முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈஷா யோக மையம் தமிழகத்தின் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதென . இ.கம்யூனிஸ்ட் கட்சி புகார்

ஈஷா யோக மையம் தமிழகத்தின் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதென . இ.கம்யூனிஸ்ட் கட்சி புகார் 


ஈஷா யோகா அறக்கட்டளையின் வன நில ஆக்கிரமிப்புடன்  சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் :-


ஈஷா யோகா அறக்கட்டளை கோயமுத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமான கட்டுமானங்களைக் கட்டியுள்ள நிலையில் இது சம்மந்தமான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிந்த போது தமிழக அரசு வனத் துறை அதிகாரிகள் வன நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிப்பதாகும் பதில் தவறானதாகும்.

ஈஷா யோகா அறக்கட்டளை கோயமுத்தூர் வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளது. இக்கட்டிடங்கள் அமைந்துள்ள இடங்கள் காலம்காலமாக யானைகள் பயன்படுத்திவரும் வழித்தடத்திலேயே அமைந்துள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் வனத்துறையினரிடம் உள்ளது. பல சமயங்களில் வனத்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

அத்துடன் ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தில் தான் அமைந்துள்ளதென மத்திய தணிக்கை அதிகாரி (CAG Report) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு அப்போதைய கோவை கோட்ட வன அலுவலர் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் அவர்களுக்கு எழுதிய 17.08.2012 தேதியிட்ட ந.க.எண்;வ1/8120/2011 எண்ணுள்ள கடிதத்தில் இதுபற்றி தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.


யானை வழித்தடங்கள், காணுயிர் வாழிடங்கள் வலசைகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் யானைகளும் மற்ற விலங்குகளும் குடியிருப்புகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதங்களை விளைவிக்கின்றன. மனித, விலங்கு மோதல்களும், இருதரப்பு உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறை வழங்கிவரும் இழப்பீடு விபரங்களில் இந்த உண்மையைக் காண முடியும்.


ஈஷா யோக அறக்கட்டளையின் கட்டிடங்கள் தனியாருக்குச் சொந்தமான பட்டா இடம் என்றாலும் அவை பல்வேறு அரசாணைகளையும் விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டதாகும். வருவாய் வாரிய நிலை ஆணை (B.S.O) எண் 15-35(3) இன் படி வன எல்லையிலிருந்து பட்டா நிலங்களுக்கிடையில் 2 முதல் 3 சங்கிலி ( 500 மீட்டர்) வரை இடைதாங்கு மண்டலம் Buffer Zone எனப்படுகின்ற இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த இடைதாங்கு மண்டலம் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரால் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் ஈஷா யோகா அறக்கட்டளையினர் வன எல்லை தொடக்கத்திலிருந்து சுற்றுச்சுவர் மற்றும் முன்பக்க நுழைவாயிலை அமைத்துள்ளனர்.

மேலும் ஈஷா யோகா அறக்கட்டளையின் அனைத்து கட்டிடங்களும் காப்புக்காட்டின் எல்லையிலிருந்து 1.70 மீட்டர் தொலைவு முதல் 473 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ளது. ஆகவே இந்த கட்டுமானங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது. அரசு ஆணைகளையும், பல்வேறு துறைகளின் தடையின்மைச் சான்றுகளைபீ பெறாமலும், விதிமுறைகளை மீறியுள்ளது. மேலும் விதி 4 (3) ன்படி பொது வழிப்பாடு அல்லது மதப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

ஆனால் ஈஷா யோகா அறக்கட்டளை மேற்படி மலைதள பாதுக்காப்புக் குழுமம் மற்றும் பிற அரசுத் துறைகளிடம் முன் அனுமதி பெறாமல் 42.77 ஏக்கர் நிலப்பரப்பில் முதலில் 63380 ச.மீ. பரப்பளவில் கட்டிடங்கள் எழுப்பியுள்ளதுடன் 1994 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பல்வேறு கட்டிடங்கள், குளம், தீர்த்தக் குண்டங்கள், தியான மண்டபங்கள், நடைபாதை, அலங்காரத் தோட்டம், விளையாட்டு மைதானம், வாகனங்கள் நிறுத்துமிடமென 4,27,700.00 ச.மீ. பரப்பளவில் மேற்சொன்ன வகையில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு புதிய கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். பல்வேறு அரசுத்துறை மற்றும் வனச்சரக அலுவலர்கள் கடிதங்கள் வாயிலாக எச்சரித்தும் ஈஷா யோகா அறக்கட்டளை தனது சட்டவிரோதமான கட்டுமானங்களை நிறுத்தவில்லை.

