சிவகங்கையில் சட்ட, மற்றும் வேளாண்மைக் கல்லூரியைத் துவக்க கோரிக்கை வைத்து கடையடைப்புப் போராட்டம்.

சிவகங்கையில் சட்ட மற்றும் வேளாண்மைக் கல்லூரியைத் துவக்க கோரிக்கை வைத்து கடையடைப்புப் போராட்டம்.


சிவகங்கையில் சட்டக் கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் இன்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள் மற்றும் வர்த்தக சங்கம் ஈடுபடுகின்றனர்.

சிவகங்கையில் சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் இன்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கையில் சட்டக் கல்லூரியும் வேளாண் கல்லூரியும் அமைத்து தரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். திமுக வெற்றி பெற்ற பின்பு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சட்டமன்றத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு சட்டக்கல்லூரியும், வேளாண் கல்லூரியும் இந்த ஆண்டு துவங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்தார். சிவகங்கை மாவட்டத் தலைநகராகவும் மற்றும் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள நிலையில் 

மாவட்ட மற்ற மக்கள் அதிகம் வாழும் பிற பகுதிகளில் அமையவேண்டும் என்பதே மாவட்ட மக்களின் கோரிக்கை உள்ள நிலையில் இதை வலியுறுத்தி காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் முயற்சியில் கொண்டு வரப்படுகிறது.

ஆனால் சட்டக் கல்லூரியும், வேளாண்மை கல்லூரியையும் காரைக்குடியில் அமைய இருப்பதாக தகவல் தெரிய வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகர் சிவகங்கையில் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என தெரிவித்து அந்த பகுதியில் பல்வேறு அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு அறிவித்துள்ள புதிய சட்டக் கல்லூரியை சிவகங்கையில் தொடங்க வேண்டும் என தெரிவித்து வணிகர்கள் சங்கம் சார்பில் நகர் பகுதிகளில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுவாக உள்ள நீதி மாவட்டத்தில் சிவகங்கையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள நிலையில் மாவட்டத்தில்  சிவகங்கை தவிர்த்து பரவலாக சட்டக் கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி அமைய வேண்டும் அதுவே நியாயமான நிகழ்வாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்