விவசாயத்துறை அமைச்சகம் வடகிழக்கு மாநிலங்களின் சமையல் எண்ணெய்கள்-எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சி மாநாடு கவுகாத்தியில் நடைபெற்றது
வடகிழக்கு மாநிலங்களின் சமையல் எண்ணெய்கள்-எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சி மாநாடு கவுகாத்தியில் இன்று நடைபெற்றது.
வடகிழக்கின் முழுமையான மற்றும் சமச்சீர் வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு, எண்ணெய் பனை செடிக்கு நீரூற்றல் மற்றும் எண்ணெய் பனை தோட்டம் பற்றிய படத்தின் திரையிடலோடு மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் மாநாடு தொடங்கியது.
பரப்பளவு விரிவாக்கம், பல்வேறு மாநிலங்களுக்கான நாற்று தேவைக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, சாத்தியக்கூறு இடைவெளி கட்டண விவரங்கள், இடையீடுகள் மற்றும் இயக்கத்தின் கீழான உதவி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு வணிக உச்சிமாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
மொத்த ஒதுக்கீடான ரூ 11040 கோடியின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் 3.28 லட்சம் ஹெக்டேர்களும், நாட்டின் இதர பகுதிகளில் 3.22 லட்சம் ஹெக்டேர்களும் என மொத்தம் 6.5 லட்சம் ஹெக்டேர்கள் கூடுதல் பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படும் என்று திரு தோமர் தெரிவித்தார்.
விவசாயிகளின் மற்றும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக மிகவும் திட்டமிடப்பட்ட சமையல் பனை எண்ணெய் திட்டத்தை கொண்டு வந்ததற்காக இந்திய அரசை மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பாராட்டினார்.
கருத்துகள்