ரயில்வே துறையினர் பாடிய ‘மிலே சுர் மேரா தும்ஹாரா’. புதிய பாடல்

இரயில்வே அமைச்சகம் ரயில்வே துறையினரின் புதிய பாடல் : ரயில்வே இணையமைச்சர் அர்ப்பணிப்பு


ரயில்வே துறையினர் பாடிய ‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ (எனது மற்றும் உனது சந்தம் இணையும் போது) என்ற புதிய பாடலை ரயில்வே இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ என்ற பாடல் கடந்த 1988ம் ஆண்டு சுதந்திர தினத்தில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த பாடலில் தற்போது நவீன இசை சேர்க்கப்பட்டு, 13 மொழிகளில் ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் பாடியுள்ளனர். இது அனைத்து ரயில்வே மண்டலங்களிலும், தோழமை உணர்வை ஏற்படுத்தும்.  இந்த பாடலில் ரயில்வே ஊழியர்கள், பிரபல விளையாட்டு வீரர்கள், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீரர்கள்   என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடலை ரயில்வே இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் காணொலி காட்சி மூலம் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுதந்திர இந்தியாவின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரயில்வே துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், இந்த பாடலை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், ‘‘இந்த பாடல் வேற்றுமையில் ஒற்றுமையை குறிக்கிறது. இந்த புதிய பாடல் ரயில்வே ஊழியர்களை மட்டும் ஊக்குவிக்காமல், ஒட்டுமொத்த நாட்டையும், எதிர்கால தலைமுறையினரையும் ஊக்குவிக்கும்’’ என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா