மகாராஷ்டிரா,ஆந்திரா, தெலுங்கானா. மேற்கு வங்காளம் சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ,

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மகாராஷ்ட்ர சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல் தொடர்பாக


மகாராஷ்ட்ர சட்ட மேலவை உறுப்பினர் திரு சரத் நாம்தேவ் ரான்பைஸ் 23.9.2021 அன்று மரணமடைந்ததை அடுத்து அந்தப் பதவிக்கான இடம் காலியாக உள்ளது. இந்த இடத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மேலவை உறுப்பினரைத்   தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாள்

9 11 2021 (செவ்வாய்)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

16.11. 2021(செவ்வாய்)

வேட்பு மனுக்கள் பரிசீலனை

17.11. 2021 (புதன்)

வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள்

22.11.2021 (திங்கள்)

தேர்தல் தேதி

29.11.2021 (திங்கள்)

வாக்குப்பதிவு நேரம்

காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை

வாக்குகள் எண்ணிக்கை

29.11.2021 திங்கள் மாலை 5 மணி

தேர்தல் தொடர்பான பணிகள் 1.12. 2021 புதன் கிழமைக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும்இந்த இடைத்தேர்தலில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக்  கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மூத்த அதிகாரி ஒருவரைப் பணியமர்த்துமாறு மகாராஷ்ட்ர மாநிலத் தலைமை செயலாளருக்குத்   தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்ட மேலவைக்கு இரண்டுஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் அறிவிப்பு

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்ட மேலவைக்கு, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட , சட்ட மேலவை உறுப்பினர்கள் 9 பேரின் பதவிக்காலம் கடந்த மே 31 மற்றும் ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.  கொரோனா 2ம் அலை காரணமாக இந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடத்தவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து சாதகமான சூழல் நிலவுவதால்,  இந்த தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கான மேலவை தேர்தல், வரும் நவம்பர்  29ம் தேதி அன்ற காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா தலைமை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் தொடர்பாக


நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஜோஸ் கே மணி (கேரளா), திருமதி ஆர்பிதா கோஷ் (மேற்கு வங்கம் ) ஆகியோர் ராஜினாமா செய்ததால் முறையே 11.01.2021, 15.09.2021 ஆகிய தேதிகளிலிருந்து காலியிடங்கள் ஏற்பட்டன. இருப்பினும் கொவிட்-19 இரண்டாம் அலை காரணமாக இந்த மாநிலங்களிலிருந்து  இடைத்தேர்தல் நடத்த உரிய சூழல் இல்லை என்று 28.05.2021 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.  தற்போது இம்மாநிலங்களின் அனைத்து நிலைமைகளையும் பரிசீலித்து இந்த இடங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணையைத்  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாள்

9 11 2021 (செவ்வாய்)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

16.11. 2021(செவ்வாய்)

வேட்பு மனுக்கள் பரிசீலனை

17.11. 2021 (புதன்)

வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள்

22.11.2021 (திங்கள்)

தேர்தல் தேதி

29.11.2021 (திங்கள்)

வாக்குப்பதிவு நேரம்

காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை

வாக்குகள் எண்ணிக்கை

29.11.2021 திங்கள் மாலை 5 மணி

தேர்தல் தொடர்பான பணிகள் 1.12. 2021 புதன் கிழமைக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும்

இந்த இடைத்தேர்தல்களில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக்  கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி  செய்ய மூத்த அதிகாரி ஒருவரைப் பணியமர்த்துமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்குத்   தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் தொடர்பாக

நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஜோஸ் கே மணி (கேரளா), திருமதி ஆர்பிதா கோஷ் (மேற்கு வங்கம் ) ஆகியோர் ராஜினாமா செய்ததால் முறையே 11.01.2021, 15.09.2021 ஆகிய தேதிகளிலிருந்து காலியிடங்கள் ஏற்பட்டன. இருப்பினும் கொவிட்-19 இரண்டாம் அலை காரணமாக இந்த மாநிலங்களிலிருந்து  இடைத்தேர்தல் நடத்த உரிய சூழல் இல்லை என்று 28.05.2021 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.  தற்போது இம்மாநிலங்களின் அனைத்து நிலைமைகளையும் பரிசீலித்து இந்த இடங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணையைத்  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாள்

9 11 2021 (செவ்வாய்)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

16.11. 2021(செவ்வாய்)

வேட்பு மனுக்கள் பரிசீலனை

17.11. 2021 (புதன்)

வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள்

22.11.2021 (திங்கள்)

தேர்தல் தேதி

29.11.2021 (திங்கள்)

வாக்குப்பதிவு நேரம்

காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை

வாக்குகள் எண்ணிக்கை

29.11.2021 திங்கள் மாலை 5 மணி

தேர்தல் தொடர்பான பணிகள் 1.12. 2021 புதன் கிழமைக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும

இந்த இடைத்தேர்தல்களில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக்  கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி  செய்ய மூத்த அதிகாரி ஒருவரைப் பணியமர்த்துமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்குத்   தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா