங்கி குண்டுக்கும் இரையாகி வீரமரணம் அடைந்தனர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி வெள்ளையர் படைகளுக்கும் பெருத்த உயிர்சேத்தை ஏற்படுத்தினர், இத்தகைய வீரவரலாற்றைக் கண்டறிந்து 265 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு     எழுதப்பட்டுள்ளது. தன்னாட்சி கள்ளர் நாடுகளில் தனித்த தன்மை கொண்ட கீழ் திசை நாடான வெள்ளலூர் நாட்டின் வரலாறு. ஏறத்தாழ ஐம்பதுக்குட்பட்ட  சிற்றூர்களின் கூட்டமைப்புப் பகுதியாகும். ஐம்பது பட்டிகளும் ஐந்து  உட்பிரிவு மாகாணங்களுக்குள் அடங்கியிருக்கிறது. அவையாவன.  1   வெள்ளலூர் 2. உறங்கான்பட்டி 3. அம்பலகாரன்பட்டி 4. குறிச்சிபட்டி, 5. மலம்பட்டி [வெள்ளமலைபட்டி].

வெள்ளலூர் நாட்டில் இரண்டு மிக பெரிய கிராமங்களின் காவல் தெய்வங்களாக . ஸ்ரீ வல்லடிகாரர் சுவாமி கோவிலும் , ஸ்ரீ ஏழைகாத்த அம்மன் கோவிலும். இந்த ஆலயங்களில் பாரம்பரிய வழக்கப்படி திருவிழாக்கள் இன்றும்  நடைபெறுகிறது.


ஸ்ரீ அருள்மிகு வல்லடிகாரர் சுவாமி கோவிலில் தான் சுட்டமண்புரவி அல்லது சேமங் குதிரை புல் தின்ற வரலாறு என்பது வைந்தானைப் பாடலில் வருகிறது அதனை ஏளனம் செய்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி வீரன் கொல்லப்பட்டு அங்கேயே  அது வெள்ளக் கண்மாய் அருகே இறந்துவிட்டதாகவும் செவிவழி வரலாறு உண்டு., அதனால் தான் வெள்ளலூர் நாட்டில் வசிக்கும் மக்கள் குதிரையிலோ குதிரை வண்டி மீது அமர்ந்து செல்வதில்லை

ஸ்ரீ அருள்மிகு வல்லடிகாரர் கோவில் அம்பலகாரன்பட்டி  மாகாணத்திலுள்ள அம்பலகாரன்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில் மேலூர் சிவகங்கைச் சாலையில் நாயத்தான்பட்டி விளக்கிலிருந்து  1 .5   கிலோமீட்டர் தொலைவில் மேற்கு நோக்கிச் செல்லும் பாதையிலுள்ளது. கோவிலுக்கான திருவிழா மாசி மாத இறுதியிலோ அல்லது பங்குனி மாத தொடக்கத்திலோ வரும்.

பொதுவாக திருவிழா ஆரம்பிக்கும் 15 நாட்களுக்கு முன்பே வெள்ளலூர் நாட்டு மக்கள் மாசி மாதம் சிவராத்திரி மறுநாள் பாரிவேட்டை அன்று வெற்றியூர் அருகில் அரண்மனை சிறுவயல் மகான்கண்டான் ஊருணியில் குளித்து பிடிமண் எடுத்துச்சென்று  அன்று முதல்  விரதம் இருக்கும் நிகழ்வுக்குப் பிறகு காப்புகட்டுதல் நடக்கும் தினத்திலிருந்து 15 நாட்களுக்கு இங்கு அணைத்து கிராமங்களில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல் இந்தப் பகுதியைச் சேர்ந்த உலகம் முழுவதிலும் தற்போது வசித்து வருகின்ற மக்களும் மீன் உணவு தவிர மற்ற எந்த விதமான அசைவ இறைச்சி உணவையும் மற்றும் இட்லி  தோசை உள்ளிட்ட உணவுகள் யாரும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.  இந்தப் பகுதியில் உள்ள உணவகங்களும் சைவ உணவையே தயார் செய்யும்.

அதே போன்று பச்சை மரங்களை யாரும் வெட்டுவது கிடையாது மேலும் அப் பகுதியில் நடைபெறும் ஜனன மரணங்கள் கூட ஊருக்கு வெளியே தான் , இந்த 15  நாட்களும் ஒவ்வொரு ஊரிலும்


வைந்தானைப் மாடல் பாடி கோலாட்டம் ஆடுவர் அது பாரம்பரிய வழக்கப்படி அதாவது  ஒவ்வொரு ஊரில் வாழும் மக்கள் பொது மந்தை முன் கூடி நின்று கொண்டு விளையாடும் ஒரு வகையான கோலாட்டம் விளையாட்டு. ஒற்றுமையை வழியுறுத்தி இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது

அதேபோல் ஸ்ரீ அருள்மிகு ஏழைகாத்த அம்மன் கோவில்: குறிச்சிபட்டி மாகாணத்தில் உள்ள கோவில்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.அதே நாயத்தான்பட்டி  விளக்கிலிருந்து 3 .5 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு நோக்கிய பாதையில் உள்ளது.மேலும் உரங்கான்பட்டி யிலிருந்தும் செல்லும் வழி உண்டு இந்த ஆலயத்தில் திருவிழா புரட்டாசி மாத தொடக்கத்தில் நடத்தப்படும். இந்த விழாவை 15 நாட்கள் முன்னதாக காப்புக்காட்டி விடுவார்கள். அந்த 15 நாட்களும் வெள்ளலூர் நாடு முழுவதும் சைவ உணவையே உண்பார்கள். இந்தக் கோவில் சிறப்பு என்னவென்றால்  ஏழு சிறுமிகள் தேர்வு செய்து நாட்டில் உள்ள பெண்கள் மது எடுத்தல்,விழா நடைபெறும் இதில் நேர்த்திக் கடன் பிரார்த்தனையில் பிரிசுற்றுதல், பூக்குடை எடுத்தல் மதலை மண் பொம்மைகள் எடுத்தல் கிராமத்தின் திருவிழா திரைப்படத்தில் காணத நிகழ்வாகும்.


ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட சிற்றூர்கள் உள்ளன .முதலாவதாக வெள்ளலூர் மாகாணத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஊர்களின் பட்டியல் 1. வெள்ளலூர்  2 . கட்டச்சோலைபட்டி 3 . இடையகோவில்பட்டி 4 . ம.ஒத்தப்பட்டி 5 . மட்டங்கிபட்டி 6 . கண்ணபுரம 7 . இடையவலசை 8 . வெள்ளநாயகம்பட்டி10. ஒத்தப்பட்டி 11. மேலவலசை 


இரண்டாவதாக  உறங்கான்பட்டி மாகாணத்தில் உள்ள ஊர்கள்.1. உறங்கான்பட்டி  2.புலிமலைபட்டி 3  கல்லம்பட்டி 4 .குப்பச்சிபட்டி 5 . அய்யமுத்தாம்பட்டி 6 . கொட்டாணிபட்டி  7 . கொ. அழக்சிபட்டி 8 . சூரத்துபட்டி 10 . உ.புதுபட்டி   11 . தர்மாசனபட்டி


முன்றாவதாக அம்பலகாரன்பட்டி  மாகாணத்தில் உள்ள ஊர்களின்  1 . அம்பலகாரன்பட்டி 2 . நாயத்தான்பட்டி 3  தண்ணீர் பந்தல்  4 . கோட்டநத்தம்பட்டி           5 .அ.புதுபட்டி  6. முருகன்பட்டி 7 .பழையூர்பட்டி 8.சுப்பிரமணியபுரம் 9 .சின்ன ஒக்குபட்டி 10 . கட்டகாளைபட்டி  11 . ஏழை காத்த அம்மன் கோவில் பட்டி.


நான்காவதாக குறிச்சிபட்டி மாகாணத்தில்   உள்ள ஊர்கள் : 1 . குறிச்சிபட்டி 2 . முத்தம்பட்டி 3 . கள்ளராதினிபட்டி 4 . கூலிபட்டி 5 . கோவில்பட்டி 6 . கோ.ஒத்தப்பட்டி 7 . ஆலம்பட்டி  8 . கம்மாய்பட்ட 9 . உச்சிரிச்சான்பட்டி


ஐந்தாவது மாகாணம்: மலம்பட்டி அதில் அடங்கியுள்ள சிற்றூர்களின் விபரம் : 1 . மலம்பட்டடி  2 . சோனைபட்டி  3 . அழகீச்சுபட்டி  4 . தேவன்கோட்டை 5 மேட்டுப்பட்டி 6 . கன்னிமார்பட்டி7 .தேவன்பெருமாள்பட்டி 8 .பெரிய ஒக்கப்பட்டி 9.மாணிக்கம்பட்டி 10 . ஆவாரம்பட்டி11 . கூட்டுறவுபட்டி. 12 . சிவல்பட்டி 13 . உசிலம்பட்டி 14 . கண்டாங்கிபட்டி                       15 .முனியாண்டிபட்டி 16 . சாணிபட்டி என்பது மேற்கண்ட வெள்ளலூர் நாட்டில் அடங்கும்ஊர்களின் பெயர்களாகும்



வெள்ளலூர் நாட்டில் வாழும் மக்களில் 11 உட்பிரிவு வகையில் கள்ளர்கள் [ பெரும்பான்மையோர்], உள்ளனர்  அதோடு  அரிவியூர் செட்டியார்கள், வெள்ளாளர்கள், குலாலர்கள் ,பனிக்கர்கள், ஆதிசைவர்கள அதாவது உள்ளூர் நிதிப் பொறுப்பாளர் பண்டா என்றால் நிதி பண்டாரம் என்னும் பட்டம் , யாதவர்கள், நாடார்கள், நாவிதர்கள் தச்சர் மற்றும் கொள்ளர் விஸ்வகர்ம ஆச்சார்யர், ஏகாளி மற்றும் ஆதிதிராவிடர்கள்  உள்ளிட்ட மக்கள் வாழ்கின்றனர் சில இஸ்லாமியர் பிற்காலத்தில் குடிவந்தனர் .முதலாவதாக கள்ளர் என்பது (விளக்கம்):  ஆதிகாலம் முதல் அனைவரும் போர்க்களத் தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், ஆறாம் நூற்றாண்டுக்கு முன் அக்குலத்தொழில் பெயராலேயே களம் கண்ட கள்ளர் என்று அனைவராலும்  அழைக்கப்பட்டனர்.. இதனை, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழத் தேவரின் கல்வெட்டில் “தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் இருவார தர்மாசனம் கொண்ட வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது” பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத  வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு கள்வர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களை விருதுகள் பலகூறு வீரமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அ…"     பழங்காலத்தில்போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின் மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல் வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.சோழநாட்டின் காவிரிப்பூம்பட்டினத்தைப் பூர்வீகம் கொண்ட நாட்டுக் கோட்டை நகரத்தார் எனும் மகுட தமிழ் வைசியர் பட்டத்தைக் கொண்ட செட்டியார் பெருமக்கள் எப்படி மாற்று இனத்தில் அல்லது சமுதாயத்தில் திருமண உறவு கொண்ட நபர்களை தங்கள் புள்ளி வரிப் பட்டியலில் சேர்ப்பதில்லையோ அதுபோலவே நாட்டாக் கள்ளர்களுக்கு அதுவும் வெள்ளலூர் நாட்டில் வாழும் கள்ளர்களுக்கு தங்கள் பகுதி தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்பலகாரர் பட்டம் கட்டுவது ஒரு பாரம்பரிய மரபுப்படி என்பதால் கள்ளர் உட்பிரிவு 11 பிரிவுகள் வழி வந்த நபர்கள் தான் அம்பலங்களாகவோ அல்லது இளைஞர்களுக்கு வழங்கும் இளங்கட்சிகளாகவோ நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பழையூர்பட்டி குமார் என்பவர்  தான் அம்பலமாக்கும் முயற்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயன்ற நிலையில் அவர் தாய் வழியில் வேறு பிரிவைச் சேர்ந்த நபர் என்பதால் அவருக்கு கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால் தற்போது இந்து சமய அறநிலையத் துறை மூலம் பல நடவடிக்கைகள் கொண்டு வர முயற்சிகள் செய்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் அதை  அப்பகுதியில் மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடி அப்போது முறியடித்தது குறித்துப் மக்களிடையே பரவலாகப் பேசப்படுகிறது ஒரு சமுதாய வட்டார பாரம்பரிய பழக்கவழக்கங்கள் கொண்ட முறைமைகளில் தேவையற்ற முறையில் இந்துசமய அறநிலையத் துறை தலையிடுவது குறித்து அப் பகுதியில் மக்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இது ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான ஆலயவழி மரபு இதை பிரிட்டானிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகத்தில் கூட முயன்று முடியாமல் போனது, காரணம் பாரம்பரியமும்,பண்பாட்டு கலாச்சாரமும் அயலர் அதை மாற்ற முயற்சி செய்த போதும் மக்கள் சக்தி இங்கு பலமானதாக உள்ளது . நாடறிந்த உண்மை‘காலம் காலமாக வழிபடும் தங்கள் கோவில்களை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தக்கூடாது’ என 62 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு  மனுக் கொடுத்திருக்கிறார்கள்.பின்நோக்கிப் பார்த்தால்   ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி 1810, மற்றும் 1817 ஆம் ஆண்டுகளின் சட்டம் இயற்றி இந்துக்கள் கோவில்களின் நிர்வாகத்தில் நுழைந்தது. பின்னர் கிறிஸ்தவ மிஷினரிகளின் எதிர்ப்பால் 1841 முதல் 1862 வரை கோவில் நிர்வாகத்தில் அரசு விலகிக் கொண்டது. வழிபாட்டிடங்களில் ஊழல் அதிகரித்ததாகக் கூறி, 1863 ஆம் ஆண்டு அறநிலையச் சட்டம் போடப்பட்டு, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் உட்பட இந்து சமயக் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடத் தொடங்கியது. சென்னை மாகாணத்திலிருந்த நீதிக்கட்சி அரசு காலத்தில் திருக்கோவில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக 1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1927 உருவானதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.   ஆலயத்தில் உரிமை எங்கள் பாரம்பரிய முறைப்படி தான் என  ஐந்து மாகாணங்களைத் தலைமையாகக்கொண்டு 62 கிராமங்களுக்கும் கள்ளர்கள் சேர்த்ததில் 11 கரைகள், ஒரு கரைக்கு 2 அம்பலக்காரர் வீதம் 22 அம்பலக்காரர்கள் நிர்வாகம் செய்கிறார்கள். ஸ்ரீ ஏழை காத்தம்மன் ஸ்ரீ வல்லடிகாரர், ஸ்ரீ மந்தைக் கருப்பணசாமி ஆகிய மூன்று ஆலயங்களின் முதன்மை தெய்வங்கள். இந்தக் கோவில்களை அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சி எனத் தகவல் எழுந்ததையடுத்துத்தான் கடந்த ஆண்டுகளில் ஒரே பரபரப்பு.


கரை அம்பலக்காரர்   ஒருவர் கூறுகையில் “மூன்று கோவில்களும் வழிபாட்டுக்கானவை மட்டுமல்ல. எங்கள் வாழ்வுடன் ஒன்றிப்போனவை. நல்லது, கெட்டது அனைத்தையும் இந்தக் கோவில்களில் வைத்துத்தான் பேசி முடிவு எடுப்போம். 700 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இதுதான் நடைமுறை. ஆனால், யாரோ அளித்த புகாரில் கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறை முயற்சி செய்கிறது. அதனால்தான், ‘அறநிலையத்துறை கோயிலைக் கையகப்படுத்தக் கூடாது’ என அரசாங்கத்திடம் மனு கொடுக்க முடிவு செய்து, வெள்ளலூர் மந்தையில் திரண்டோம். பத்தாயிரத் துக்கும் அதிகமானோர் திரண்டவுடன் காவல் துறை, இந்து அறநிலையத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு வந்தனர். மக்கள் சார்பாக அம்பலக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘கோவில் நிர்வாகம் முறையாகக் கவனிக்கப் பட்டுவருகிறது. இந்து அறநிலையத்துறை தலையீடு தேவையில்லை’ என்று மனு அளித்தோம். அதிகாரிகள், ‘சாதகமான முடிவு எடுக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்” என்றார்.மேலும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருத்து“கோவிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வது நோக்கமல்ல. அறங்காவல் குழு அமைக்கத்தான் முடிவு செய்தோம். அறங்காவல் குழுவுக்கான ஐந்து உறுப்பினர்களும் அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.ஆனால் ஒரு இனம் இருப்பார்களா என்பதே எழுவினா? இடைக்கால ஏற்பாடாக தக்காரை நியமிக்கலாம் என்று கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுத்தோம். மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், தற்போதைய நிலையே நீடிக்குமெனத் தெரிவித்துள்ளோம்” என்றார். இதில் கண்ட பொது நீதி இதுவரை இப்பகுதியில் ஒரு அந்தணர் குடும்பமோ அல்லது அக்ரஹாரங்களோ இல்லை  ஆகவே பிரிவினையோ குழப்பங்களோ வந்ததே இல்லை திருவிழா துவக்கத்தில் வெள்ளாட்டுக் கிடாய்களை பலியிட்டு கிராம காவல் தேவதைகளை மகிழ்விக்கும் நிகழ்வுகளும் சத்திரிய வழியில் நடப்பதும் இனங்களில் நடக்கும் மாறாத திருமண நிகழ்வுகள் தான் இந்த பாரம்பரிய விழாக்கள் தடையின்றி பல நூற்றாண்டுகளாக நடைபெறக் காரணம்.அதை உடைக்கும் முயற்சி நடந்தது வருகிறது அது இந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் பலன்தராது என்பது நாமறிந்த உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...