2016 ஆம் ஆண்டு ஈஷா யோகா அறக்கட்டளை மேற்படி இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலையும் அதனையொட்டி லட்சம் ச.மீ. பரப்பளவில் கட்டிடங்களும் எழுப்பியுள்ளனர். இந்தச் சிலையும் கட்டுமானங்களும் மேற்சொன்ன வகையில் மலைதள பாதுகாப்புக் குழுமம் மற்றும் பிற அரசுத் துறைகளின் முன் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அனுமதியை பரிசீலித்தாலும் 300 சதுர மீட்டருக்கு மட்டும் தான் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அதை மீறி ஆதியோகி சிலையைச் சுற்றி தியான மண்டபங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்கா என ஒரு லட்சம் சதுரடிக்கு மேல் கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அனுமதியும் கூட உண்மையில் விதி மீறல் அதிகார மீறலாகும். ஆட்சியர் உத்தரவில், அப்பகுதியிலுள்ள நிலங்களுக்கு எந்தவித நீர்ப்பாசன வசதியும் இல்லை. நிலத்தடி நீராதாரம் மட்டுமே உள்ளது. கள ஆய்வின் போது எவ்வித பயிர்களும் இல்லை, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்படவில்லை என சான்று வழங்கப்பட்டது.

நீர்வழிப்பாதைகள் திசை திருப்பப்படுவதற்கான சாத்தியங்களோ நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான சாத்தியங்களோ இல்லை அதனால் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு அனுமதி அளிப்பதாக ஆட்சியர் உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் நீலியாறு, நீலியணை, ராஜவாய்க்கால், மிகப்பெரிய உக்குளம் உள்ளிட்ட வருடம் முழுவதும் வற்றாத நீராதாரங்கள் உள்ளன. வருடம் முழுவதும் விவசாயம் செய்யக்கூடிய பகுதியாக உள்ளது. ஆனால் இந்த உண்மைகளை மறைத்து மேற்படி உத்தரவளிக்கப்பட்டுள்ளது.

ஈஷாவின் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு தடை விதிக்கவும், இடிக்கவும் கோரி வெள்ளியங்கிரி மலை வாழ் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் முத்தம்மா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு (W.P.No 3556/2017) தாக்கல் செய்து அது தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துணை இயக்குநர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது.

மத வழிபாடு மற்றும் மேம்பாட்டிற்காக ஈஷா யோகா மையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இக்கரை போளூவாம்பட்டி பகுதியில் சிவன் சிலை அமைப்பதற்கும் அதைச் சுற்றி கட்டுமானம் கட்டுவதற்கும் 08.10.2016 மற்றும் 15.02.2017 ஆகிய தேதிகளில் 19.86 ஹெக்டேர் விளை நிலத்தை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இருந்தபோதிலும், இக்கரை போளுவாம்பட்டியில் கட்டுமானங்களை மேற்கொள்ள மலைதள பாதுகாப்புக் குழுமம் மற்றும் வனம், வேளாண், மண்ணியல், சுரங்கத் துறைகளிடம் அனுமதி பெற வேண்டும் என ஈஷா மையத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உரிய அனுமதியின்றி 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாக கட்டுமானங்களை ஈஷா யோகா மையம் கட்டியுள்ளதால். அதை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு கடந்த அ.தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு ஈஷா யோகா மையத்தின் மேற்படி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானதென கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  அத்தகைய சட்டவிரோதமான கட்டுமானங்களை இடிக்க உத்திரவிட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஈஷா யோகா அறக்கட்டளையின் மேற்படி சட்டவிரோத கட்டுமானங்களால் அப்பகுதியின் இயற்கைவளம், சுற்றுச்சூழல், பச்சையம், நீர்மை, வேளாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், காணுயிர் வாழிடம், வலசைகள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஓடைகள், மழைக்கால நீரோடைகள், காலங்காலமாக வேளாண் குடிகள் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதைகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.

பழங்குடி மக்களின் வாழ்விடங்கள், பாரம்பரிய நீராதாரங்கள், வழித்தடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மனித விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி மக்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, தமிழக அரசு மேற்கண்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்துள்ள பதிலை திருத்தம் செய்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஈஷா யோகா நிறுவனத்திற்கு துணைபோவதாக தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது என வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், உண்மைக்கு மாறான பதிலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கிய அதிகாரி மீது உரிய நவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஈஷா யோகா அறக்கட்டளையின் வன நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமான கட்டுமானங்களை அகற்றவும் நடடிவக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என  கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன