தொல்காப்பியத்தின் மொழி பெயர்ப்புப் புத்தகங்களை மத்திய இணை அமைச்சர் வெளியிட்டார்

தொல்காப்பியத்தின் இந்தி மொழி பெயர்ப்பு, செம்மொழி தமிழ் இலக்கியத்தின் 9 கன்னட மொழி பெயர்ப்பு புத்தகங்கள் : மத்திய இணை அமைச்சர் வெளியிட்டார்


தொல்காப்பியத்தின் இந்தி மொழி பெயர்ப்பு மற்றும்  செம்மொழி தமிழ் இலக்கியத்தின் 9 கன்னட மொழி பெயர்ப்பு புத்தகங்களை  மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஷ் சர்கார் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறியதாவது:

இந்திய கலாச்சார பாரம்பரிய வரலாற்றில், தமிழ் மொழி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த வளமான பாரம்பரியத்தில், சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியம் ஆகியவை ஒரு பகுதியாக உள்ளன. இந்த பாரம்பரியத்தால் நாடு பெருமை அடைகிறது.  இந்த புத்தகங்களில் உள்ள இலக்கிய வளம் மற்றும் அறிவை மக்கள் விரும்பி படிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தி மற்றும் கன்னட மொழிகளில், இந்த மொழி பெயர்ப்பை கொண்டு வந்ததில் சிறப்பான பங்களிப்பை அளித்த மொழி பெயர்ப்பாளர்களுக்கும் செம்மொழி மையத்துக்கும் வாழ்த்துக்கள். இந்த மொழி பெயர்ப்பு புத்தகங்கள் முக்கியமானவை. இந்த மொழி பெயர்ப்பு விரிவான வாசகர்களை பெறுவதோடு மட்டுமல்லாமல், புதிய வார்த்தைகள் அறிமுகம் செய்வதன் மூலம் மொழிகளையும் வளப்படுத்துகிறது. 

இவ்வாறு மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், செம்மொழி தமிழ் மத்திய மையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் சுந்தரமூர்த்தி, இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்