18-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் உரை


18-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை


மாட்சிமை மிகுந்தவரே,  மேன்மைமிகுந்தவர்களே,  இந்த ஆண்டும் நம்மால் நமது பாரம்பரிய குடும்பப் புகைப்படத்தை எடுக்க முடியவில்லை. ஆனால், காணொலி மூலம் ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை பேணியுள்ளோம். 2021-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைவராக விளங்கும் புருனேயின் மாட்சிமை மிக்க சுல்தானை நான் வாழ்த்துகிறேன்.  மாட்சிமை மிகுந்தவரே,  மேன்மைமிகுந்தவர்களே,  கோவிட்-19 பெருந்தொற்றால் நாம் அனைவரும் பல சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் இந்த சவாலான நேரம் ஒரு வகையில் இந்தியா-ஆசியான் நட்புறவுக்கான சோதனையாகவும் இருந்தது. கொவிட் காலத்தின் நமது பரஸ்பர ஒத்துழைப்பும் பரஸ்பர பிரிவும் எதிர்காலத்தில் நமது உறவை வலுப்படுத்துவதுடன், நமது மக்களிடையேயான நல்லெண்ணத்தின் அடிப்படையாகவும் இருக்கும். இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக துடிப்பான உறவுகள் உள்ளன என்பதற்கு வரலாறு சாட்சி. நமது பகிரப்பட்ட மதிப்புகள், மரபுகள், மொழிகள், நூல்கள், கட்டிடக்கலை, கலாச்சாரம், உணவு வகைகள் போன்றவற்றிலும் இது பிரதிபலிக்கிறது. எனவே, ஆசியானின் ஒற்றுமை மற்றும் மையத்தன்மை இந்தியாவிற்கு எப்போதுமே முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஆசியானின் இந்த சிறப்பு பங்களிப்பு, இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படும் கொள்கை,  எங்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் வளர்ச்சி அதாவது சாகர் கொள்கையில் உள்ளது. இந்தியாவின் இந்தோ பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சி மற்றும் ஆசியானின் இந்தோ-பசிபிக் பார்வை ஆகியவை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நமது பகிரப்பட்ட லட்சியம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான கட்டமைப்பாகும்.  மாட்சிமை மிகுந்தவரே,  மேன்மைமிகுந்தவர்களே,  2022-ம் ஆண்டு நமது கூட்டாண்மையின் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும். இந்தியாவும் சுதந்திரமடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த முக்கியமான மைல்கல்லை 'ஆசியான்-இந்தியா நட்புறவு ஆண்டாக' கொண்டாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வரவிருக்கும் கம்போடியாவின் தலைமை மற்றும் சிங்கப்பூரின் ஒருங்கிணைப்பின் கீழ் உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இப்போது உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்     மிக்க நன்றி!  குறிப்பு: இது பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா