சிறப்பு குறை தீர்வு முகாம் இந்திய அஞ்சல் துறை சார்பாக, இலஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 26.10.2021 முதல் 01.11.2021 வரை கொண்டாடப்படுவதின் ஒரு பகுதியாக? வரும் 28.10.2021 அன்று காலை 11.00 மணியளவில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில்
சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளது. ஆகையால் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை-600 002 வாயிலாக தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின்? அவற்றை தபால் வாயிலாகவோ அல்லது doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 26.10.2021-க்குள் தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 அவர்களுக்கு “சிறப்பு குறை தீர்வு முகாம்” என்ற தலைப்பில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பயனாளிகள் விருப்பப்பட்டால் 28.10.2021 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கும் சிறப்பு குறை தீர்வு முகாமில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தமிழகத்தின் வாடிக்கையாளார்களுக்கு அஞ்சல் படிவங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்படுமென அஞ்சல்துறை சார்பில் அஞ்சல் துறை பொது மேலாளர் பி. செல்வக்குமார, மதுரை மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு உறுதி அளித்த நிலையில்
அஞ்சல்த்துறை படிவங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய நிலையில் தமிழ் மட்டுமே தெரிந்த பொதுமக்கள் மணி ஆர்டர் மற்றும் சிறு சேமிப்புக் கணக்கு சேவைகளை பயன்படுத்தும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் படிவங்கள் இருப்பது அவர்களுக்கு சிரமத்தை தருவதாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்க்பட்டுள்ளது என்று அஞ்சல்துறை பொது மேலாளார் கூறினார். மேலும் வாடிக்கையாளார்கள் தொடர்பான அனைத்து படிவங்களும், சேமிப்பு திட்டங்கள், மணி ஆர்டர் தொடர்பான படிவங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் அச்சிட்டு அனைத்து தபால் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும்
என்றும் அவர் கூறிய படி தற்போது அது நடைமுறையில் வருகிறது.
கருத்துகள்