இராணுவத் தலைமைத் தளபதி இலங்கைப் பயணம்

பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தலைமைத் தளபதி இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளார்


ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே அக்டோபர் 12 முதல் 16 வரை பயணம் மேற்கொள்ள இலங்கை சென்றுள்ளார். ராணுவத் தலைமைத் தளபதி என்ற முறையில் இலங்கைக்கு அவரது முதலாவது பயணமாகும் இது.

இந்தப் பயணத்தின்போது அவர் அந்நாட்டின் மூத்த ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளை சந்திப்பார். இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விவாதிப்பார். பாதுகாப்பு அமைப்புகளின் மூத்த அதிகாரிகளுடனான பலநிலை சந்திப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் இந்தியா-இலங்கை இடையே மிகச்சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை ராணுவ தலைமைத் தளபதி முன்னெடுத்து செல்வார். முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடவிருக்கும் அவர், இலங்கை ராணுவத்தின் தலைமையகத்திற்கும், கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கும், இலங்கை ராணுவக் கல்விக் கழகத்திற்கும் பயணம் செய்வார்.


“மித்ர சக்தி பயிற்சி” என்ற இந்தியா-இலங்கை இடையேயான கூட்டுப் பயிற்சியின் நிறைவுப்பகுதியை ராணுவத் தலைமைத் தளபதி பார்வையிடுவார். பின்னர் பட்டலண்டாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் தளபதி மற்றும் ஊழியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களின் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார்.


இலங்கையின் மாண்புமிகு அதிபரையும் மாண்புமிகு பிரதமரையும் இராணுவ தலைமைத் தளபதி சந்திக்கவுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா