முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசும்பொன் தேவர் திருமகனின் 114 வது ஜெயந்தி 59 வது குருபூஜை மற்றும் ஆன்மீக, அரசியல் விழா

பசும்பொன் தேவர் திருமகனின் ஆன்மீக, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி துவங்கியது ஆன்மீக விழாவும், 29 ஆம் தேதி அரசியல் விழாவும், 30 ஆம் தேதி குருபூஜை ஜெயந்தி விழாவும் தேவர் 


நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டது. இந்த ஆண்டு பசும்பொன்  உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது ஆண்டு குரு பூஜையும்  கொண்டாடப்பட்டது 



அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் தேவர் வாழ்ந்த இல்லத்தில்  வழிபட்டு நினைவில்லத்தின் பொறுப்பாளர் தேவரின் சகோதரி மருமகள் காந்திமதி அம்மாவிடம் பேசினார்.நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள், திமுக  நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.


பசும்பொன்னில் இன்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.



மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  தனது வாழ்த்துக்களை பதிவுசெய்துள்ளார் அதில் "தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்ட அவர், மக்கள் நலனுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றியவர் எனக் கூறியுள்ளார்.இந்த நிலையில், மக்கள் நலனுக்காவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் நினைவு கூர்ந்துள்ளார்.உசிலம்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில்




தேவர் ஜெயந்தி விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் G.தேவராஜன்  மாநில பொதுச் செயலாளர் என்ற முறையில்  பி.வி. கதிரவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.





கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பசும்பொன் தேவர் திருமகனாரின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களைப் பற்றியும் அகில இந்திய பார்வர்டு பிளாக்  கொள்கை கோட்பாடுகள் குறித்தும் தேசிய செயலாளர் தேவராஜன் மற்றும் கதிரவன் சிறப்புரையாற்றினார்கள்.




கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. 





நிகழ்வில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி நிர்வாகிகள்

பேராசிரியர்களும் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.கல்லூரி நிர்வாகிகள் தலைவர் L.S. பாலகிருஷ்ணன் செயலாளர் வாலாந்தூர் P.பாண்டியன் பொருளாளர் SR.வனராஜா கல்லூரி முதல்வர் OA.ரவி மற்றும் MPR. பாஸ்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



பசும்பொன் தேவர் குருபூஜை என்றாலே. தடை உத்தரவு, நிபந்தனைகள் என்று அரசின் உத்தரவுகள் ஒரு கலவர பூமியாகவே எப்போதும் தோற்றம் அளிக்குமாறு இருக்கிறது காரணம் போதிய கட்டுப்பாடு பழகாத சமுதாய இளைஞர்கள் இந்த விழாவை தாங்கள் உணராத நிலையில் ஒரு பொழுதுபோக்கு என என்னும் நிலை மாறவேண்டும். 


யார் இதற்க்கு காரணம்.. பெற்றவர்கள் உண்மையான வரலாறு சொல்லிக் கொடுத்து ஒழுக்கம் கட்டுப்பாடு இல்லாமல் வளரும் இளைஞர்கள் தான் 

அனைவராலும் மதிக்கப்படும் தேவர் அய்யா அவர்களை வணங்குவது எப்படி என்ற அடிப்படை கூட தெரியாத சில ஆர்வகோளாறுகளின் செயல்களே இதற்கு முழுமையான காரணம்...

சமூக பொருளாதார விடயங்களில் பாதிப்பு வரும் போது இந்த இளைஞர்கள் இருக்குமிடமே தெரியாமல் இருந்துவிட்டு

குருபூஜை யின் போது தங்களின் இருப்பை வெளிக்கட்டும் அரசியல் விளம்பரப் பிரியர்கள் அவர்கள் சார்ந்துள்ள நபர்களின் செயல்களே இதற்க்கு மூல காரணமாகும்.

மதுக்கடைகளை மூடினாலும் இவர்கள் மது அருந்தி விட்டு சாலையில் ஆடுவதும் வாகனங்களில் மேல் அமர்ந்து செல்வதும் தங்களை தாழ்த்தி மதிப்பிடக் காரணமாக அமைகிறது தேவர் திருமகனை வணங்கி பெருமை படுத்துவது நோக்கமாக இவர்கள் கருதவில்லை.




இந்த மாதிரி உள்ள ஆர்வக்  கோளாறுகளை காவல்துறையினர் தடுத்து  நல்வழி படுத்தினால் தவறே இல்லை. என்றாலும்  இவர்கள் செயல் பலர் வேதனைப்படும் அளவில் தான் அமைகிறது. இது இனிமேல் வரும் காலங்களில் திருத்தந்தை நோக்கி இவர்கள் பயணப்பட வேண்டும். மேலும் சென்னையில் நந்தணம் தேவர் சிலைக்கு பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  விழாவில் திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று பாதுகாப்புப் பணிக்காக போலீசார் வாகனம் வந்தபொழுது அங்கு இருந்த சில இளைஞர்கள் காவல்துறையின் வாகனத்திலிருந்து காவலர்களைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு ஜீப்பின் மீது ஏறி ஆட்டம் போட்டதுடன் நிகழ்ச்சிப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட வட்டாட்சியரின் வாகனத்தின் மீது ஏறியும் அராஜகம் செய்து ஆட்டம் போட்டனர்.


இதை கண்டு மக்கள் பலரும் மற்றும் காவல்துறை ஆத்திரமடைந்த நிலையில்  உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில், விழா அமைதியாக நடைபெற வேண்டும் எனவே காவலர்கள் பொறுமை காக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகக் தெரிகிறது. இதனால் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  அமைதி காத்தனர். அரசு வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் ஆட்டம் போடும் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...