இஸ்ரோவின் புதிய தலைவராக எஸ்.சோம்நாத் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக எஸ்.சோம்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இவர் பிஎஸ்எல்வி திட்டத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராகத் தமிழகத்தின் சிவன் செயல்பட்டார். இவர் பதவிக் காலம் முடிந்ததையடுத்து தற்போது புதிய தலைவராக மூத்த இராக்கெட் விஞ்ஞானி எஸ்.சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோவின் தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சோம்நாத் அங்குள்ள டிகேஎம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பையும், பெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் சயின்ஸில் முதுகலை விண்வெளிப் படிப்பையும் முடித்தார்.

1985 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைந்தார்.  ஜூன் மாதம் 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை GSLV Mk-III திட்ட இயக்குநராகவும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள ‘ஸ்ட்ரக்சர்ஸ்’ நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பொறுப்புகள் வகித்தார்.

GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியில் சோம்நாத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள ‘Propulsion and Space Ordinance Entity’ துணை இயக்குநராகவும் பதவி வகித்தார்.

மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோம்நாத் சாதனைகள் பல உண்டு 


ஏவுகணை கட்டமைப்பு அமைப்புகள், கட்டமைப்பு இயக்கவியல், இயங்குமுறைகள், பைரோ அமைப்புகள் மற்றும் ஏவுகணை வாகன ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். உலகெங்கிலுமுள்ள மைக்ரோ சாட்லைட்டுகளுக்கு பிஎஸ்எல்வியை மிகவும் விரும்பக்கூடிய ஏவுகணையாக மாற்றிய இயந்திர ஒருங்கிணைப்பு வடிவமைப்புகளுக்கு சோம்நாத் முக்கியப் பங்காற்றியுள்ளார் ஆரம்பக் கட்டங்களில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்தவர், பின்னாளில் பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து, பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். உள்நாட்டு கிரையோஜெனிக் நிலைகளைக் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூன்று வெற்றிகரமான பயணங்களிலும், பிஎஸ்எல்வியின் பதினொரு வெற்றிகரமான பயணங்களிலும் சோம்நாத்தின் பங்கு அளப்பறியது.

சந்திரயான்-2 மிஷனில் தரையிறங்கும் இயந்திரங்களை உருவாக்கியது மற்றும் ஜிசாட்-9 மிஷனில் மின்சார உந்துவிசை அமைப்பை முதன்முறையாக வெற்றிகரமாகப் பறக்கவிட்டது போன்றவை சோம்நாத்தின் சாதனைகளில் முக்கியமானவை ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்