முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகக் கோவில்களில் புதிதாக அணைத்து ஜாதி அர்ச்சகர்களை நியமிக்கத் தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மனு

தமிழகக் கோவில்களில் புதிதாக அணைத்து ஜாதி அர்ச்சகர்களை நியமிக்கத் தடை விதிக்க வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மனு


 டாக்டர் சுவாமி தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை.  இது மத உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்த ரிட் மனுவை விசாரித்து தீர்ப்பு வரும் வரையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் புதிய அர்ச்சகர்களை நியமிக்கவும், ஏற்கனவே உள்ள அர்ச்சகர்களை பணிநீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். என அந்த மனுவில் கோரியுள்ளார்.




ரிட் மனு தொடர்பான விசாரணை தேதியை விரைவில் தெரிவிக்கிறேன் என டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன்சுவாமியும் சில தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில் ‘தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை, அதனால் கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை என கூறி, கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்’ எனவும் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் ஆலய வழக்கில் வெற்றி கண்டார் அதன் பின்புலப்  பார்வை :ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக் காலத்தில்




மதராஸ் மாகாணத்தில் பிரித்தானிய கட்டுப்பாடு நீதிக் கட்சியின் ஆட்சி நடந்த காலத்தில் ஹிந்து சமயக்கோயில்கள், அறக்-கட்டளைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 1923 ஆம் ஆண்டு ஹிந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

தில்லை  சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் சென்னை மாநில ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுநரிடம் கொடுத்த  முறையீட்டு மனுவிவ் 1923 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஹிந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்திலிருந்து சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

மனுவைப் பரிசீலித்து ஆளுநர், சட்டத்தில் சில பிரிவுகள் சிதம்பரம் கோவிலையும் கட்டுப்படுத்தும் எனவும், அப்பிரிவுகள் தவிர மற்றபடி சட்டம் சிதம்பரம் கோவிலுக்கு நடைமுறைக்கு வராது என உத்தரவை 1926 ஆம் ஆண்டு பிறப்பித்த படி சரத்துக்ள் படி ஸ்கீம் அல்லது திட்டம்


1) சிதம்பரம் கோவில் பரம்பரை அறங்-காவலர்கள்

2) வரவு செலவுக் கணக்கு, அவற்றை அரசுக்கு அளித்தல்

3) கோவில் நிருவாகத்தை நடத்துவதற்குத் திட்டம் வரைதல்.

4) கோவில் நிதி தொடர்பானவை. இவற்றிற்கு 1923 ஆம் ஆண்டு ஹிந்து சமய அறநிலைய மற்றும் கட்டளைச் சட்டப்-படி சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு அதாவது தீட்சிதர்களுக்கு விலக்குக் கிடையாது.


இதற்கிடையில் சிதம்பரம் கோவில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லையென அம்பலவாணன் என்பவர் 1931 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நிர்வாக ஹிந்து சமய அறநிலையத் துறை வாரியத்திற்கு (Hindu Religious Endowment Board) அப்போது. (Hindu Religious and Charitable Endowment Commission கிடையாது) ஒரு திட்டம் அல்லது ஸ்கீம் வகுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறான பக்தர்களின்  கோரிக்கையை ஏற்று அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்து பின் சில குறைகள் இருக்ஙவே கைவிட்டது. மீண்டும்

1933 ஆம் ஆண்டு அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்தது.


தீட்சிதர்கள் சார்பில் அத் திட்டத்தை எதிர்த்து (South Arcot District Civil Court) ல் வழக்குத் தொடுத்தனர். 13.3.1937 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கிய நீதிபதி அறநிலையத் துறைக்குக் கோயில் நிருவாகத்தை ஒட்டித் திட்டம் வகுக்க உரிமை உண்டு எனவும்.  அறநிலையத் துறையின் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்தது.

கடலூர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தீட்சதர்கள் மதராஸ் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சிதம்பரம் நடராசர் கோயில் பொதுக் கோயில் அல்ல. அது தனியார் கோயில். அறநிலையத் துறையின் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது. அப்படியே கோயில் நிருவாகத்திற்காகத் திட்டம் வகுக்க வேண்டும் என்றாலும் நிர்வாகத்தில் எந்தக் குறையும் சொல்லப் படாத நிலையில் திட்டம் வகுக்க வேண்டிய தேவை இல்லை. இதுவே வாதம்.      விளம்பரம் :- :-விளம்பரம்

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு எண். 306/1936, நீதியரசர்கள் வெங்கடரமணராவ், நீதியரசர் நியூசம் ஆகிய அமர்வு விசாரித்து 3.4.1939 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டதில் சிதம்பரம் கோவில் பொதுக் கோவில்-தான், தனியார் கோவிலல்ல என்பதை உறுதி செய்தனர். தங்கள் தீர்ப்பில் 1890 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் நீதிபதி முத்துச்சாமி அய்யர் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினர்..30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் முதல்வர்  எம்.ஜி.ஆர். அரசு ஆலய நிர்வாகத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகளையும் மோசடிகளையும் குறிப்பிட்டு நிர்வாக அலுவலரை நியமிக்கவிருப்பதாக ஒரு குறிப்பும் அனுப்பியது. இதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 9.8.1983 ஆம் நாள் அரசு அனுப்பிய குற்றச்சாற்றுகளுக்கு பதில் தருமாறு 9.8.1983 கேட்ட நிலை.

எம்.ஜி.ஆர்.அரசு 31.7.1987 ஆம் நாள் நான்காண்டுகளுக்குப் பின்னர் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நிர்வாத்தை மேற்கொள்ள அதிகாரியை நியமிக்கும் ஆணை பிறப்பித்தது. 


பத்தாண்டுகள் கழித்து சென்னை உயர் நீதிமன்றம் 11.2.1999  ஆம் தேதி  தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கேற்று நிர்வாக அதிகாரியைத் தமிழக அரசு நியமித்தது செல்லும் என்த் தீர்ப்பளித்தது.

தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மேல் முறையீடு வழக்குத் தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம் தீட்சிதர்கள் முறையீடு செய்ய வேண்டியது தமிழக அரசிடமே எனத்  தீர்ப்பு வழங்கியது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2006  ஆம் ஆண்டில் தீட்சிதர்களின் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நிருவாக அதிகாரியை நியமித்து வெளியிட்டுள்ள உத்தரவை உறுதி செய்தது. தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்துத்தான் தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார்கள். இந்த வழக்கில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுச் செய்து, தன்னையும் இணைத்துக்கொண்டார் அதன் பின்னர் வழக்கு வேகமெடுத்து நடந்தது.சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன்சுவாமியும் சில தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்ததில் தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை, அதனால் கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை என கூறி, கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்’ எனவும் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தமண்டபத்தில் தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியை அவமானப்படுத்தி அடித்த தீட்சதர்கள். கைகள் முறிந்தாலும் தன் உயிரே போனாலும் பரவாயில்லை, சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடாமல் விடமாட்டேன் என சட்டப்போராட்டம் நடத்திய ஆறுமுகசாமிக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதி வழங்கி ஆணையிட்டதையடுத்து, அவரை யானை மீது ஏற்றி அர்த்தமண்டபம் அழைத்து வந்தபோது, கோவில் வாசலில் திரண்டு நின்ற தீட்சதர்கள் தடுக்க முயன்று அரசு காவல்துறை உதவியுடன் சிற்றம்பல மேடையில் ஆறுமுகசாமி, தேவாரம் பாடினார்

2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திமுக அரசு, சிதம்பரம் நடராஜர் கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள் தொடர்ந்த வழக்கில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசு உத்தரவு சரி எனக் கூறி, தீட்சதர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவை எதிர்த்து டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியும்  மற்றும்  தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோவிலைக் கட்டவில்லை, அதனால் கோவிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரமில்லை எனக் கூறி, கோவில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோவிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லுமென 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய அமர்வு, கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட அதிகாரி மேற்கொள்ளலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, கோயிலின் நிர்வாகத்தை மீண்டும் தீட்சதர்கள் வசமே சட்டப்படி ஒப்படைப்பதாக 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.. இதில் வெற்றி பெற்ற டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி .முதலாம் குலோத்துங்க சோழன், முதலாம் ராஜராஜ சோழன், விக்கிரம சோழன் ஆகியோரும் இக்கோயிலுக்கு பெருங்கொடைகளை வழங்கியிருக்கின்றனர். புதுக்கோட்டை மகாராஜா சேதுபதி அவர்களால் அளிக்கப்பட மரகதக்கல் இன்றும் நடராசரை அலங்கரிக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தங்ககூரை வேயப்பட்ட பெருமையும்தில்லை நடராசர் கோயிலுக்கு உண்டு. இந்த அருங்காரியத்தை செய்தவர் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் ஆவர். 'இப்போதிருக்கும் கோயிலானது 12 அல்லது 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கோயில் மூலவராக 'கூத்தன்' என்றழைக்கப்படும் தில்லை நடராசர் வீற்றிருக்கிறார்தில்லை நடராசர் கோயில் பஞ்ச பூத ஸ்தலன்களுள் ஆகாயத்தை குறிக்கும் கோயிலாகும். சிவ பெருமானிடம் இருந்து நேரடியாக யோகக்கலையை பயின்றவர் என்ற சிறப்புடையவரான பதஞ்சலி முனிவர் தனது 'திருமந்திரம்' என்ற நூலில் இக்கோயிலை புகழ்ந்து பாடல்கள் எழுதியுள்ளார். இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணைக்கு இணங்க 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் தில்லை நடராசர் கோயிலில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்துதான் இயற்றியிருக்கிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...