உள்ளாட்சித் தேர்தல் அரசியலில் அவதாரம் எடுத்த மருவத்தூர் அம்மாக்கள்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேல்மருவத்தூர்.  ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் முகவரி. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சிவப்பு அடையாள பக்தர்கள் அதிகளவில்  வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்தக் கோவிலுக்கு பல்வேறு தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் வந்து செல்வது வழக்கம்.1970 கள் முதல்  வேப்பமரம் மட்டுமே இருந்தது இப்போது மேல்மருவத்தூரில் அத்தகைய ஆன்மீக சாம்ராஜ்யம் நடத்துபவர் பங்காரு அடிகளார்.  மெட்ரிகுலேஷன் பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி என்று ஆரம்பித்து கல்வி வியாபாரத்தை பக்தியுடன் கலந்து மக்களிடம் கொள்ளை அடித்து வருகிறார். பங்காரு அடிகளாரின் மனைவியும் இரண்டு மகன்களும் திருமதி அம்மா, பெரிய அம்மா, சின்ன அம்மா என்ற பெயர்களில் வியாபாரத்தின் வெவ்வேறு பிரிவுகளை நடத்தி வருகின்றனர்.


இவர்கள் பல கட்சிகளைச் சேர்ந்த முன்னாள்/இன்னாள் அரசியல் வாதிகளான ஏ சி சண்முகம், விஸ்வநாதன், ஜேப்பியார் போன்ற முன்னால் ரவுடிகளும், 1985 ஆம் ஆண்டு கணக்கு ஆசிரியர் பணியிலிருந்து அரசியல்வாதியாக தற்போது வளர்ந்திருக்கும் பச்ச முத்து போன்ற கல்வித் வியாபாரிகளுக்கும் ஈடு கொடுத்து தமது சாம்ராஜ்யங்களை விரிவு படுத்தி வருகின்றனர்.. இதில் ஆன்மீகம் என்பது எங்கே என் நாம் தேடவேண்டும். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி, மற்றும் மகன் செந்தில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 

சிபிஐயில் பல் மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு மொத்த குடும்பத்தின் மீதும் நிலுவையிலிருக்கிறது. 

இந்த நிலையில்


பாமக  இங்கு வேட்பாளர்களை எதிராக நிறுத்துமா என்பது தான் இங்கு குறிப்பிடத்தக்கது

ஊரக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.. 

தமிழ்நாட்டில் வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம்  6, மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு செப்டம்பர் மாதம்15ஆம் தேதி முதல் தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் செப்டம்பர். 22ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய 2 நாட்களில் மட்டும் 13,542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சூழலில், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


பங்காரு அடிகளார் மனைவி வி இலட்சுமி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவருக்கு அசையும் சொத்துகளாக ரூபாய் 7.51 கோடியும் அசையா சொத்துக்களாக ரூபாய் 16.02 கோடியும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் மொத்த சொத்து மதிப்பாகப் பிழையாக 250 கோடி ரூபாய் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.


அதேபோல பங்காரு அடிகளாரின் மகன் செந்தில் குமாரும் இந்தத் தேர்தலில் , மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.                    ஏற்கெனவே மேல் மருவத்தூர் எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் சற்று உள்ளேயும் யாரையுமே சொத்து வாங்க அனுமதிக்காத குடும்பம் 

ஊராட்சியின் பதவியை கைப்பற்றினால் அனைத்து முறைகேடுகளும் சரி செய்யப்படும். அதற்குத் தான் தவிக்கிறார்கள் என வெளியில் பேசப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா