உயர் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி (5 ஆண்டு காலத்திற்கு) நிதியுதவி

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களை உருவாக்குதல்உயர் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி (5 ஆண்டு காலத்திற்கு) நிதியுதவி வழங்கியிருப்பதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை வழங்கும் விதமாக, அரசு மற்றும் தனியார் சார்பில் தலா 10 கல்வி நிறுவனங்களை தொடங்கி அவற்றுக்கு உயர் சிறப்புக் கல்வி நிறுவனத் தகுதியை வழங்க 2017 ஆம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டதாக கூறியுள்ளார். இதுவரை, இது போன்ற 11 நிறுவனங்களை (அரசு சார்பில் 8, தனியார் 3) தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிறுவனங்களுக்கு கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்களில் ஓரளவுக்கு தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு.சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்