வீரமங்கை இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்

வீரமங்கை


இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில்அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்  இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.  டுவிட்டரில் பிரதமர் தமிழ்மொழியில் பதிவிட்டிருப்பதாவது;  “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்.


அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.”வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி வேலு நாச்சியார், ஓ வி அழகேசன் மற்றும் சாவித்ரிபாய் பூலே-யின் பிறந்த நாள், நினைவு நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா மற்றும் ஜவுளிகள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டாக்டர் எல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


  சுதந்திரப் போரின் நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு, சிவகங்கைச் சமஸ்தானத்தின் அரசியான இராணி வேலு நாச்சியார், முன்னாள் மத்திய அமைச்சரான  ஓ வி அழகேசன் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.     டாக்டர் எல் முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில்;  நம் தேசத்தின் விடுதலைப் போருக்கு வித்திட்டு! தமிழ் மண்ணில் வீரம் விதைத்த வீரர்!  தமிழ் மண்ணின் பெருமையை தரணியெங்கும் உயர்த்திய

வீரபாண்டியகட்டபொம்மனின்   வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி வீர வணக்கம் செலுத்துவோம்  வீரமும்! விவேகமும் நிறைந்த வீரமங்கை! தாய் மண்ணுகாக வாள் ஏந்தி போரிட்டு ஆங்கிலேய படையை சிதறடித்து... வெற்றி கண்டு சரித்திரம் படைத்த பெண் போராளி! வேலுநாச்சியார் அவர்களின் வீர, தீர தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம் சுதந்திர போராட்ட தியாகி! தன்னலமற்ற மனிதராக வாழ்ந்து தேச முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த ஓ.வி.அழகேசன் அவர்களை நினைவுகொள்வோம். சாவித்ரிபாய் பூலே சமூக சீர்திருத்தவாதி, பெண்களுக்கு அதிகாரமளித்தலின் முன்னோடி மற்றும் இந்தியாவின் முதல் ஆசிரியையை அவரது பிறந்த நாளன்று நினைவு கூர்கிறேன்  என்று தெரிவித்துள்ளார். வீரமங்கை இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று   இரத்ததான முகாம் நடைபெற்றது.  முகாமில் இரத்த தான ஆர்வலர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், ஜாதி பேதமின்றி கலந்துகொண்ட அனைவருக்கும் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் சார்பாக இராணி.  சாஹிபா D.S.K ‌மதுராந்தகி நாச்சியார் நன்றி கூறினார் .வீரமங்கை இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  சிவகங்கை_சமஸ்தானம் மேதகு #ராணி சாஹிபா DSK மதுராந்தகி நாச்சியார் அவர்களை சிவகங்கை_திமுக நகர் செயலாளர்  C.M.துரை ஆனந்த்  மற்றும் திமுகவின் கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  இரத்த தான முகாம் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை  பிஜேபி முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்களும் சட்டமன்ற கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்  கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய மகளிர் தலைவருமான வானதி சீனிவாசன்  மற்றும் கட்சி நிர்வாகிகளும் சிவகங்கை சமஸ்தானத்தின்  இராணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மேலும் இராணி வேலு நாச்சியார் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் கரு.பெரியகருப்பன்  மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்