காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பத்துடன் கூடிய 16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு

 ஏறு தழுவுதல் என்பது காளையை அடக்குவது குறித்த நமது பாரம்பரிய வீரவிளையாட்டு. சங்க கால இலக்கியங்கள்


கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணியில் ஏறு தழுவுதல் குறித்த செய்திகள் உண்டு. தற்போதய சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் ஒன்றில் எருதுடன் வீரவிளையாட்டில் பங்கேற்று இறந்து போனவனைப் போற்றுகின்றது. 

காளையின் கொம்புகளைத் தன்  கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பத்துடன் கூடிய கல்வெட்டாக உள்ளது இந்த நடுகல். அதில்

கல்வெட்டு கூறும் செய்தி: 

கோவுரிச்சங்கன்  கருவந்துறையிலே எருதுவிளையாட்டே பட்டான்

சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு...

கோவுரிச்சங்கன் கருவந்துறை என்ற இடத்தில் எருது விளையாட்டில் பங்கு கொண்டு இறக்க அவனுடைய மூத்த மகன் நடுகல் எடுப்பித்தான் என்ற செய்தியை பகிர்கிறது இந்த பதினாறாம் நூற்றாண்டு நடுகல். தமிழர்திருநாள். நல்வாழ்த்துகள்.           

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 


அவை முறையே போகி, பொங்கல், மாட்டு  பொங்கல், காணும் பொங்கல்.

போகி என்பதை போக்கி  தவறாகப் புரிந்து கொண்டு பழையனவற்றை போக்கும் நாள் என்கிறார்கள். எப்போதுமே சுத்தபடுத்தும் நாளைத் தமிழன் திரு நாளாகக் கொண்டாடியதில்லை.


விளைச்சல் என்பது போகம் எனப்படும். போகத்துக்குரியவன் நிலத்திற்கு உரிமையுடயவன்.

போகத்துக்குரியவன் விழா போகி.

வயலில் இறங்கி உழைக்கும் உழவனுக்கு 

உள்ள விழா பொங்கல்.

அவனுக்கு பயன்படும் மாடுகளுக்கான விழா 

மாட்டுப் பொங்கல்

அந்த உணவைப் பகிர்ந்து கொள்ளும் 

நிலமும் இல்லாத உழவும் செய்யாத பொதுமக்களின் விழா 

காணும் பொங்கல்.

இது தான் வரிசை;-
நிலத்துக்குரியவன்,உழவன், காளை,  பொதுமக்கள்.

நான்கு நாட்கள் விழாவிலும் பொங்கல் என்பது திறந்த இடத்திலேயே வைக்கபடும். 

அது வானுக்குச் சொல்லும் நன்றி.

இப்படி ஒரு நன்றி சொல்லும் விழா எந்த வேற்று இனத்திலும் இல்லாத விழா. 

அந்த விழாவை ஆயிரம் மடங்கு அதிகமாக கொண்டாடுவோம்.  

ஹோலி கொண்டாடும் இந்தத் தலைமுறை பொங்கல் விழாவை கொண்டாட மறுக்கிறது. 

நன்றி மறப்பது தவறு என்று அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்லி 

பொங்கல் விழாவைக் கொண்டாடச் செய்வோம்.

அனைவருக்கும் உழவர் திருநாளாம் தமிழர்களின் தைத்திருநாளில் திருவள்ளுவர் தினம்

பொங்கல் திருநாள்  நல்வாழ்த்துகள். நல்லா கவனியுங்கள் சொற்களை.     ஓடிசாவில் பாண்டுயா.

அதே போன்று சமகம் கலந்து தமிழ் திரிஞ்ச இடங்களில்

மகரம்  சங்கர (சங்கராந்தி) இப்படியாக.

விழாக்களின் தன்மைகளையும் முறைகளையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.  பொங்கலோ பொங்கல்

மண்ணும் மொழியும்  மகத்துவம் பெற்று

தொற்றும் நோயும் தொலைந்து மறைந்து

மானுடரெல்லாம்  மாட்சிமை பொங்க.. சீரோடும் சிறப்போடு.

வாழ்க வாழ்கவென..பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்.
உழவர் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் விழ, பாடுபட்டு பலனை அனுபவிக்கும் நாள் பொங்கல் திருநாள்.


எனவே விவசாயிகள் முன்னேற்றம் அடைய, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது விவசாயத்தை காப்பாற்றவும் ‘ஏழைகளே இல்லாத நாடு எங்கள் தமிழ்நாடு’ என்ற லட்சியத்தை அடையவும், ஏழை மக்களின் வறுமை நீங்கிட இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். என் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது செய்தியில்

இந்த பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும்.   பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டு நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும். இந்த பொங்கல் திருநாளை பெற்றோர்களுடனும், குழந்தைகளுடனும் உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உறவாடி மகிழ்ந்து கொண்டாட வேண்டும்.
மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்று இல்லாத ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது போல தமிழகத்தின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் சில இடங்களில் விழா தலைவர்கள் சிலரால் கொண்டாடப்பட்டது இங்கு புகைப்படக் காட்சிகள் மூலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்