பாரதப் பிரதமர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இடையே கிளாஸ்கோவில் சிஓபி 26 ஐ ஒட்டி இருதரப்பு சந்திப்பு

பாரதப் பிரதமர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இடையே கிளாஸ்கோவில் சிஓபி26 ஐ ஒட்டி இருதரப்பு சந்திப்பு

2021 நவம்பர் 1, அன்று கிளாஸ்


கோவில் நடைபெற்ற சிஓபி26 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன் எம்.பி.யை பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்தித்தார்.

2. சிஓபி26 மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காகவும், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய நடவடிக்கையை முன்னெடுப்பதில் அவரது தனிப்பட்ட தலைமைத்துவத்திற்காகவும்  இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்தார். காலநிலை நிதி, தொழில்நுட்பம், புத்தாக்கம், இயற்கை ஹைட்ரஜன் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, ஐஎஸ்ஏ, சிடிஆர்ஐ கீழ் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் பிரிட்டனுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


3. குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், மக்களுடன் இருந்து மக்கள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து துறைகளில் பகுதிகளில் 2030-க்கான முன்னுரிமைத் திட்டங்கள் செயல்படுத்துவதை இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டாண்மையை வழங்குவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.


4. ஆப்கானிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்பு, இந்தோ-பசிபிக், விநியோகத் தொடர் விரிவாக்கம் மற்றும் கொவிட்டுக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு ஆகயிவற்றில் உள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

5. பிரதமர் ஜான்சனை விரைவில் இந்தியாவில் வரவேற்க விரும்புவதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சி மாநாட்டில் ‘செயல் ஒற்றுமை-முக்கியமான தசாப்தம்’ என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்றினார்.

மேன்மையாளர்களே,

நண்பர் போரிஸ் அவர்களே, ஏற்றுக்கொள்ளுதல் பற்றிய முக்கியமான பிரச்சனையில் எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு  நன்றி!

உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தில் வெப்பமயமாதல் தடுப்பு போன்ற முக்கியத்துவத்தை வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு இது அநீதியாகும்.

இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குக் காலநிலை மாற்றம் ஒரு பெரிய சவாலாக உள்ளது - சாகுபடி முறை மாறுவது, பருவ மழை பொய்த்துப் போதல், அதிக மழை மற்றும் வெள்ளம் அல்லது அடிக்கடி ஏற்படும் புயல்களால் பயிர்கள் சேதம் ஆகியவற்றை சந்திக்கின்றனர். குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மீள்தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

மேன்மையாளர்களே,

இந்தச் சூழலில் எனக்கு மூன்று கருத்துக்கள் உள்ளன. முதலில், நமது வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் ஏற்றுக்கொள்ளுதலை முக்கியப் பகுதியாக மாற்ற வேண்டும். 'நல் சே ஜல்'- அனைவருக்கும் குழாய் நீர், 'ஸ்வச் பாரத்'- தூய்மை இந்தியா மற்றும் 'உஜ்வாலா'- இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமையல் எரிவாயு போன்ற திட்டங்கள், எமது ஏழைக் குடிமக்களுக்கு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன. இரண்டாவதாக, பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்குப் போதுமான அறிவைக் கொண்டுள்ளன.

நமது ஏற்றுக்கொள்ளல் கொள்கைகளில் இந்தப் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அறிவு ஓட்டம் புதிய தலைமுறைக்குக் கடத்தப்படும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு இணங்க வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதும் ஏற்றுக்கொள்ளலின் முக்கிய தூணாக இருக்கலாம். மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளல் முறைகள் உள்ளூர் நடைமுறையாக இருக்கலாம், ஆனால் பின்தங்கிய நாடுகள் அவற்றுக்கு உலகளாவிய ஆதரவைத் தர வேண்டும்.

உள்ளூர் ஏற்றுக்கொள்ளலுக்கு உலகளாவிய ஆதரவு என்ற யோசனையுடன், பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் முன்முயற்சியை இந்தியா எடுத்துள்ளது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா