கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் நிலவரத்தை அறிய கோவின் இணையதளத்தில் புதிய அம்சம்

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் நிலவரத்தை அறிய கோவின் இணையதளத்தில் புதிய அம்சம்


கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் நிலவரத்தை அறிய, கோவின் இணையதளத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. 


இது ஒருவர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளாரா என்பதை எளிதில் சரிபார்க்க உதவும். டிராவல் ஏஜென்சிகள், அலுவலகங்கள், ஊழியர்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள், ஐஆர்சிடிசி, அரசு அலுவலகங்கள்  போன்றவை இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


தடுப்பூசி நிலவரத்தை  அறிந்து கொள்ளும் வசதியின் சிறப்பம்சங்கள்:


கொவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. சேவை அளிக்கும் நிறுவனங்கள், ஒருவரின் தடுப்பூசி நிலவரத்தை அறிவதற்கும் இந்த புதிய வசதி உதவும். ஒருவர் கொரோனா தடுப்பூசி போடவில்லை, ஒரு டோஸ் மட்டும் செலுத்தியுள்ளார், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பதை இது தெளிவாகக் காட்டிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா