மாநிலங்களின் திறன் மேம்பாட்டிற்காக ‘பொது தனியார் கூட்டணி’ பற்றிய இரண்டு வாரகால பயிற்சித் திட்டம்: பொருளாதார விவகாரங்கள் துறை ஏற்பாடு

 நிதி அமைச்சகம் மாநிலங்களின் திறன் மேம்பாட்டிற்காக ‘பொது தனியார் கூட்டணி’ பற்றிய இரண்டு வாரகால பயிற்சித் திட்டம்: பொருளாதார விவகாரங்கள் துறை ஏற்பாடு
மாநிலங்களின் திறன் மேம்பாட்டிற்காக 'பொது தனியார் கூட்டணி’ தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகம் ஆகியவை நடத்தும் இரண்டு வாரகால மேம்பட்ட அளவிலான காணொலி பயிற்சித் திட்டம் இன்று தொடங்கியது.

பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு கே. ராஜாராமன் துவக்கி வைத்த இந்த பயிற்சித் திட்டத்தில், துறையின் இணைச் செயலாளர் திரு பல்தேவ் புருஷார்த்தா துவக்க உரை வழங்கினார். பெங்களூரு இந்திய மேலாண்மைக் கழகத்தின் நிர்வாக கல்வித் திட்டங்களின் தலைவர் பேராசிரியர் ஜி சைனேஷ், பேராசிரியர் ஜி. ரகுராம், பேராசிரியர் ஆர்.டி. கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் அனில் பி. சூரஜ் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். பொருளாதார விவகாரங்கள் துறையின் துணைச் செயலாளர் டாக்டர் மோலிஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.

உள்கட்டமைப்புத் துறையில் ஈடுபடும் மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளுக்காக இந்த மேம்பட்ட அளவிலான பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.‌ குஜராத், தில்லி, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட், மேகாலயா, அசாம், மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில அரசுகளைச் சேர்ந்த 25 அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா