சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையில், ரூ.27.31 லட்சம் மதிப்புள்ள 555 கிராம் தங்கக்கட்டி பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையில், ரூ.27.31 லட்சம் மதிப்புள்ள 555 கிராம் தங்கக்கட்டி பறிமுதல்


சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் இன்று (30.10.2021) சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை, விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில், சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர்.

அவரது உடலை பரிசோதித்தபோது, மலக்குடலில் 4 பொட்டலகங்களாக மறைத்து கடத்தி வரப்பட்ட 650 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை உருக்கியபோது, ரூ.27.31 லட்சம் மதிப்புள்ள (இந்திய சந்தை மதிப்பு) 555 கிராம் தங்கக்கட்டியாக கிடைத்தது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அந்த பயணியை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா