வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புக்களால் வாசனை பயிர்களின் மதிப்புக்கூட்டல்.
வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புக்களால் வாசனை பயிர்களின் மதிப்புக்கூட்டல்.
விளைபொருட்களின் சந்தைப்படுத்தல் திறனுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவும் விவசாயிகளின் வருவாயை மேலும் உயர்த்துவதற்காகவும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சகத்தின் வடகிழக்கு குழுவால் நிறுவப்பட்ட வடகிழக்கு சமுதாய வள மேலாண்மை சங்கம், அருணாச்சலப் பிரதேசம் சாங்லாங்கில் உள்ள சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் வாயிலாக வாசனை பயிர்களின் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டுள்ளது.
தங்களது விளைபொருட்களுக்கு சரியான விலையை பெறுவது தொலைதூரப் பகுதிகளில் வாழும் விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. உயர்தரத்தில் அவர்களது விளைபொருட்கள் இருந்தாலும், சந்தையில் அவற்றுக்கான தேவையும் இருந்தாலும், தரத்திற்கு ஏற்ற விலைகளை விவசாயிகள் பெரும்பாலும் பெறுவதில்லை.
இந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் வடகிழக்கு சமுதாய வள மேலாண்மை சங்கம், ஷில்லாங் மற்றும் சாங்லாங் சமுதாய வள மேலாண்மை சங்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புக்கள் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.
தனிப்பட்ட விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட வாசனை பயிர்கள் நியூ யன்மான் கிராமத்தில் உள்ள மத்திய பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் மையத்தில் சமுதாயம் சார்ந்த அமைப்புக்களால் பதப்படுத்தப்படுகின்றன. பின்னர், நம்டாஃபா குட்னஸ் என்ற பெயரில் இவை சந்தைகளில் விற்கப்படுகின்றன.
நிலையான தரம் மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை சமுதாயம் சார்ந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் உறுதி செய்கின்றனர். மாநிலத்திலுள்ள பல்வேறு மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளால் இப்பொருட்கள் விற்கப்படுகின்றன.
கருத்துகள்