வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் நினைவிடம் அருகில் மகள் முனைவர் உமையாள் இராமநாதன் சிதைக்கு மகன் தீமூட்ட நல்லடக்கம்

வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் மகளான முனைவர் உமையாள் இராமநாதன் உடல் இன்று  காலை 07.00 மணி முதல், 11.00 மணிக்கு காரைக்குடியில் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் மகன் ராம.வைரவன் தீமூட்ட நல்லடக்கம் நடந்தது 


வள்ளல் டாக்டர் ராம.அழகப்பசெட்டியார் மகளும் அழகப்பா பல்கலைக்கழக ஆயுள் கால ஆட்சிமன்றக்குழு உறுப்பினரான முனைவர் உமையாள் ராமநாதன் 12 டிசம்பர் 2021 ஆம் தேதி சென்னையில் காலமானவருக்கு வயது 92. அவரது இறுதி அஞ்சலியும், நல்லடக்கமும், 


புதன் கிழமை காலை 11 மணியளவில் அழகப்பா கலைக் கல்லூரி வளாகத்திலுள்ள பவநகர் ஸ்டேடியத்தில் துவங்கி நடந்தது.

முன்னதாக, செவ்வாய் கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை பூந்தமல்லியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் இன்று காலை காரைக்குடி அழகப்பாபுரம் பவநகர் ஸ்டேடியத்தில் காலை 07 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டதைத் தொடர்ந்து காலை 11.00 மணியளவில்


டாக்டர் உமையாள் ராமநாதன் உடலுக்கு மகன் ராம.வைரவன் சிதைக்குத் தீமூட்ட நல்லடக்கம் செய்யப்பட்டது. தந்தை வள்ளல் டாக்டர் அழகப்பர் சமாதியருகே, மகள் உமையாள் உடல் தகனம் செய்யப்பட்டது

நாட்டார்கள், நகரத்தார்கள், ஊரார்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், காரைக்குடி சட்டமன்றப் பேரவை உறுப்பினர் எஸ். மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பு டாக்டர். ஆர். சுவாமிநாதன், டாக்டர். கருப்புச்சாமி, ஆகியோர் தகன மேடையில்  இறுதி அஞ்சலி செலுத்தினர். மகன் வைரவன் சிதையில் தீ மூட்டினார். சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி, 

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி மற்றும் தேசிய மாணவர் படையினர், கல்வித்துறைப் அலுவலர்கள் அரசு பணியாளர்கள், பத்திரிக்கை துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்