முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ .       


     சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்குமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழ் நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னர் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஜனவரி மாதம் 31 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் தற்போது இதை உறுதிப்படுத்தியது. 

இந் நிலையில், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் முயற்சி செய்தல், சிறார் நீதி சட்டத்தின் கீழ்  சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மாணவி மாஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னை விடுதி வார்டன் சித்ரவதை செய்தார் என்றும், உடல் மற்றும் மன உளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.


அதன் அடிப்படையில், அவர் கைதுசெய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விடுதி வார்டன் சகாயமேரிக்கு  ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. ஜாமீனில் வெளி வந்தவரை தி.மு.க வின் சார்பில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சிறை வாசலுக்கருகே சென்று சால்வை அணிவித்து வரவேற்றிருக்கிறார். இது ஒருபுறமிருக்க. நாம் சில விபரங்களைக் காண்போம்.


தஞ்சாவூர் மாணவி விவகாரத்தை தமிழகத்தின் காவல்துறை விசாரிக்கக் கூடாதெனவும்,

சி.பி.ஐ தான் விசாரிக்க வேண்டுமென்று சென்னை  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 


பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு சக்திகளுக்கு அரணாக இருக்கும் முயற்சிகளுக்கு இந்த தீர்ப்பு, சரியான நடவடிக்கை என்றாலும்

மற்றொரு பக்கம் பார்த்தால் தனது சொந்தக் கட்சிக்காரனும் – 25 ஆண்டுகால திமுக உறுப்பினருமான - மாணவியின் தந்தையை தற்காத்து அரவணைத்து அரண் செய்யத் தவறிய காரணத்தால் அவரை பாஜக இப்போது கையிலெடுத்துக் கொள்ளும் சூழல் உருவாகியது என்பதும் மறுக்க முடியாத உண்மை மற்றும் கவலைக்குரியது .மாணவி லாவண்யா விஷமருந்தி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது சம்மந்தமான குற்றப்புலனாய்வை தமிழக அரசின் காவல்துறையிடமிருந்து , மத்திய  புலனாய்வுத்துறைக்கு (CBI) மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளதைப்  பற்றி விமர்சிக்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.


விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லையே என்கிறார் .! ஆனால்  அவர் கூறும் தகவலில் உண்மை உண்டா என்பதை உற்றுநோக்குவதும் வேண்டும்.     அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர் பாளையத்தில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் - கனிமொழி இத் தம்பதிகளுடைய மகள் லாவண்யா (வயது 17). மைனர் பெண் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார் ஆகவே தாயில்லாமல் வளர்த்தவராவார். அடுத்து சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்ட நிலையில்

லாவண்யா தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தற்போது  மைக்கேல்பட்டியாக பெயர் கொண்ட அங்குள்ள  தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் படித்து வந்தார். 10 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார் பள்ளிக்கூடம் நடத்தும் விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த லாவண்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்.


பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற காணொளிக் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில்.  அடுத்த காணொளிக் காட்சி ஒன்றும் வெளியானது அதில்.,என் பெயர் லாவண்யா. என் அப்பா பெயர் முருகானந்தம், அம்மா பெயர் சரண்யா. நான் மைக்கேல்ல் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். எப்போழுதுமே நான் தான் முதல் ராங் எடுப்பேன். ஆனால், இந்த ஆண்டு குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் தாமதமாகத் தான் சென்றேன்.அதனால், எப்பொழுதுமே என்னை அங்குள்ள பணியாளர் (சிஸ்டர்) கணக்கு வழக்குப் பார்க்கக் கூறுவார்கள். நான் தாமதமாக தானே வந்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் பிறகு எழுதித்தருகிறேன் என சிஸ்டரிடம் கூறுவேன். ஆனால், அவர் அதைக் கேட்கமாட்டார். பரவாயில்லை நீ எழுதிகொடுத்துவிட்டு உன் வேலையை பார் என்று அப்படி இப்படி எதாவது கூறி என்னை எழுதவைத்துக்கொண்டே இருப்பார்கள்.


நான் சரியாக எழுதினாலும், தவறு தவறு என்று கூறி ஒரு கணக்குக்கே ஒருமணி நேரம் அமரவைத்துவிடுவார்கள். இதனால், நான் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. இதனால், நான் குறைவான மதிப்பெண் எடுத்துக்கொண்டே இருந்தேன். இப்படியே பொய்க்கொண்டிருந்தால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷத்தை குடித்துவிட்டேன்.


அந்த சிஸ்டர் பெயர் சகாய மேரி. பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் ஆரோக்கியமேரி. எல்லா வேலையையும் என்னையே செய்ய சொல்வார்கள். கேட் திறப்பதிலிருந்து மோட்டார் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் என்னை தான் செய்யச் சொல்வார். இது குறித்து வார்டனிடம் கேட்டால் நீ தான் பொறுப்பாக இருக்கிறாய் எனக் கூறுவார்.

பொங்கலுக்கு ஊருக்கு போகவேண்டும் என கேட்டதற்கு, நீ படிக்க வேண்டும் நீ இங்கேயே இரு என்று கூறி என்னை விடுதியிலேயே இருக்கவைத்து விட்டனர். பொங்கலுக்கு எனக்கு உடம்பு சரியில்லை என சொல்லியும் அனுப்பவில்லை. விஷம் குடித்தது குறித்து விடுதி வார்டனுக்கு தெரியாது’ என்றார். இந்த புதிய வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில்


மதம் மாற மறுத்த காரணத்தால் மாணவியை பள்ளி நிர்வாகம் கொடுமைப் படுத்தி வந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றசாட்டு தெரிவித்து வருகின்றனர், மேலும் மாணவி சாகும் முன்பு கொடுத்த காணொளிக் காட்சி வாக்கு மூலத்தில் மதம் மாற்றம் குறித்து குறிப்பிட்டு இருந்ததால் இந்த வழக்கு இந்தியா முழுவதும் பாஜக கொண்டு சோர்ந்து அது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச் சூழலில் சிலர் தாங்கள் ஊர் பொதுமக்கள் என கூறி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர், அதில் ஒற்றுமையாக உள்ள ஊரில் சிலர் மதம் மாற்றம் நடந்ததெனக் கூறுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர், பள்ளியிலும் சரி ஊரிலும் சரி யாரும் மதம் மாற கட்டாயப்படுத்தவில்லை என குறிப்பிட்டனர்.


அங்குதான் அதிர்ச்சி காத்து இருந்தது ஊர் பெயர் மைக்கேல் பட்டி என குறிப்பிட்டிருந்தனர், இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது 40 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டை என்று இருந்த அந்த ஊரின் பெயர் எப்படி மைக்கேல் பட்டி என மாறியது இதை மாற்றியது யார் என்று புதிதாக சமூக வலைத்தளதில் புகார் கிளம்பியது. அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற ஊரின் பெயரே நீக்கப்பட்டு அந்த ஊர் மக்கள் கொல்லப்பட்டதாக காட்சி இருக்கும் அதே பாணியில் மைக்கேல் பட்டி என்ற ஊர் எப்படி புதிதாக வந்தது என பலரும் கேள்வி எழுப்பினர். இப்போது ஊர் பெயர் மாற்றமும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில்.

 1930 ஆம் ஆண்டு முதல் மைக்கேல் பட்டி என்றுதான் அந்த ஊரின் பெயர் இருப்பதாக பள்ளிக்கு ஆதரவான தரப்பு கூறுகிறது இது குறித்தும் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளதால் அரியலூரை சேர்ந்த தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில் பல அதிரடியாக திருப்பங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிய நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத முக்கிய திருப்பமாக


சிறுமி தங்கியிருந்தது மைக்கேல் பட்டி தூய இருதய பள்ளியின் விடுதியில் (ஹாஸ்டலில்) இல்லை. 'புனித மைக்கேல் குழந்தைகள் இல்லம்' (St.Michael Home for Children ) எனும் அனாதை இல்லத்தில் அதன் உரிமமும் சென்ற வருடமே காலாவதியாகி, புதுப்பிக்கப்படாமல் இருக்கிறதென்றும்


பெற்றோர் இல்லாத குழந்தைகளையே 'அனாதை' இல்லத்தில் சேர்க்க வேண்டும். பெற்றோர் இருக்கும் சிறுமியை எப்படி இங்கே சேர்த்தது பள்ளி?  அந்த என்.ஜி.ஓ விடுதிக்கும் பெற்றோரிடம் கட்டணம் வாங்கியிருக்கிறது பள்ளி. நன்கொடையில் இயங்கும் என்.ஜி.ஓ, கட்டணம் எப்படி வசூலிக்கலாம்? என்ற வினாவும்.?

உரிமம் காலாவதியான பிறகும் எப்படி அதை இயக்கினார்கள் என்பதும் கத்தோலிக்க கிறித்தவ திருச்சபை யர்களின் 'ஆசிய செய்திகளின் ஒன்றிய' (UCA - Union of Catholic Asian News) வலைதளத்தில், 'கும்பகோணம் மறை மாவட்டத்தில்' இயங்கும் அனாதை இல்லங்களில் இந்த 'குழந்தைகளுக்கான புனித மைக்கேல் இல்லம்' (St Michael's Home for Children)' விவரங்கள் பகிரப்பட்டு அதை உறுதி செய்வதாகவும் ஒரு தகவல் உள்ளது.

பெற்றோர் இருந்தும், அவர்களை 'அனாதைகளாக' காட்டி, அந்த 'அனாதைக்' குழந்தைகளை மதமாற்றம் செய்ய நன்கொடை தரவும்" என்று வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவது இந்த இல்லங்களை நடத்துபவர்களின்  'அனாதை' இல்லத்திலும் இம்மாதிரி பல முறைகேடுகள், பாலியல் கொடுமைகள் நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது. தெரசா இல்லத்திலிருந்து குழந்தைகளை விற்றதால் அதன் FCRA உரிமத்தை புதுப்பிக்க மறுத்தது மத்திய அரசு உள்துறை. 'குழந்தைகளை விற்றவரை நிர்வாகத்திலிருந்து துரத்தி விட்டோம்' என்று கூறி உரிமத்தை புதுப்பித்துள்ளது தெரசா இல்லம். துரத்தப்பட்டவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணம் பெறும் FCRA உரிமத்தைக் காக்க கூட்டாளியை கூப்பில் ஏற்றிய தெரசா இல்லம் 2014 ஆம் ஆண்டு முதல் இம்மாதிரியான பல 'இல்லங்கள்' மூடப்பட்டுள்ளன  இந்த மைக்கேல்பட்டி அனாதை இல்லத்துக்கு ரோம் வாட்டிகனிலிருந்தும்  பணம் கொடுத்ததாகத் தகவல ஒன்று தெரிவிக்கிறது இல் தகவல் உண்மை தானா என்றும் பார்க்க வேண்டும். 

அடுத்ததாக சித்தி கொடுமைப்படுத்தியதாக அரியலூர் சைல்டுலைனுக்கு (Childline) போன் வந்த விவகாரத்திலும்  இந்த அரியலூர் சைல்டுலைன் என்பது ஒரு என்.ஜி.ஓ. அது அரசு அமைப்பில்லை. விரைவில் எது உண்மை எது பொய் என்ற நிலவரம் தெரியவரும் என்று மக்கள் எதிர்பார்க்கலாம்.  என்ற நிலையில் அதன் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லையே.என

- ஓய்வு பெற்ற முன்னால் நீதிபதி ஹரிபரந்தாமன் மாணவி லாவண்யா விஷமருந்தி  உயிர் இழந்தது சம்மந்தமான குற்றப்புலனாய்வை தமிழக காவல்துறையிடமிருந்து , மத்திய  புலனாய்வுத்துறைக்கு (CBI) மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ள நிலையில்  மாணவி லாவண்யா, தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி என்பதில் ஒரு பகுதி  தற்போது மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில். 8 ஆம் வகுப்பிலிருந்து ஐந்து ஆண்டுகள் அப்பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த மானவி ஜனவரி 9 ஆம் தேதியன்று மாலை அவர் விடுதியில் வாந்தி எடுத்ததற்கு ஆரம்ப சிகிச்சை தந்த விடுதி நிர்வாகத்தினர், மாணவியின் தந்தைக்குத் தகவல் அளித்து மாணவியை அழைத்துப் போகும்படி கூறியதாகவும்

ஜனவரி 10 ஆம் தேதியன்று லாவண்யாவை வீட்டிற்கு அழைத்து வந்த அவரது தந்தை வயிற்று வலிக்கான சிகிச்சையளித்துள்ளார்! பின்னர், ஜனவரி 15 ஆம் தேதியில் தான் தஞ்சாவூ அரசு  மருத்துவமனையில் உள் நோயாளியாக  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு மருத்துவர் சௌந்தர்யா, ஸ்கேன் (Scan) ரிப்போர்ட்டை பார்த்து, அம்மாணவி பூச்சி மருந்து உட்கொண்டதால் தான் நோயுற்றிருக்கிறார் என்பதைக் கண்டறிந்ததாகவும் அம்மாணவி, 9 ஆம் தேதி பூச்சி மருந்து உட்கொண்டதை, விடுதியில் எவருக்கும் சொல்லவில்லை. வீட்டிலும் தெரிவிக்கவில்லை. தனக்கான துன்பத்தை அவர் இயல்பாக வீட்டில் சொல்லும் சூழல் இல்லாததையே இது புலப்படுத்துகிறதெனவு ம் கருத்து உள்ளது.

இது தற்கொலை முயற்சி என்பதால், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு அரசு மருத்துவமனை தகவலளித்தது.

16 ஆம் தேதி காவல்துறை மாணவியின் வாக்குமூலத்தைப் பெற்றது. அவ்வாக்குமூலம்  வீடியோ காட்சியிலும் பதிவு செய்யப்பட்டது. அதே தினம் மாலை 4.25 முதல் 4.50 வரை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அம்மாணவியிடம் வாக்குமூலத்தைப் பெற்றார். அந்த வாக்குமூலமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

அதில், விடுதிக்காப்பாளர் மேல் புகார் கூறியிருந்தார் மாணவி.  விடுதிக்காப்பாளரின் பணியை எல்லாம் தன் தலையில் சுமத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார் மாணவி. இதனால் படிக்க முடியாமல் மன உளைச்சல்  ஏற்பட்டது என்று கூறியிருந்தார். எனவே, விடுதிக்காப்பாளர் கைது செய்யப்பட்டு  18.ஆம் தேதியன்று  நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி, ஜனவரி 19 ஆம் தேதி   மாலை 3.30 மணிக்கு லாவண்யா இறந்தார். 20 ஆம் தேதி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதில்,  பள்ளியின் தாளாளர்  அம்மாணவியின் பெற்றோரிடம், அம்மாணவியை கிறித்துவ  மதத்திற்கு மாறச் சொல்லி கூறியதாக  குற்றம் சுமத்தியது.

மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கு தாக்கல் செய்ததில், புலனாய்வு விசாரணையை தமிழக அரசின் CBCID- க்கோ  அல்லது  காவல்துறை இயக்குனரின் (DGP) மேற்பார்வையில் வேறொரு சுயேச்சையான அமைப்புக்கோ மாற்ற வேண்டுமென்று கேட்டார்.அந்த வழக்கை, சிறப்பு நிகழ்வாகக் கருதி, அன்று மாலையே பல நெருக்கடிகளுக்கு இடையில் முக்கிய வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில்

நீதிபதி  G.R. சுவாமிநாதன்  21.01.2022 தேதி வழங்கிய உத்தரவில்  மாணவியை வீடியோ எடுத்த நபரை   துன்புறுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு தடை விதிப்பதாகவும்   மேலும், மாணவியின் தற்கொலை சம்மந்தமான சூழல்களை ஆய்வு செய்வதில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டுமென்றும், 

28.01.2022 அன்று  மாணவியின் தந்தையின் வழக்குரைஞர், தமிழக அரசின் காவல்துறையின் பேரில் நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றும்படியும் வாதிட்டார்.

புலனாய்வு சரியான திசையில் செல்கிறது என்றும்,  தற்போது காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக (DSP) உள்ள  Ms. பிருந்தா  புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்  என்றும்  அரசு வழக்குரைஞர்  வாதிட்டார்.  தடயவியல் அறிக்கை  கிடைக்க மேலும் 2 வாரங்கள் ஆகும் என்றும், வீடியோ எடுத்த முத்துவேலும்  மற்றும் மாணவியின் தந்தையும்  புலனாய்வுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும்  வாதிட்டார்.

மாணவியுடன்  வகுப்பில் படித்தவர்களிடமும், மைக்கல்பட்டி என தற்போது கூறப்படும் பகுதியில் வசிப்பவர்களிடமும்   விசாரித்து புலனாய்வு அதிகாரி வாக்குமூலம் பெற்றுள்ளார் என்றும்,  கிறித்துவ மதத்திற்கு மாறுமாறு எவரையும்  பள்ளி கோரவில்லை என்று அவர்கள் கூறியுள்ளதாகவும் வாதிட்டார். புலனாய்வு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும்,  புலனாய்வு அனைத்துக் கோணங்களிலும் மேற்கொள்ளப்படுவதாகவும் வாதிட்டார். எனவே, மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை என்றும்   வாதிட்டார்.

பள்ளியின் வழக்குரைஞர் மாணவியின் அம்மா 8 ஆண்டுகளுக்கு முன்னர்  இறந்துவிட்டதாகவும், மாணவியின் தந்தை மறுமணம் செய்துகொண்டதாகவும், மாணவியின் சித்தி மாணவியை கொடுமையாக நடத்துவதாகவும் வாதாடினார். மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்னர்  குழந்தை உதவி மையத்திற்கு அம்மாணவி புகார் அளித்ததாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதை விசாரித்ததாகவும் வாதிட்டார். வாத பிரதிவாதங்கள் முடிந்த பிறகு ஜனவரி 31 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், புலனாய்வை மத்திய புலனாய்விற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவிற்கு அடிப்படையாக இரண்டு காரணங்களை கூறியுள்ளதாக முன்னால் நீதிபதி ஹரிபரந்தாமன் கருதுவதாகவும்.

ஒன்று, மதமாற்றத்தில் பள்ளி ஈடுபட்டது  என்ற குற்றச்சாட்டு  பூர்வாங்க விசாரணையில் தெரியவரவில்லை என்று  தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறினார் என்பது. மற்றொன்று, 24.01.2022 தேதி ஒரு தமிழ் பத்திரிக்கையில் வெளியான கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் நேர்காணலிலும் இதே கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது.

மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 23 – இல், அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் (Rare and exceptional circumstances) மட்டுமே மாநில காவல்துறை செய்யும் புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்புக்கு  மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை  சுட்டிக்காட்டும் நிலையில்.

குற்றம் சம்மந்தமான புலன் விசாரணை செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கே உண்டு. இது அரசமைப்புச்சட்டம் வழங்கும் உரிமை. மாநில அரசின் அனுமதியின்றி மத்திய புலனாய்வு அமைப்பு அந்த  மாநிலத்தில்  குற்ற புலனாய்வு செய்ய இயலாது. ஆனால், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம், அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாநில காவல்துறை செய்யும் புலனாய்வை  மத்திய புலனாய்வு அமைப்புக்கு  மாற்றலாம்.

மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 14 – ல், உச்ச நீதிமன்றம் கீழ்கண்ட 5 காரணங்களுக்காக மட்டுமே  மாநில காவல்துறை செய்யும் புலனாய்வை  மத்திய புலனாய்வு அமைப்புக்கு  மாற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது அவை வருமாறு :

புலனாய்வில் நம்பிக்கை உண்டாக்குவதற்கு.

நியாயமான, நேர்மையான மற்றும் முழுமையான விசாரணைக்காக.

மாநில காவல்துறை புலனாய்வில் நம்பக தன்மை இல்லாமல் போகும்போது.

அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகார பீடம் குற்ற செயலில் ஈடுபட்டு இருத்தல்.

புலனாய்வு கறைபடிந்ததாகவோ அல்லது பாரபட்சமாகவோ இருத்தல்.

எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி  சுட்டிக்காட்டியுள்ள படியே, இந்த வழக்கின் புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியது சரியல்ல  என்று ஓய்வு பெற்ற முன்னால் நீதிபதி ஹரிபரந்தாமன் கருதுவதாகவும்.

இத்தருணத்தில்,  அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலை என்பதை விளக்குவதற்கு, சமீபத்தில் மேற்கு வங்க தேர்தல் முடிந்த நிலையில் அங்கு நடந்த வன்முறையை நிகழ்த்தியவர்கள் மம்தாவின் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு, மத்திய புலனாய்வுக்கு உத்தரவிட்டது என்பதை சுட்டிக்காட்டலாம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி   பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலை பரிசீலிக்கையில், அது, இந்த சம்பவத்தை வைத்து மத மாற்றம் நடப்பதாக கூறி, தமிழகம் முழுவதும் பாஜக போராட்டங்கள் நடத்தியத்திற்கான எதிர்வினையே.  அந்த நேர்காணலிலும், அனைத்தும் விசாரணையில் பின்னர் தெளிவாகும் என்று அமைச்சர் கூறுகிறார்.எனவே, இந்த நேர்காணலின் அடிப்படையில், மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றம் செய்தது சரியல்ல என்பது ஓய்வு பெற்ற முன்னால்  நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து

அமைச்சரோ   அல்லது அமைச்சரின் உறவினரோ குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பதாக பாஜக உட்பட எவரும் புகார் கூறவில்லை. அப்படி புகார் இருக்குமானால், மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,  மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றலாம்.

உதாரணத்திற்கு, விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர்  மிஸ்ராவின் மகன் காரை ஓட்டி விவசாயிகளை கொலை செய்தது சம்மந்தமான வழக்கில், சம்மந்தப்பட்ட விவசாயின் குடும்பத்தினர் புலனாய்வை மாற்றச் சொல்லி கோரினால், அந்த கோரிக்கையை ஏற்று புலனாய்வை மாற்றலாம்.

அரசின் உயர் அதிகாரிகள், குறிப்பாக காவல்துறையினர் குற்ற செயலில் ஈடுபட்டிருந்தாலும், மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றலாம்.

உதாரணத்திற்கு, தூத்துக்குடி துப்பாக்கிசூடு  சம்மந்தமான புலன் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றியது. காரணம், துப்பாக்கி சூட்டை நடத்திய குற்றச்செயலை புரிந்தவர்கள் காவலர்கள். மேலும், அதில் 14 பேர்கள் உயிர் இழந்தனர்.

எனக்கு தெரிந்தவரை, எந்த  தற்கொலை சம்மந்தமான வழக்கின் புலனாய்வையும் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிய முன் உதாரணம் ஏதும் இல்லை என ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் சுட்டிக்காட்டும் நிலையில்

மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பைக் காரணம்காட்டி, மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றுவது சரியல்ல. வாதத்திற்கு, மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்போ அல்லது வேறு செயலோ ஏற்புடையதல்ல என்று நீதிமன்றம் கருத்துமானால், CBCID – க்கு மாற்றலாம்.உதாரணத்திற்கு, ராஜாகண்ணு   காவல் நிலையத்தில் மரணமடைந்த வழக்கில் (ஜெய் பீம் திரைப்படம்), சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு புலனாய்வை சம்மந்தப்பட்ட காவல்நிலையம் செய்வதற்கு பதிலாக CBCID – க்கு  மாற்றி உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வழக்கின் முக்கியத்துவம் கருதி, புலனாய்வை சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து இன்ஸ்பெக்டருக்கும், பின்னர்    இன்ஸ்பெக்டரிடமிருந்து  துணை காவல் கண்காணிப்பாளரிடமும் மாற்றி உள்ளதை பதிவு செய்கிறது தீர்ப்பு. இப்படி ஒரு உயர் அதிகாரியிடமிருந்து அவரைவிட உயர்ந்த பதவி வகிக்கும்  அதிகாரிகளுக்கு புலனாய்வு செய்யும் வகையில் சென்று கொண்டிருக்கும் ஒரு வழக்கை, – புலனாய்வு தொடங்கிய 10 நாட்களுக்குள் – மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் பேரில் நம்பிக்கை இழப்பதற்கு  சரியான முகாந்திரங்கள் இல்லை என ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவிக்கிறார்.

மேற்சொன்ன 2 காரணங்கள் – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அமைச்சரின் நேர்காணல் – புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றுவதற்கு உகந்த காரணங்கள் அல்ல.

மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிய தீர்ப்பில், நீதிபதி அவர்கள் அப்பள்ளியில் மதமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுவது சரியல்ல. மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 22- இல், பள்ளி இருக்கும் ஊரின் பெயர் மைக்கேல்பட்டி என்று இருப்பதை ஆய்வு செய்கிறார். இந்த ஊரின் பெயர் மைக்கேல்பட்டி  என்று அழைக்கப்படுவதற்கு முன்னர் வேறு பெயரில் அழைக்கப்பட்டிருக்கும் என்கிறார் நீதிபதி. இந்த ஊரின் பெயரே மதமாற்றத்திற்கான முயற்சி நடைபெறலாம் என்பதை ஊகிக்க முடிகிறது என்கிறார். இந்த ஊகம்  சரியாகவோ இருக்கலாம் தவறாகவோ இருக்கலாம் என்கிறார்.

மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 17-இல்,  புனித பைபிளை  (Holy Bible) சுட்டிக்காட்டி, அதில் மத பிரசாரம் செய்வது கிறித்துவர்களின் கடமை என்று கூறியிருப்பதாக சொல்லி மதமாற்றத்திற்கான முயற்சி பள்ளியில் நடைபெற வாய்ப்புள்ளது என்கிறார்.

மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 18-இல், ‘சீரியஸ் மென்’ என்ற திரைப்படத்தில், கிறித்துவ மதத்திற்கு மாற்றுவது சம்மந்தமான உரையாடல் நிகழ்வதாக கூறி, அந்த உரையாடலை  தீர்ப்பின் பத்தி 18-இல் பதிவு செய்கிறார்.

மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 19-இல்,  திரைப்பட இயக்குனர் பாலசந்தர் இயக்கிய ‘கல்யாண அகதிகள்’ என்ற திரைப்படம் பற்றிய விவரம் தரப்படுகிறது. அதில், அமுலு என்ற இந்து பெண், ராபர்ட் என்ற கிறித்துவ வாலிபரிடம் காதல் கொள்வதாகவும், அவள் கிறித்துவ மதத்திற்கு மாறி  பெயரை எமிலி என்று வைத்துக்கொண்டால் மருமகளாக ஏற்றுக்கொள்வதாக ராபர்டின் பெற்றோர் கூறுவதாகவும், அதை அமுலு மறுத்து,மதம் மாற சொல்லி கேட்பதும் வரதட்சணையின் ஒரு வடிவம்  இல்லையா என்று  அமுலு கேட்பதாக, தீர்ப்பின் பத்தி 19 கூறுகிறது. மேலும், ராபர்ட் அமுலு பிறந்த மாதத்திற்க்கு விசுவாசமாக இருந்து காதலை முறித்துக் கொண்டு வெளியேறினாள் என்று தீர்ப்பின் பத்தி 19 முடிவடைகிறது.

மேற்சொன்ன தீர்ப்பின் பத்திகள் 17,18 மற்றும் 19, புலனாய்வை  மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்ற வேண்டுமா வேண்டாமா என்பதற்கு எந்த வகையில் உதவும் என்று புரியவில்லை.

ஏற்கெனவே, வீடியோவை எடுத்த வி.ஹெச்.பி.உறுப்பினர் முத்துவேலை காவல்துறை துன்புறுத்தக்கூடாது என்றதோடு மட்டுமல்லாமல், அவர் வீடியோவை ஏன் எடுத்தார் என்றெல்லாம் புலனாய்வில்  விசாரிக்க வேண்டாம் என்று  நீதிபதி தீர்ப்பில் கூறுவது விந்தையாக உள்ளது.

புலனாய்வை அனைத்து கோணங்களிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விவாதத்திற்கு எதிரானது நீதிபதியின் இந்த கூற்று.

மேலும், முத்துவேல் எடுத்த வீடியோ உண்மையானது மற்றும் நம்பகத்தன்மை உடையது (authenticity) என்று தீர்ப்பின் பல இடங்களில் நீதிபதி அந்த வீடியோவை பற்றி கூறுகிறார். வீடியோவானது, ஆய்வுக்காக பரிசோதனைக்கு செல்போன் மற்றும் சிம் கார்டுடன் அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின்னரே, அதன் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றி தெரிய வருகிறது.

மாணவியின் தாயார் ஏற்கெனவே இறந்து விட்டார். மாணவியின் பாட்டி, தாத்தாவிற்கு  காவல்துறை சம்மன் அனுப்பி  விசாரிப்பதைகூட மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 28 – இல் ஆட்சேபிக்கிறார்  நீதிபதி.

மாணவி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ, ஏன் உடனடியாக காவல்துறையிடம்  முத்துவேலால் ஒப்படைக்கபடவில்லை என்பதெல்லாம் விசாரிக்கக்கூடாது என்பதுதான் நீதிபதி தீர்ப்பின் சாரம்.

மாணவி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ, மாணவி இறந்த மறுநாள்தான் வெளியிடப்பட்டது என்பதும், அதுவும் இந்துமத பற்றாளர்களுக்கு தேவையான முறையில் வெட்டப்பட்டு  வெளியிடப்பட்டது என்பதும் புலனாய்வு விசாரணை வளையத்திற்குள்  வராது என்பதுதான் நீதிபதியின் தீர்ப்பின் சாரம்.எல்லாவற்றிக்கும் மேலாக, புலனாய்வு தொடங்கப்பட்டு, மிகவும் ஆரம்ப நிலையில் உள்ளது. அதாவது, 16.01.2022 அன்றுதான் காவல்துறை குற்ற வழக்கை பதிவு செய்து புலன்  விசாரணையை துவக்குகிறது. புலன் விசாரணையில் மாணவியுடன் படித்தவர்கள் மற்றும் பள்ளி இருக்கும் கிராமத்தில் வசிப்பவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் வரவழைத்து பரிசீலனைக்கூட செய்யவில்லை எனவும் தகவல்கள் உள்ளன. வழக்குகளை மின்னல் வேகத்தில் எடுத்துக் கொண்ட விதம், வழக்கை அணுகிய முறை, வழங்கிய தீர்ப்புகளில் பல கேள்விகளையும், ஐயத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்திய நிலையில் . விவாதங்கள் முற்றுப் பெற்று தற்போது உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்ட நிலையில் தற்போது முதல் தகவல் அறிக்கை விபரம் கிடைத்துள்ளன. விசாரணை துரிதமான முறையில் துவங்கியது.             


                    திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது :-

"மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்

கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது

ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங்

காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே"        என பாடல்பெற்ற ஸ்தலம் தான் திருக்காட்டுப்பள்ளி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன