விமான நிலைய ஆலோசனைக்குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

விமான நிலைய ஆலோசனைக்குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது


விமான நிலையத்தின் வளர்ச்சி அம்சங்கள் மற்றும் பயணிகள் வசதிகள் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும், சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு டி.ஆர்.பாலு தலைமை வகித்தார்.


விமான நிலைய வளர்ச்சிக்கு தடையாக உள்ள நிலப்பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் முதன்மையாக கலந்துரையாடப்பட்டது. மாநில அரசின் வருவாய் துறை, ராணுவம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்து இவற்றுக்கு தீர்வு காணுமாறு சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். மாநில அரசின் தீவிர பரிசீலனையில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் முன்மொழிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


பறவைகள் தாக்குதல் விமான நிலையத்திற்கு கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு விமான நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதால், இதை எதிர்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி, கண்டோன்மென்ட் வாரியம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலைய இயக்குநர் டாக்டர் ஷரத் குமார் முக்கிய புள்ளி விவரங்களை விளக்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா