வனங்களின் முதன்மை பாதுகாப்பாளர், வன பாதுகாப்பு படை தலைவர்களின் மாநாடு:

வனங்களின் முதன்மை பாதுகாப்பாளர், வன பாதுகாப்பு படை தலைவர்களின் மாநாடு: மத்திய இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தலைமை தாங்கினார்


வனங்களின் முதன்மை பாதுகாப்பாளர், வன பாதுகாப்பு படை தலைவர்களின் மாநாட்டுக்கு  மத்திய இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே இன்று தலைமை தாங்கினார். வனங்களில் உள்ள பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள்,  உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான கருத்துக்கள் குறித்து ஆலோசிக்க இந்த மாநாட்டை சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்தியது.

வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வனங்களை மாற்றுவதற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை ஒழுங்குபடுத்துவது, வனங்களுக்கு வெளியே மரங்களை அதிகரிப்பது, மரம் வளர்ப்பவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, நகர் வன திட்டத்தை அமல்படுத்துவது, நகர்புறங்களை பசுமையாக்குவது, ஆறுகளை புதுப்பிப்பது, வன ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

எளிதாக தொழில் செய்வதற்கான அவசியமான விஷயங்கள், மரம் வளர்க்க மக்களை ஊக்குவிப்பது, சவால்களுக்கு ஏற்றபடி வனபாதுகாப்பு படையின் பணி சூழலை மாற்றுவது  போன்ற விஷயங்களில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். காடு வளர்ப்பு, வன மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் புதுமையான நடவடிக்கைகள் மற்றும் சிறந்த முறைகளை  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பின்பற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா