சைனிக் பள்ளி சங்கத்துடன் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 100 பள்ளிக்கூடங்களுக்கு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை  சைனிக் பள்ளி சங்கத்துடன் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 100 பள்ளிக்கூடங்களுக்கு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப செயல்படும் விதமாக, குழந்தைகள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், நற்பண்புகளுடன் கூடிய வலுவான தலைமைப் பண்பு, நல்லொழுக்கம், தேசக் கடமைப் பற்றிய உணர்வு மற்றும் தேசப்பற்று குறித்து பெருமிதம் அடையத்தக்க வகையில், நன்மதிப்பு சார்ந்த கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று (12.10.2021) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சைனிக் பள்ளிகளில் தற்போதைய செயல்பாட்டு விதத்தில், முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் இணைப்பு பெற்ற சைனிக் பள்ளிகளை தொடங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்தப் பள்ளிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வரும். சைனிக் பள்ளிகளிலிருந்து
மாறுபட்டு, தனித்தன்மையுடன் செயல்படும். முதற்கட்டமாக, மாநிலங்கள்/ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/ தனியாரை பங்குதாரர்களாக இணைத்து 100 பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா