ஆண்டிபட்டி மருத்துவ செவிலியர் கொலையாளி செல்லுலார் தொலைபேசி மற்றும் கால் தடத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மருத்துவ செவிலியர் கொலையாளி  கால் தடத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு.!  ஆண்டிபட்டி அரசினர் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் செல்வி மர்மமான  கொலை சம்பவத்தில் நடந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.


திண்டுக்கல்ல் செல்வி (வயது 45) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் அரசினர் மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்தவர்.  சில ஆண்டுகளாக ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் தங்கி ஆண்டிபட்டி அரசினர் தலைமை மருத்துவமனையில் செவிலியராக செல்வி பணிபுரிந்த நிலையில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அவர் வசிக்கும் வாடகை வீட்டில் மர்மமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நிலையில். இச் சம்பவம் பற்றி ஏற்கனவே செய்தி வெளிவந்தது .தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து கொலை நடந்த வீட்டில் ரத்த மாதிரிகள், கைரேகை, கால் பாதம், முடி உள்ளிட்ட தடயங்களை சேகரித்து தடம் அறிவியல் துறை  ஆய்வுக்காக சென்னை அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக் குற்றவாளிகளைப்  பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையில் தீவிரமாகத் தேடி வந்ததனிடையே உயிரிழந்த செல்வியுடன் தொடர்பிலிருந்த நபர்களின் செல்லுலார் எண்களை சேகரித்து, சந்தேகத்தின் அடிப்படையில் பிச்சம்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறை நடத்திய. விசாரணையில் தாமோதரன் சம்பவம் நடந்த நாளன்று, தேனியிலிருந்து கொண்டு, திருப்பூரில் இருப்பதாகக் கூறியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது அவரை கைது செய்வது குறித்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தாமோதரனின் கைரேகை செல்வியின் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையுடன் பொருந்தாததால் கைது நடவடிக்கை அப்போது ஸகைவிடப்பட்டது. இதனால் சரியான கொலையாளியைக் கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே விசாரணைக்கு வந்தவர்களிடம் எடுக்கப் பட்ட கைரேகை மற்றும் கால் பாதம் அடையாளங்களை மீண்டும் விசாரணைக்கு வருபவர்களிடம் எடுக்கத் திட்டமிட்டு எடுத்தனர்.


அதன்படி டிசம்பர் 9 ஆம் தேதி தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டி ராமச்சந்திரபிரபு (வயது 34) கம்பம் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணிபுரிந்தவர் விசாரணைக்கு வந்தபோது காவல்துறையின் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளிக்கவே சந்தேகமடைந்த காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு மறுநாள் காலை வருமாறு எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு  அனுப்பி வைத்த நிலையில்


மறுநாள் 10ஆம் தேதி காலை ராமச்சந்திரபிரபு உத்தமபாளையம் பகுதியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், ஒரு கால் பாதத்தின் அளவு பொருந்தி இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்த கால் பாதத்தின் அளவு இறந்த ராமச்சந்திர பிரபு கால் பாதத்தின் அளவு என்பதும் தெரியவர. இவர், ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது காவல்துறையில் சிக்கக்கூடாது என நினைத்து, கால் பாதத்தின் அளவை சுருக்கி காண்பித்துச் சென்றதும், இரண்டாவது விசாரணையில் கால் பாதம் ஒரே மாதிரியாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காவல்துறையின் விசாரணையில், கொலையுண்ட செல்வியுடன், ராமச்சந்திரபிரபு கடைசியாக தொடர்பு கொண்டதும் தெரிய வந்துள்ளது. கொலை நடந்த அன்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ராமச்சந்திர பிரபு சென்று வந்த காணொளிக் காட்சிகளில் பலவும் காவல்துறை வசம் கிடைத்துள்ளதும். இறந்த செல்வி அணிந்திருந்த 32 கிராம் தங்க நகையை எடுத்துச் சென்று பழனிசெட்டிபட்டி தனியார் வங்கியில் அடமானம் வைத்து ₹.75 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது. அடமானம் வைக்கப்பட்ட தங்க செயின், செல்வி அணிந்திருந்தது தான் என்பதை செல்வியின் கணவர் சுரேஷ் உறுதி செய்ததைத்

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வி, தற்கொலை செய்து கொண்ட ராமச்சந்திரபிரபுவும், ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றியவர்கள். என்பதும் அப்போது இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவிருந்ததும், ராமச்சந்திரபிரபு, செல்விக்கு லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்த நிலையில்

சம்பவம் நடந்த அன்று செல்வியின் வீட்டிற்கு, ராமச்சந்திரபிரபு சென்று பணத்தை திரும்பக் கேட்டிருக்கலாம் என்றும், அப்போது நடந்த தகராறில் ராமச்சந்திரபிரபு தாக்கியதில் செல்வி இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதன் பின்னர், செல்வி அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை எடுத்துச் சென்று பழனிசெட்டிபட்டியிலுள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்திருக்கலாமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தன்னை நெருங்கி வருவதை அறிந்து ராமச்சந்திர பிரபு, எப்படியும் தன்னைப் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்காவல்துறையினர் தெரிவித்துள்ளது .இனி காவல்துறை சார்பில் உரிய நீதிமன்றத்தில் தாக்கலாகும் குற்றப்பத்திரிகை மூலம்  தெரிய வரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்