மாமல்லபுரத்தில் நாட்டு நலப்பணி திட்டம் & நேரு யுவ கேந்திராவின் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

மாமல்லபுரத்தில் நாட்டு நலப்பணி திட்டம் & நேரு யுவ கேந்திராவின் தூய்மை இந்தியா நிகழ்ச்சி 


நாட்டு நலப்பணி திட்டத்தின் சென்னை மண்டல அலுவலகம் மற்றும் நேரு யுவ கேந்திரா, காஞ்சிபுரம் மாவட்டம் இணைந்து மாமல்லபுரம் கடற்கரை மற்றும் அங்குள்ள பாரம்பரிய சுற்றுலாத் தளங்களில் தூய்மை இந்தியா நிகழ்ச்சியை நடத்தின.


நாட்டு நலப்பணி திட்டம், எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி மற்றும் நேரு யுவ கேந்திரா இளைஞர் பிரிவை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தன்னார்வலர்கள் இதில் பங்கேற்று 42 கிலோ கழிவுகளை அப்புறப்படுத்தினர்.


திரைப்பட நடிகையும் சமூக ஆர்வலருமான டாக்டர் ஷர்மிளா, நாட்டு நலப்பணி திட்ட மண்டல இயக்குநர் திரு சாமுவேல் செல்லையா, எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வி ஈ அண்ணாமலை மற்றும் மாமல்லபுரம் தாசில்தார் திரு ஏ சிவசங்கரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா