போலந்தில் ஐஎஸ்எஸ்எப் மற்றும் பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

போலந்தில் ஐஎஸ்எஸ்எப் (சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு) அதிபர் கோப்பைக்கான போட்டியில் பதக்கங்கள் வென்ற மனு பாகெர், ராகி சர்னோபத், சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து.

போலந்தில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பைக்கான போட்டியில் பதக்கங்கள் வென்ற மானு பாகெர், ராகி சர்னோபத், சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது;

போலந்தில் ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்ற ரியல்மானுபாகெர், சர்னோபத்ராஹி, எஸ்.சவுத்திரி மற்றும் அபிஷேக் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களின் அற்புதமான செயல்பாடுகளால், இந்திய மக்கள் பெருமையடைகின்றனர். இந்த விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.’’எனவும் மேலும் பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள்  வென்ற ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது:  


‘‘ பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள்  வென்றதற்காக ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  இவர்களின் செயல்பாடு சிறப்பானது மற்றும் நாடு முழுவதும் மல்யுத்தம் மேலும் பிரபலமடைவதற்கு பங்களிப்பை வழங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா