அடுத்தவர் மனைவியுடன் அந்தரங்கப் புகைப்படம்; `சர்ச்சை' காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் சஸ்பென்ட்.!

அடுத்தவர் மனைவியுடன் அந்தரங்கப் புகைப்படம்;  `சர்ச்சை' காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் சஸ்பென்ட்.!


சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை அஷ்ரப் அன்சாரி. என்பவர், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக காவல்துறை இயக்குனர்., வடக்கு மண்டல காவல்துறை தலைவர்., காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியிருந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
`எனக்கு 18.6.2012 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் திருமணம் நடந்தது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் மனைவியின் சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் அருகில் கிராமம் என்பதால் அங்குள்ள அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவருவார். அங்கு சென்று வரும்போதெல்லாம் என் மனைவியின் நடவடிக்கையிலும் பேச்சிலும் மாற்றம் தெரிந்தது.


அதனால் என் மனைவியின் செல்போனை எடுத்து  நான் ஆய்வு செய்த போது திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் என்பவருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஆய்வாளர் முனிசேகரும், என் மனைவியும் வாட்ஸ்அப் காலில் பேசிய புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து என் மனைவியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. அதனால் ஏற்பட்ட பிரச்னையில் என் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ஆய்வாளர் முனிசேகரை அவரின் செல்போனில் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. தற்போது எனது உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஆய்வாளர் முனிசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் முனிசேகரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆய்வாளர் முனிசேகர் முன்பே சர்சையில் சிக்கியவர். சென்னையில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த 2017 ஆம்ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் சென்றது. பலருக்கு மீண்டும் நினைவு படுத்தும் நிலையில். ஒரு பின்னோட்டம்:சென்னை அருகில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை போன சம்பவத்தில், கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் இராஜஸ்தானுக்குச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்கும் போது நடந்த மோதலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் அங்கே மரணமடைந்தார். முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தான், பெரியபாண்டியனின் உடலைத் துளைத்ததாக இராஜஸ்தான் காவல்துறை தெரிவித்த நிலையில். ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணத்துக்குப் பிறகு நகைக்கடை கொள்ளையன் நாதுராம் காவல்துறையினரிடம் சிக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகரக் காவல் துறையிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளசென்னையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மாற்றம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொளத்தூர் நகை கடை கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டு கொன்ற இன்ஸ்பெக்டர் முனிசேகர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பகுதியிலுள்ள ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்திற்கு  அப்போது ஆய்வாளர் முனிசேகர் இடமாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் பரிந்துரையில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மாறுதலாகி  பணியாற்றிய போது தான் திருமணமான அஷ்ரப் அன்சாரி மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.  ஆய்வாளருடன் சம்பந்தப்பட்ட பெண் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஆய்வாளர் முனிசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இவர்கள் செய்யும் செயல்கள் நினைத்தால் நமது நினைவில் வரும் பாடல் வரிகள்                                "தர்மத் தாயின் பிள்ளைகள்                  தாயின் கண்ணை மறைப்பதா?

உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ

அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்