ஜெகதளா பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் சிலர் அரசை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி

இல்லாத பெயரில்  போலியான மகளிர் சுயஉதவிக்குழு உள்ளதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள்.


நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகாவிலுள்ள ஜெகதளா பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் சிலர் கட்டுமான அனுமதி மற்றும் போலியான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் முறைகேடாக வருவாய்  ஈட்டி(சுருட்டி)வருவதாக ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு த்துறையினருக்குப் புகார்கள் வந்த நிலையில்., நேற்று மதியம் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத 4.5 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சில முக்கிய ஆவணங்களையும்  கைப்பற்றிச் சென்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் விசாரித்தபோது, ``இல்லாத பெயரில் போலியான மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்கி, கையாடல் செய்திருக்கின்றனர். சோதனையில் கணக்கில் வராத 4,53,600 ரூபாய் ரொக்கம் சிக்கியிருக்கிறது. இளநிலை உதவியாளர் கருமலையப்பன், மற்றொரு பணியாளரிடம் விசாரணை நடத்திவருகிறோம். மேலும் ஒரு சில பேரூராட்சிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் வந்திருக்கின்றன. அது குறித்தும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.
ஊழல் மளிந்துவிட குற்றம் என்பது தெரிந்தே தவறு செய்த அரசு ஊழியர்கள் தண்டனை இல்லை என்ற நிலை தற்போது நிலவுவதே முக்கிய காரணமாகிறது 1990 காலகட்டத்தில் மக்களின் சேவைகள் உணர்ந்து செயல்பட காரணமாக இருந்தது தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமே காரணம் அது கடந்த காலத்தில் நடந்த ஊழல் மிகுந்த ஆட்சி நிர்வாக முறை தான் இதை தடுக்க சட்ட வழி நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
நல்ல அதிகாரிகள் நல்ல அரசு அமைந்துள்ளது இருந்தும் ஊழல் வாதிகள் பெருகியது அரசின் மீதும் மக்களின் மீது ஜனநாயகத்தின் மீது


  பயம் இல்லாமல் போன நிலை தான் இது போன்ற ஊழல் பெருச்சாளிகள் உருவாகக் காரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்