சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 6 மணிமுதல் சோதனை நடத்தினர்.
சேலம், சென்னை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த வழக்கில், தென்னரசு இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதன் அடிப்படையில், தென்னரசுக்குச் சொந்தமான நாமக்கல்லிலுள்ள பிஎஸ்டி நிறுவனம், அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர்.
சேலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்த அடிப்படையில்தான் இந்தச் சோதனைகள் நடைபெற்றது. இளங்கோவன் நடத்தி வரும் அறக்கட்டளையில், தென்னரசு பங்குதாரராக இருப்பதாகவும் சோதனையின் பின்னணிக்கு இதுவும் ஒரு காரணமென்று கூறப்படுகிறது.
தென்னரசுவிடம் அவரது அலுவலகத்தில் விசாரணை நடத்தி அவர் என்னென்ன பணிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் தலைமையில் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள்