பூகம்ப நிகழ்வுகளால் குஜராத்தின் கச் பகுதி நிலப்பரப்பில் மாற்றங்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

பூகம்ப நிகழ்வுகளால் குஜராத்தின் கச் பகுதி நிலப்பரப்பில் மாற்றங்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு


கடந்த 30,000 ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களால்,  குஜராத்தின் கட்ச் பகுதியில் கத்ரோல் மலைப் பகுதி நிலப்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது படிம ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இயற்கை பேரிடர்களில் பூகம்பங்களும் ஒன்று. இதன் சிக்கலான தன்மையை புரிந்து கொள்வதில் புவியலாளர்கள் இன்னும் போராடுகின்றனர்.  கச் பகுதி நில அதிர்வுகள் அதிக சிக்கலானவையாக உள்ளது.


கடந்த 2001ம் ஆண்டு புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப்பின் இங்கு ஏற்படும் நில அதிர்வுகளை கண்காணித்ததில்,  கச் பகுதியில் நில அதிர்வுக்கு சாத்தியமுள்ள பல பகுதிகள் கண்டறியப்பட்டன.

வதோதாராவில்  உள்ள பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகம் புவயியல் துறை விஞ்ஞானிகள், புவியியல் முறைகளை பயன்படுத்தி, கட்ச் பகுதியின் நில அதிர்வு நடவடிக்கைகளுக்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கின்றனர்.  முதலில் இந்த குழுவுக்கு பேராசிரியர் எல்.எஸ்.சம்யால் தலைமை தாங்கினார். பின்னர் பேராசிரியர் டி.எம்.மவுரியா தலைமை தாங்கினார். கடந்த 30,000 ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களால், இங்கு 21 கி.மீ தூரத்துக்கு பூமியின் மேற்பரப்பில் சிதைவு ஏற்பட்டுள்ளதை இவர்கள் கண்டுபிடித்தனர். நிலத்தை ஊடுருவி படம்பிடிக்கும் ரேடார், ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் போன்ற நவீன கருத்துக்களை பயன்படுத்தி  படிம மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இது பூகம்பத்துக்கு காரணமான குறைபாடுடன் கூடிய பகுதிகளின் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன. கத்ரோல் மலைப்பகுதியில் குறைபாடுடன் கூடிய பகுதிகள் கடந்த 30, 000 ஆண்டுகளில் அதிகளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


மேலும், பூகம்பத்தின் காரணமாக நிலப்பரப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூகம்பகுதியில் குணாவாரி ஆற்றின் பாதையும் மாறியுள்ளது. 


இந்த ஆய்வு கட்டுரை ‘இன்ஜினியரிங் ஜியாலஜி’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிதியுதவியின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்